மண்
புஷ்பா கிறிஸ்ரி

தாயே நீ
சிரிக்கிறாய்.
மிதித்து மிதித்து
யார் உன்னை
அணைத்தார்கள் ?
ஒட்டிக் கொண்ட உன்னைத்
தட்டிக் கொண்டு எழுகிறேன்
மீண்டும் ஒருமுறை உன்னைத்
தொட்டுக் கொள்கிறேன்
என்றாலும், மிதிக்கிறேன்.
தாயே என்னை
மன்னிக்கும் சக்தி
இம்மண்ணில் உனக்குத்
தான் அதிகம் உள்ளது
எத்தனை தடவைகள் மிதிக்கிறேன்
மகிழ்ச்சியுடன் தானே மன்னிக்கிறாய்
மனிதர்கள் மட்டுமா ?
பறவைகள், மிருகங்கள்,
நீர், வானம், காற்று,, ஒளியென்று
அனைத்தின் மிதியலிலும்,
மெளனமாய் ஒரு புன்னகை…
புன்னகைக்க எப்படி
உன்னால் முடிகிறது ?
நீ மண் என்பதனால்
மனிதனின் நேசத்தை
நீ மதிப்பதனால்
மாண்புமிகு தேசத்தை தந்த
தாயாய் நீ
என்றும் எம் நினைவில்
நீங்காமல் நிற்பாய்.
***
புஷ்பா கிறிஸ்ரி
pushpa_christy@yahoo.com