பூர்வீகம் இந்திரலோகம், பேரு தேவகுமாரன்

This entry is part [part not set] of 36 in the series 20030223_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


நான் ஒரு தேவகுமாரன்னு சொன்னா, கண்களில் ஆச்சரியத்தைத் தேக்கி, வியப்பவர்ன்னா, உங்களுக்கு இது ஒரு தகவல். அப்படி இல்லை, வார மாத இதழ்கள் வாங்கி, சாப்பிடும்போதுகூட விடாமல் பக்கங்களைப் புரட்டி,சிறுகதை தொடர்கதையில் வரும் ஒரு சுரேஷ ‘க்கோ அல்லது ஒரு நந்தினிக்கோ ‘உச்சு ‘ கொட்டும் பேர்வழின்னா உங்களுக்கு இது ஒரு சுவாரஸ்யமான சிறுகதை.

என்னோட இந்தக் கதையை இப்படி விஸ்தாராமாச் சொல்ல நான் ஆசைப்பட்டதற்குக் காரணம் இருக்கு. அசோகன் என்ற நாமகரணத்தோட, பூலோகத்துல பிறந்து, இளமைப் பிராயத்தை மதுரைக் கருகே, எட்டுப்பட்டிக் கிராமங்கள்லே ஒரு பட்டியில போக்கிட்டு, வாலிபப் பிராயத்தைச் சென்னைப் பட்டிணத்துல கழிக்கணும்னு பிரியப்பட்டுவந்த எனக்கு, இப்போதைக்குச் சினிமாக் கனவுகளோடதான் ஜ ‘வனம். கடந்த மூணுவருஷமா, கோடம்பாக்கம் மேம்பாலம் அருகே மாடசாமி நாடார் தெரு 5வது குறுக்குவீதி ‘ சினிம ‘ புகழ் ‘ தேவகியம்மா ‘ வீட்டுப் புறாக்கூண்டுப் போர்ஷனில்தான் ஜாகை. கையில் காசு இருக்கும்போது சைவமாயிருந்தால் சரவணா பவன், அசைவமாயிருந்தா ‘அம்மா ‘ . மற்ற நேரங்கள்ல போஜனம்னு சொன்னா, நாயர்கடை மசால் வடையும் டாயும்தான். குடியிருக்கின்ற போர்ஷன்ல, என்னோட பங்காளிகள் குரூப் டான்சர் குமாரும், கிடாரிஸ்ட் டேனியலும். எங்களுக்குள் பயோரியாப் பற்பொடியிலிருந்து பத்தமடைப் பாய்வரை பங்கு போட்டுக்கொள்ளும் அன்யோன்யம். எனக்கு மட்டும் என்னோட மானிடப் பிறவியின் விதியைப் பற்றிய அறிவு இருந்தாலும், குமார், எங்கள் மூவருக்குமே இப்போது சனி திசைங்கறான். குமாரோட கடவுள்கள் அடிக்கடி இடம் மாறுவார்கள். கடந்த சில மாதங்களாகப் பண்ணாரி அம்மன் படத்தில் வேலை செய்வதால் பண்ணாரி அம்மன் பக்தன். அதற்கு முன்னே நாகாத்தம்மன் என்று ஞாபகம். சரி அதை விடுங்க, என்ன சொன்னேன். என்னோட மானிடப் பிறவின்னு சொன்னேனில்லையா ? ஆமாங்க அந்த மானிடப் பிறவிக்கான சாபத்தைத்தான் அனுபவிக்கிறேன். அம்மாவின் சிறுவாட்டுப் பணத்திலிருந்து, முப்பாட்டன் சொத்தாக இருந்த கரிசல் காடுவரை எல்லாவற்றையும் விற்றாச்சி, ஒரு நிமிசம் படம் முடியும் தறுவாயில் போடுகின்ற எஞ்சிய ரீலில் கூட என் பேரு வந்தாப் போதும். நேற்றுக்கூடப் பாருங்க ‘….. ப்…பய, அந்தத் தயாரிப்பாளர் எம்மார் இருக்கானே, கதை கேக்கறன் வாடான்னு சொல்லிட்டு, கார்ல ஏத்திக்கிணு, கூட இருந்த நடிகையோட சாமுத்ரிகா லட்சணத்தை அலசறான் சார்! ‘ போன ஜென்மத்துலவேணா நான் தப்பு செஞ்சிருக்கலாம். இந்த ஜென்மத்துல மெய், வாய், கண், மூக்கு செவின்னு சொல்றாங்களே, அதுகளாலே, போன ஜனவரி மாசம் எட்டாந்தேதி வரை- ,அவளைப் பார்க்கின்றவரைக்கும் – எந்தத் தப்பும் செஞ்சதில்லை. ஆமாம், அவளோட மனசை நானும், என்னோட மனசை அவளும்னு சொந்தம் கொண்டாடிக்கிட்டது அந்தத் தேதியில்தான்.

சொன்னா நம்பமாட்டிங்க. அவளைக் ‘காளிதாசனின் சகுந்தலை ‘, கம்பனின் சீதை ‘ ன்னு செ ‘ல்லலாம். என்ன கொஞ்சம் இலக்கிய நெடியிருக்கும். சத்தியமாச் சொல்றங்க. இந்தப் பூலோகத்திலுள்ள அவனி ஐம்பத்தாறு தேசங்களிலும் நீங்க அப்படியொரு கன்னிகையைப் பார்த்திருக்க முடியாது. அவ நிறம், சீன தேசத்துத் ‘தக்காளி சாஸ் ‘ ன்ன ‘, உடம்பு ‘பிரெஞ்சு சீஸ் ‘ங்க. கண்கள் ‘இத்தாலிய கிரேப் ‘ன்ன ‘, உதடுகள் ‘ஸ்பானிஷ் ஆரஞ்சு ‘ங்க, அவ பேசக் கேட்கணுமே, பிஸ்மில்லாகானோட ஷெனாய் கெட்டுது போங்க. அன்றைக்கு டைரக்டர் வாஷனோட நான்காவது படத்திற்குப் பூஜைங்க. அவரோட, பேடும் வசனுமுமா அலைகிற உதவி இயக்குனர்களில் ந ‘னும் ஒருவன். என்னோட அன்றைய டூட்டி, படத்தின் இரண்டாவது நாயகி சியாமளாவிற்கு காட்சியை விளக்கி, வசனத்தைச் சொல்லணும்.

கதாநாயகன், ரிஃப்ளெக்டர், காமிரா என எல்லாம் தயார் நிலையில். சியாமளாவைக் காணோம். எங்கள் டைரக்டர் கோபக்காரர். சத்தம் போடறார். ‘எங்கேடா போயிட்டா அவ ‘ என்பதைத் தெ ‘டர்ந்து அவர் கூறிய பச்சை வார்த்தைகளை இங்கே சொல்லக்கூடாது. என்னோட இப்போதைய வேலை சியாமளாவை இழுத்துவந்து காமிரா முன்னே நிறுத்தணும் .. யாரோசொன்னாங்கண்ணு மேக்கப் அறைக்கு ஓடறேன். கதவைத் திறந்தவன் திகைச்சு நிக்கறேன் இல்லை கேக்கறேன் . சியாமளா பக்கவாட்டில் நின்று கலங்கிய கண்களைக் கைக்குடையால் ஒத்திக்கொள்ளப் பக்கத்தில் சினிமாஸ்கோப் உடம்புடன் அவள் அம்மா.

‘ என்னமோ நீ செய்யறது கொஞ்சங்கூட நல்லாயில்லை, ‘

‘ என்னை வற்புறுத்தாதே, விட்டுடும்மா ‘

‘ இந்தப் பணம் புகழ் எல்ல ‘மே ஒரு வகைப் போதைடி. அதை எப்படி திடுதிப்புன்னு விடமுடியும். இந்த வாழ்க்கை தொடர்ந்து நமக்கு வேணும்ணாகெ ‘ஞ்சம் அப்படி இப்படின்னு அட்ஜஸ்ட் பண்ணித்தான் போகணும். இது கூட ரெண்டு வருஷமோ மூணு வருஷமே ‘ ? உன்னைத் தீ மிதிச்சுட்டு உள்ளே நுழைய எத்தனை பேரு வரிசையா காத்திருக்காளுவ தெரியுமா ? ‘

‘என்னம்மா இது வெங்காய வாழ்க்கை. எப்ப எவன் கூப்பிடுவாங்கற பய வாழ்க்கை. வா ‘ மறுபடியும் நெல்லூருக்கே போயிடலாம். மிளகாய் பஜ்ஜி சாப்பிட்டுக்கிட்டு நாலுபேருக்கு டியூஷன் சொல்லிக் கொடுக்கலாம் ‘;

‘அந்தக்காசு உன்னே ‘ட குடிகார அப்பனுக்கே பத்தாது. டைரக்டர் வாஷன் தமிழ் நாட்டுல இன்றைய தேதியில பெரிய பட்ஜெட் டைரக்டராம். உம்மேல சபலம். மாட்டேன்னு சொல்லிடாதே, அவுட்டோர் பொள்ளாச்சியிலாம். அங்க போயிட்டுக் கலாட்ட பண்ணி, என் மானத்தை ( ?) வாங்கிடாதே! இந்தப் படத்துல . தேவியைத்தான் போடணும்னு தாரிப்பளர் சிவஞானம் அடம் பிடிச்சானாம். வாஷன் சார்தான் ‘ இந்தப் பொண்ணு பொருத்தமாயிருக்கும்ணு ‘ உன்னை ஞாபகப் படுத்தியிருக்கிறார். வீம்பு பிடிக்காம.. பேசாம வெளியே வா. எல்லோரும் அங்கே உனக்காகக் காத்திருக்காங்க. ‘ கொஞ்சம் கூடுதல் குரலெடுத்து வெளியே வந்த அம்மாக்காரி, வழியில் நின்றிருந்த என்னைப் பார்த்து என்ன நினைத்தாளே, ஒரு கணம் திகைத்து மறுகணம் அதே வேகத்தோடு வெளியேறினாள்.

எனக்குத் தர்மசங்கடமாயிருந்தது. உள்ளே போகலாமா ? கூடாதா என்று யோசித்தேன். சியாமளா நேரத்துக்கு ஸ்பாட்டுக்கு வரலைன்ன ‘, எங்க இயக்குனர் என்னக் கிழிச்சுடுவாரு. சியாமளா மறுபடியும் தன் முகத்தைத் தயார் படுத்திக் கொண்டிருந்தாள். நெற்றியின் ஸ்டிக்கர் பொட்டைச் சரி செய்து கொண்டவள், கண்ணாடியில் தெரிந்த என் பிம்பத்தைப் பார்த்துத் திரும்பினாள். முதன் முறையாக

சென்டிமீட்டர்கள் இடைவெளியில் பார்த்தேன். சினிமா அழகிகள் என்னோட கருத்துப்படி செயற்கை முக்கால் இயற்கை கால். இங்கே அது எதிரிடையாக இருந்தது. திருத்திய புருவங்களுக்குள் துடித்த கண்கள் விட்ட காமன் அம்பு, நேராய் என் இதயத்தில் இறங்கிட்டுது. பிறவி எடுத்த பயன் புரிஞ்சுட்டுது. ‘இவள்தான் இவள்தான் ‘ என ஆர்ப்பரித்த மனசை சமாதானப் படுத்திக்கிட்டேன். அவளுக்குள்ளும் ஏதோ நிகழ்ந்திருக்கிறது. பட படக்கும் இமைகள், துடித்த இதழ்கள், வேர்த்த மூக்கு என எல்லாமே சினிமாத்தனம் அல்ல, அசற் காதல் வெளிப்ப ‘டு..

‘மன்னிச்சுக்கங்க மேடம். நான் இந்தப் படத்தோட உதவி டைரக்டர். பேரு அசோகன். அங்கே எல்லோரும் உங்களுக்காகக் காத்திருக்காங்க.இப்போதைக்கு வழக்கம் போல ஸ்பாட்டுக்கு வாங்க. அவுட்டோர்ல, எங்க இயக்குனர்கிட்டருந்து கா ‘ப்பாத்தறதுக்கு நானாச்சு.

‘எப்படி ? ‘

‘அவரோட பலவீனம் என்னன்னு எனக்குத்தான் தெரியும். பொழுது சாஞ்சா அவருக்கு ஸ்காட்ச்தான் பிரந்தானம். மத்ததெல்லாம் அப்புறம்தான். கொஞ்சம் கூடக் கொடுத்தா ‘ மனுஷன் பிணம். அப்புறம் இருக்கவே இருக்காங்க அவர் பொண்டாட்டி. கிராமத்து ராட்சசி ‘, லேசா பத்தவச்சாப் போதும் வந்து நின்னுடுவா. பொது இடம்னுகூடப் பாக்கமாட்டா ‘. கிழி கிழின்னு.கிழிச்சுடுவா.. மனுஷன் அப்புறம் நீங்க இருக்குற திசைப் பக்கம் கூடத் தலை வச்சுப் படுக்க மாட்டார் ‘

‘ ரியலி ? ‘ஆர்வத்தோடு கேட்டாள்.

‘ வேண்டுமானா சத்தியம் செய்யட்டுங்களா ? ‘ என்றவனை, என்ன நினைத்தாளோ தன் இருகைகளிலும் என் முகத்தை வாங்கி, கன்னங்களில் மாறி மாறி முத்தமிட்டுவிட்டுச் சந்தோஷத்தில் வெளியேறியவள் பின்னால் நானும் ஆட்டுக் குட்டியாய் ஓடினேன்.

அன்பாய்ச் சில வார்த்தைகள் கூற நல்ல உறவுகள் இல்லை, தனிமையில் மனம் விட்டுப் பேச நல்ல தோழமை இல்லை என அந்தப் பெண் கண்கள் துடைக்கக் கைக்குட்டைத் தேடும்போதெல்லாம் அவள் எதிரே போய் நின்றேன். அவள் சாம்ராச்சியத்தில் அவளைத் தவிர மற்றவர்கள் எசமானர்களாயிருக்க, விடுதலைக்காக அந்தப் பெண் என்னை நம்ப ஆரம்பிச்சுது. அவளுக்கு முழு நேரமும் நான் வேண்டும் என்றாகி சாத்தியப் படும்போதெல்லாம் சந்திக்கலானோம். எங்கள் சந்திப்பைக் கிசுகிசுவில் ஊர்ஜி ‘தம் செய்த பத்திரிகைகள், எங்களைக் கேட்காமலேயே திருமணத்திற்கு நாள் குறித்திருந்தன.அவளது அம்மாக்காரியோ பாதுகாப்புகளைப் பலப்படுத்தியிருந்தாள்.

இந்த நேரத்திற்தான் எப்படியோ தன் அம்மாவின் பாதுகாப்பு வேலியைத் தாண்டிய சியாமளா, வழக்கமா நாங்க சந்திக்கும் நட்சித்திர ஓட்டலுக்கு வரச் செ ‘ல்லியிருந்தாள். ரிசப்ஷனில் சொல்லிக்கொண்டு மூன்றாம் மாடிக்கு லிப்ட் பிடித்து, சியாமளாவின் அறைக் கதவைத் திறந்தபோது. வழக்கத்திற்கு மாறாக விஸ்கியைக் குடித்துக் கொண்டிருந்தாள். என் பின்னால் கதவைச் சாத்திவிட்டு அவளை நெருங்கினேன். என் வரவை உணர்ந்திருக்க வேண்டும் திரும்பிப் பார்த்தாள்.

‘என்ன இவ்வளவு நேரம் ? ‘

‘இல்லையே. வழக்கம் போலத்தான வந்திருக்கேன். ‘

‘பொய் சொல்றீங்க. நீங்க முன்ன மாதிரி இல்லை. நேற்று அந்த கேரளாக்காரியோட அப்படியென்ன பேச்சு. ஏதாவது பச்சையா ஜோக் அடிச்சாளா ‘ ? ‘

‘கேள்வியக் கேட்டுட்டு, பதிலையும் சொல்லிக்கிற. நீதான் முன்ன மாதிரி இல்லை ‘

‘என்னைச் சமாளிக்கறதுக்கு ஏதேதோ சொல்றீங்க. இங்கே பாருங்க. என்ன செய்வீங்களோ தெரியாது. நம்ம கல்யா ‘ணம் உடனே நடந்தாகணும். எங்க அம்மா கூட இனியும் என்னால இருக்க முடியாது ‘

‘ இப்படி அவசரப்பட்டா ‘ எப்படி ? எனக்கும் இன்னும் உதவி இயக்குனர் அந்தஸ்துல இருந்து விடுதலை கிடைக்கிலேயே ‘

‘ அசோகன்! முடியாதுன்னு மட்டும் சொல்லிடாதீங்க, உங்க பதில்லதான் என் வா ‘ழ்வே இருக்கு ‘ எனச்சொல்லிவிட்டு அந்தப் பொண்ணு அழுதபோது எப்படி தேற்றறது என்ன சொல்வதுண்ணு தெரியாமல் வந்துட்டங்க. சியாமளாக்கிட்டப் போயிட்டு, அவ இருக்கிற நிலைமையில பூர்வீகம் இந்திர லோகம், பேரு தேவ குமாரன்னு சொன்னா நம்புவாளா ? ?. அவளை என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாதுங்க. நான் வாங்கி வந்த சாபம் அப்படி.

ஆரம்பத்துல சொன்னமாதிரிி, போன ஜென்மத்துல நான் ஒரு தேவ குமாரன். சகல செளபாக்கியங்களோட, அசுரர்களாற் துன்பப்படும்போதெல்லாம் தேவைப்பட்டோரிடம் முறையிட்டு, அமிர்தத்தை உண்டு சோமபானத்துல முழுகி, விசேஷ காலங்களில் தேவ சபையின் ரம்பை, ஊர்வசி, திலோர்த்தமை நடனங்களில் மகிழ்ந்து வந்த, சராசரி இந்திரலோகத்துப் பிரஜை. ஒரு நாள் தேவேந்திரனுக்குச் சந்தேகம் வந்துட்டுது. ‘அவையில் உள்ளவர்கள் கலை நோக்கோடு நடனத்தைப் பார்க்க வந்தவர்களா ? காம நோக்கோடு பார்க்கவந்தவர்களா ? என்று சோதித்துப்பார்க்க நினைத்து, இந்த வாயு இருக்காரே அவரோட உதவியினால் ஊர்வசியின் மேலாடையைக் கலைக்க மற்றவர்கள் கண்ணை மூடிக்கொள்ள, நான் மட்டும் அவளைப் பார்த்துக் கொண்டிருக்கேன். இந்திரனுக்குக் கோபம் வந்துட்டுது. ‘நீ காமத்திற்கு இடம் கொடுத்துட்ட. ஆகவே பூலோகத்திற்குச் சென்று சிற்றின்பத்தை அனுபவித்துவிட்டு வா ‘ ன்னு சொல்லிட்டாருங்க. அவருக்குச் சாபமிட என்ன தகுதின்னு கேட்க நினைக்கிறீங்களா ? மனுஷன்கேட்கலாம். தேவகுமாரன் கேட்கக்கூடாது. நான் கேட்கலை.

நான் இந்த பூலோகத்துலப் பிறந்தது, உதவி இயக்குனனாவானது, சியாமளாவை சந்திச்சது என எல்லாமே திட்டமிடப்பட்டவை. இப்பத் திடார்னு அந்தப் பொண்ணு தற்கொலை செஞ்சிக்கிட்டதா மாலைமலர்ல கொட்டை எழுத்துல செய்தி,கூடவே அவளது காதலர் உதவி இயக்குனர் அசோகன் தலைமறைவுன்னு செய்தி வேற.. பாவம், அந்தப் பொண்ணோட ஜிகினா வாழ்க்கையில மரணம் மட்டுமே நிஜம். இதுக்கு நானும் காரணமாயிட்டமேன்னு மனசு துடிக்குது. எனக்கும் இந்தப் பூலோகத்துல எல்லாமே முடிஞ்சு போச்சு. ஒருவேளை சியாமளாவை மேலே சந்திக்க நேர்ந்தா ‘ எங்க இந்திரனோட தலைமையில, நாரதர் தும்புரு வாசிக்க, மங்கள வாத்தியங்கள் முழங்க முப்பத்து முக்கோடி தேவர்கள் புடைசூழ எங்க திருமணம் நடக்குமுங்க. நான் உடனே தேவலோகம் புறபட்டாகணும். வரட்டுங்களா ?

***

Na.Krishna@wanadoo.fr

Series Navigation