மாளாவி ஏரியில் அறிவியல் ஆராய்ச்சி
பூமியின் நீண்ட வரலாற்றைப்பற்றி அறிந்து கொள்ளவும், அந்த வரலாற்றில் தட்பவெப்பம் எவ்வாறு இருந்தது என்பதை அறியவும் கிடைத்திருக்கும் அறிவியல் புதையலனான மாளாவி ஏரியின் அடி ஆழத்தை நோண்ட அறிவியலாளர்கள் திட்டமிட்டுள்ளார்கள்.
சமீபத்தில் உருவாக்கப்பட்டுள்ள புதிய டிரில்லிங் அமைப்பு மூலம், முதன் முறையாக மாளாவி ஏரியின் அடிஆழத்திலிருந்து வண்டலை எடுத்து ஆராய்ந்திருக்கிறார்கள்.
கிழக்கு ஆப்பிரிக்காவின் பள்ளத்தாக்கின் தெற்கு மூலையில் இருக்கும் மாளாவி ஏரி, சுமார் 750 மீட்டர் ஆழம் கொண்டது. இது சுமார் 70 லட்சம் வருடங்கள் பழையது.
தட்பவெப்ப மாறுதல்கள் ஏரியின் ஆழத்தில் படியும் வண்டல்களில் ஒரு செய்தியாக பதிகின்றன. இந்த தட்பவெப்ப மாறுதல்களை அறிவதன் மூலம் உலகில் மனிதனின் தோற்றத்தையும், பரிணாமத்தின் வளர்ச்சியையும் அறிய முடியும் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.
அரிசோனா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஆண்ட்ரூ கோஹன், ‘எங்களது குறிக்கோள், சுமார் 5 லட்சத்திலிருந்து 10 லட்சம் வரைக்கும் இருக்கும் கடந்த கால வரலாற்றின் தட்பவெப்ப குறிப்பேடுகளை இந்த ஏரியின் படுகைகளிலிருந்து கண்டறிவதுதான். இந்த ஏரியின் படிமங்கள் வருடாவருடம் தட்பவெப்ப மாறுதல்களை கொண்டு படிகின்றன என்பதை கணக்கில் எடுத்துக்கொண்டு இந்த அறிவை அடைவது முக்கியம் ‘ என்று கூறுகிறார்.
கடந்த ஆராய்ச்சிகளில், வருடாவருடம் இந்த ஏரியின் ஆழத்தில் ஒரு கருப்பு படுகை படிகிறது என்பதை அறிந்திருக்கிறார்கள். இந்த வண்டல், மழை பெய்யும் போது நிலத்திலிருந்து வரும் மண்ணின் வண்டல். அடுத்தது அதன் மீது பழுப்பு வண்ணத்தில், வறண்ட கோடைக்காலத்தின் போது அல்கே படிகிறது.
இந்த படிமங்களின் அமைப்பும், மாறுபாடும் ஒவ்வொரு வருடமும் அதன் தட்பவெப்பம், சூழ்நிலை, மழையளவு பொறுத்து மாறுகிறது. இது தட்பவெப்பத்தின் நேரடி குறிப்பேடு அல்ல என்பதால் இதனை உபரி குறிப்பேடாக கருதலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.
பழைய மரங்கள், பழைய பனிஆறுகள், இறந்த ப்ளாங்க்டானின் கல்லான ஓடுகள் போன்றவையும் பல கோடி ஆண்டுகளுக்கு முன் இருந்த தட்பவெப்பத்தை அறிய உதவுகின்றன.
‘வெகுகாலமாக, பூமியின் தட்பவெப்பம், பனிப்பாறைகளால் இயக்கப்படுகிறது என்பதாகவே கருதி வந்திருக்கிறோம். பூமத்தியக்கோடு தட்பவெப்பம் கூட உலக தட்பவெப்ப அமைப்பை இயக்கிக்கொண்டிருக்கலாம். இந்த ஆராய்ச்சிகள் மூலம், பூமத்தியரேகை பிரதேச தட்பவெப்பம், ஆர்க்டிக் அண்டார்டிக் தட்பவெப்பத்துக்கு முன்னோடியாக இருந்தவையா இல்லையா என்பதை இதன் மூலம் கண்டறியலாம் ‘ என்று ஆண்ட்ரூ கூறுகிறார்.
கோடைக்காலத்தில் மாளாவி ஏரியில் தோண்டலுக்கான ஆரம்ப முயற்சிகள் நடக்கும். உண்மையான தோண்டல் டிஸம்பர் அல்லது ஜனவரி 2003இல் நடக்கலாம்.
இதில் நடந்த பின்னர், ஆராய்ச்சியாளர்களின் முக்கியமான குறிக்கோள் டாங்கானியாகா ஏரியில் தோண்டுவதுதான்.
‘மாளாவி ஏரி சுமார் 750 மீட்டர் ஆழமுள்ளது. டாங்கானியாகா ஏரி 1500 மீட்டர் (1.5 கி.மீ) ஆழமுள்ளது. பிளெய்ஸ்டோசீன் காலத்தில் மாளாவி ஏரி காய்ந்து போய்விட்டது என்று சந்தேகிக்கிறோம். ஆனால், டாங்கானியாகா ஏரியில் அப்போது நீர் இருந்தது. எனவே அங்கு தோண்டுவது இன்னும் கோடிவருடங்களுக்கான தட்ப வெப்பத்தை அறிய உதவும் எனக்கருதுகிறோம் ‘ என்கிறார் பேராசிரியர் ஆண்ட்ரூ கோஹன்.
- புராதன ஏரியின் தட்பவெப்ப ரகசியங்கள்
- எட்டாத தொலைவு
- பனி
- குழவிக் கூடு குவலயம்..
- தொன்னையைக் கொண்டு பாயசம் குடிக்கலாம். கடலைக் கடக்க முடியாது. (கலாச்சாரம் பற்றிய ஜெயமோகன் பதில்களுக்கு எதிர்வினை)
- குமட்டும் குறள் ஹைக்கூக்கள்
- பிறவழிப் பாதைகள் – சிறுபத்திரிக்கைகள், புனைகளம், கதைசொல்லி, அட்சரம்
- எனக்குப் பிடித்த கதைகள் – 1 – புதுமைப் பித்தனின் ‘மனித யந்திரம் ‘
- தொன்னையைக் கொண்டு பாயசம் குடிக்கலாம். கடலைக் கடக்க முடியாது. (கலாச்சாரம் பற்றிய ஜெயமோகன் பதில்களுக்கு எதிர்வினை)
- திலகபாமாவின் கவிதைகள் – ஒரு மதிப்புரை
- காஷ்மீர் புலாவ்
- சிந்தி காய்கறி கூட்டு
- கண்ணுக்குள் உடலின் கடிகாரம்
- பாஞ்சாலி ராஜ்யம்
- தேடுகிறேன் தேவதையே !
- விளையாட்டுப் பொம்மை
- மீட்டிங்…
- கொடியேற்றம்
- முகங்கள்
- குளிர்! குளிர்! குளிர்!
- எதற்கும் தயாராகி நிற்போம்!
- தெளிவு
- குமட்டும் குறள் ஹைக்கூக்கள்
- ‘தர்மோ ரக்ஷதி ரக்ஷிதா ‘ (அறத்தைக் காப்பாற்றினால், அது காப்பாற்றும்)
- பெரியார் பற்றிய பல்வேறு புரிதல்கள் பற்றிய மஞ்சுளா நவநீதனின் கட்டுரைக்கு எதிர்வினை
- குரு தட்சிணை