மதுரை அருகே மூத்த குடிமக்கள் நல்வாழ்வு மையம்; சோக்கோ அறக்கட்டளை துவங்கியது

This entry is part [part not set] of 33 in the series 20110424_Issue

சோக்கோ அறக்கட்டளை


மதுரை அருகே மூத்த குடிமக்கள் நல்வாழ்வு மையம்; சோக்கோ அறக்கட்டளை துவங்கியது

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை தாலுகா, மாங்குடி
கிராமம், களத்தூர் விலக்கு என்ற இடத்தில் 45 ஏக்கர்
பரப்பளவில் அமைந்துள்ள தனது தோட்டத்தில்
தமிழகத்தின் முன்னாள் காவல்துறை தலைமை
இயக்குநரும், சோக்கோ அறக்கட்டளையின்
ஆலோசனைக்குழு தலைவருமான திரு.வி.ஆர்.லட்சுமி
நாராயணன் பெயரில் மூத்த குடிமக்கள் நல்வாழ்வு
மையம் ஒன்றை சோக்கோ அறக்கட்டளை துவ‌ங்கி
உள்ளது.

இம்மையம் சிவகங்கை – மானாமதுரை
நெடுஞ்சாலையில் சுந்தர நடப்பு என்ற இடத்திலிருந்து
பெரிய கோட்டை செல்லும் பாதையில் 4வது கிலோ
மீட்டரில் அமைந்துள்ளது. இது அந்நிய நிதியுதவி
எதுவுமின்றி ஈகை குணம் படைத்த பல்வேறு
நண்பர்களின் சிறு சிறு உதவிகளால் இன்று சிறிய
அளவில் பரிணமித்துள்ளது.

18 படுக்கைகள் கொண்ட இந்த மையத்தில் ஆதரவற்ற மூத்த குடிமக்களை
சேர்த்துக் கொள்ள திட்டமிட்டுள்ளோம். இந்த மையம்
எளிமையானது, மிகவும் அத்தியாவசியமான
அடிப்படை வசதிகளை மாத்திரம் கொண்டது. ஜாதி,
மத, இனப்பாகுபாடின்றி எல்லோரையும் உள்ளடக்கிய
மையமாக உருவாக உள்ளது. இம்மையத்தில்
கீழ்கண்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

1. சுதந்திர போராட்டத் தியாகிகளின் வாரிசுகள்
2. சமூக மாற்றத்திற்காக பல்வேறு இயக்கங்களில் முழு
நேரப் பணியாளர்களாக பணியாற்றி தற்சமயம்
தனிமையில் வாழ்பவர்கள்.
3. சமூக செயல்பாட்டுக் குழுக்களில் பணியாற்றிய
செயல்பாட்டாளர்கள்.

வி.ஆர்.லட்சுமி நாராயணன் மூத்த குடிமக்கள் நல்வாழ்வு மையத்தில் சேர
விரும்புவர்கள் தாங்கள் நேரிடையாகவோ அல்லது தங்கள் அமைப்பின்
பரிந்துரையுடனோ விண்ணப்பிக்கலாம். ஏழு பேர் அடங்கிய குழு ஒன்று
விண்ணப்பங்களை பரிசிலனை செய்து பயனாளிகளை தேர்வு செய்யும்.
இத்துடன் இணைத்துள்ள விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து கீழ்கண்ட
முகவரிக்கு அனுப்பி வைக்கும்படி சோக்கோ அறக்கட்டளை அறங்காவலர்
கு.ஓ.மிருணாளினி தெரிவிக்கிறார். இத்துட‌ன் அதற்கான விண்ணப்பபடிவம்
படவடிவக் கோப்பாக (பிடிஎஃப்)இணைக்கப்பட்டுள்ளது.

பேரா.நாஸ்னின் பரக்கத்அலி கான்
அறங்காவலர்சோக்கோ அறக்கட்டளை
நீதிபதி பகவதி பவன்,
143, ஏரிக்கரைச் சாலை,
கே.கே.நகர், மதுரை – 625 020.
கு.ஓ.மிருணாளினி
அறங்காவல
சோக்கோ அறக்கட்டளை

Series Navigation

சோக்கோ அறக்கட்டளை

சோக்கோ அறக்கட்டளை