புழுங்கும் மௌனம்!

This entry is part [part not set] of 50 in the series 20110515_Issue

கவிதா ரவீந்தரன்


ஒரு மௌனத்தை
எவ்வளவு நேரம் சுமப்பது
உன் பொய்களையும்
கனவுகளையும்
போதையாய்
புணர்ந்த வலிகளோடு …

பெருத்த பாலைவனங்களில்
உடைந்த பீரங்கிகள்
சொல்லும் மௌனங்களை
உரசிப் பார்த்ததுண்டா நீ ?

முழுமையின் பிரவாகத்தில்
ஒரு புள்ளியை
தனக்குள் புதைத்து
புளுங்கியதுண்டா நீ ?

தனிமை குவிந்திருந்தும்
மேலோட்டமாய்
ஒரு இரைச்சலுக்குள்
சலனப்பட்டதுண்டா நீ ?

பாலைவனத்தின்
கள்ளிச் செடியில்
வடியும் ,
கடைசி சொட்டு
மௌனத்தை புசித்து செல் !
அல்லது
ஒரு ஆணின் செருக்கோடு
மௌனத்தின் முலைதேடு …

உன் கர்வத்தின் மௌனத்திற்கு
பதில் சொல்வாள்
உன் தாய்
அல்லது உன் மகள் …

– கவிதா ரவீந்தரன்

Series Navigation