புத்தகம்

This entry is part [part not set] of 21 in the series 20090122_Issue

ரா.கணேஷ்.


ரயிலில் பி¡¢ந்து
போனது இரண்டு
இரவல் கொடுத்து
வராமல் போனது
ஏழெட்டு இருக்கும்
முன்னொரு காலத்தில்
வறுமை அள்ளிக்கொண்டு
போனது இருபது
காதலிக்கு பா¢சாய்
போனது ஒன்று
மனைவி சப்பாத்தியிடும் போது
பலியானது இரண்டு
புத்தகங்கள்
வாங்கிய அனுபவத்தைவிட
இப்படியாய்
தொலைத்த அனுபவம்தான்
இன்று மனதில்
சுயிங்கமாய்
ஒட்டிக்கொண்டு….

– ரா.கணேஷ்.
சென்னை

Series Navigation

ரா.கணேஷ்

ரா.கணேஷ்