மதில்மேல் உறவுகள்

This entry is part [part not set] of 22 in the series 20050819_Issue

மங்கை பசுபதி


உடைமை உணர்வுள்ள
உறவுகள் எல்லாம் –
அத்துமீறலுக்கு மட்டுமல்ல
‘எனக்குத் தேவையா இது ? ‘என்ற
வெறுப்பின் உட்கசப்புக்கு
இட்டுச் செல்லவே
வெறியோடு காத்திருக்கின்றன.
மனிதர்க்கு மனிதர்காணும்
உறவின் வெற்றி —
அன்பைவிடவும்
ஒட்டியும் ஒட்டாமலும்
விலகியும் விலகாமலும்
பக்குவமாய் நீடிப்பதில்தான்
?ீவிக்கிறது, இப்போது….
அறியாமல் தெரியாமல்-நாம்
அடுத்தவர் வட்டத்துக்குள்
காலெடுத்து வைத்துவிட்டால்
இருக்கிறது கடும்தண்டனை;
அந்த மைக்ரோநிமிடமே
அவர்களுக்கு நாமும்
நமக்கே நாமும்கூட
அந்நியம் ஆக்கப்படுவோம்.
‘உள்ளன்பு ‘ என்பதை
அகராதிக்கே மீண்டும்
அனுப்பி விடுவோம்.
‘பசப்பல் ‘
என்னும் வார்த்தைக்கே
புதுமகுடம் சூட்டுவோம்.
—-

pasu2tamil@yahoo.com

Series Navigation

மங்கை பசுபதி

மங்கை பசுபதி