பூச்சிக்கொல்லி கலவை பார்க்கின்ஸன் வியாதிக்குக் காரணமா ?

This entry is part [part not set] of 12 in the series 20010108_Issue

மாகி பாக்ஸ்


மிக அதிகமாக சாதாரணமாக உபயோகிக்கப்படும் இரண்டு பூச்சிக்கொல்லி மருந்துகள், எலிகளின் உடலுக்குள் செலுத்தப்பட்டால், அவை பார்க்கின்ஸன் வியாதி உருவாக்குவது போலவே மூளையைச் சேதம் செய்கின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் சென்ற வியாழக்கிழமை (ஜனவரி 4, 2001) தெரிவித்திருக்கிறார்கள்.

எலிகளுக்கு களை அழிக்கும் பாராக்வெட் paraquat உம், காளான் அழிக்கும் மானெப் maneb உம் சேர்த்துக் கொடுத்தால் பார்க்கின்ஸன் இந்த எலிகளில் உருவாவதையும் மூளை அழிவையும் ரோச்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் மருத்துவ, பல்மருத்துவப் பள்ளி ஆராய்ச்சியாளர்களான டெபோரா கோரி ஸ்லேச்டா அவர்களும் அவரது உதவியாளர்களும் தெரிவித்திருக்கிறார்கள்

இரண்டு வேதிப்பொருகளில் ஒன்று மட்டும் கொடுத்தால் இந்த தனிப்பட்ட அடையாளம் கொண்ட மூளை அழிவு தோன்றுவதில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்த கண்டுபிடிப்பும் இது போன்ற பல கண்டுபிடிப்புகளும், பூச்சிக்கொல்லிகள் போன்ற வேதிப்பொருள்களுடன் தொடர்ந்து மனித உடல் தொடர்பு கொள்வது, மூளை பாதிப்புக்கு வழிவகுக்கும் என்ற சாட்சியத்துக்கு வலிமை சேர்க்கிறது.

‘இதுவரை யாரும் வேதிப்பொருள்களை சேர்த்து செலுத்தி பரிசோதனை நிகழ்த்தவில்லை, இது ஒரு முக்கியமான கண்டுபிடிப்பு ‘ என்று கோரி-ஸ்லேச்டா சொல்லியிருக்கிறார்.

‘எனவே யாருக்கு பார்க்கின்ஸன் வரும் என்று அறுதியிட்டுச் சொல்ல முடியாது. ‘ என்று இந்த ஆராய்ச்சியில் பங்கு வகித்த நரம்பியல் மூளையியல் வல்லுனர் டாக்டர் எரிக் ரிச்ஃபீல்ட் கூறுகிறார்.

யாருக்கு எந்த அளவில் இந்த வேதிப்பொருள்கள் உடலில் சேரும் என்றும், ஒரு தனிமனிதருக்கு இந்த வியாதி வர அவருக்கு எவ்வளவு வேதிப்பொருள் அவர் உடலில் சேரவேண்டும் என்றும் குறிப்பாகச் சொல்லமுடியாது. உலகத்தில் ஏராளமான வேதிப்பொருள்கள் பூச்சிக்கொல்லிகளாக உபயோகப்படுத்தப்படுகின்றன. ஒவ்வொருவரும் ஒவ்வொரு அளவில் இதனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இரண்டு மூன்று வேதிப்பொருள்கள் உடலில் சேர்வதை எப்படி அளவிடுவது ? ‘ என்றும் ரிச்ஃபீல்ட் கூறுகிறார்.

அமெரிக்காவில் மட்டும் சுமார் 500000 பேரை பாதிக்கும் பார்க்கின்ஸன் வியாதி, வளர்ந்து கொண்டே போகும், தீராத ஒரு வியாதி. இது மூளையில் டோபோமைன் என்ற ஒரு திரவத்தை உருவாக்கும் மூளைச்செல்களை பாதிக்கிறது, இந்த டோபோமைன் திரவமே மனிதர்கள் நடப்பதற்கும் அசைவதற்கும் செய்தி கொண்டு செல்லும் திரவம்.

இவ்வியாதியுற்றவர்கள் கை நடுங்க ஆரம்பிக்கும். பின்னர் உடல் முழுக்க பக்கவாதம் வந்து இறப்பர். இந்த வியாதிக்கு மருந்து இல்லை. இருக்கும் மருந்துகளும் இந்த வியாதியின் வளர்ச்சியை மெதுவாக்குமே தவிர தீர்வு ஒன்றுதான்.

இந்த வியாதி, போப்பாண்டவர் ஜான் பால் அவர்களுக்கும், நடிகர் மைக்கல் ஜே ஃபாக்ஸ் (Back to the future) குத்துச் சண்டை வீரர் முகமது அலிக்கும் இருக்கிறது,

ஆராய்ச்சியாளர்கள், தவறான ஜீன் காரணமாகவும் சுற்றுப்புற சூழ்நிலை காரணமாகவும் இது வருகிறது என்று சந்தேகித்து வந்திருக்கிறார்கள். முக்கியமான சந்தேகம் பாஸ்பேட் பூச்சிக்கொல்லிகள். இந்த பூச்சிக்கொல்லிகள் பூச்சிகளின் நரம்பு மண்டலத்தை பாதிக்க உருவாக்கப்பட்டவை.

டிஸம்பர் 15க்கான நியூரோஸைன்ஸ் என்ற இதழில் கோரி ஸ்லேச்டாவின் குழு பாராக்குவெட், மானெப் என்ற இரண்டு பூச்சிக்கொல்லிகளைப் பற்றி ஆராய்ந்த கட்டுரை வெளியாகியிருக்கிறது. இந்த இரண்டும் உருளைக்கிழங்கு, தக்காளி, முட்டைக்கோஸ், சோளம், சோயா, பருத்தி, பழங்கள், இவைகளின் வளரும் செடிகள் மேல் தெளிக்கப்படுகின்றன கோடானுகோடி ஏக்கரில்.

இரண்டில் ஒன்று மட்டும் கொடுப்பது எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை. இரண்டையும் சேர்த்துக் கொடுத்தால், இந்த மூளை பாதிப்பின் தெளிவான அடையாளம் தெரிகிறது. எலிகள் மெதுவாக நடந்தன. டைரோஸின் ஹைட்ராக்ஸிலேஸ் என்ற திரவத்தின் அளவு மிகவும் குறைவாக எலிகளின் உடலில் உற்பத்தியானது. (இந்த திரவம் உடலில் டோபோமைன் ஆரோக்கியமாக இருப்பதை அளவிட உதவுகிறது)

எலிகளின் உடலில் நான்கு பங்கு அளவு reactive astrocytes பிற்போக்கு அஸ்ட்ரோசைட்டுகள் அதிகமாயின. இந்த பொருள்கள் மூளைபாதிப்பு எந்த அளவு இருக்கிறது என்பதை அளவிட உதவும். இந்த எலிகளுக்கு 15சதவீத அளவு குறைந்த டோபோமைன் நியூரான்களும், 15 சதவீத அளவு குறைந்த டோபோமைனும் இந்த எலிகள் உற்பத்தி செய்தன.

டாக்டர் ரிச்ஃபீல்ட் அவர்கள், ஒரு வேதிப்பொருள் மூளைப் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றும் இன்னொரு வேதிப்பொருள் அதற்கு துணை செய்கிறது என்றும் கருதுகிறார். இதை ஆராய்ச்சி செய்தே அறியவேண்டும் என்றும் கருதுகிறார்.

**

பின் குறிப்பு:

1. இந்த செய்தி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தயாரித்தளித்த செய்தி. நன்றி

2. மீண்டும், வேப்பிலை, வேப்பம் புண்ணாக்கு மூலம் பூச்சிகளை கட்டுப்படுத்துவதை இந்திய விவசாயிகள் யோசிக்க வேண்டும். வேப்பம் புண்ணாக்கு ஏற்றுமதி மூலம் உலக மக்களை செயற்கை பூச்சிக்கொல்லிகளிலிருந்து காப்பாற்றவும் இயலும். அதற்குள் யாராவது வேப்பம்புண்ணாக்கை பாடண்ட் பண்ணிவிடாமல் பார்த்துக்கொண்டால் நல்லது.

Series Navigation

மாகி பாக்ஸ்

மாகி பாக்ஸ்