பிள்ளைப்பேறு
மதியழகன் சுப்பையா

பன்னீரு மவ
சரியான வாயாடி
வயசுக்கு வந்துட்டாளாம்
பாபுவின் இரண்டாவது மகன்
பள்ளிக்கூடம் போறானாம்
புள்ளய கிண்டல் பண்ணிணதால
போலீசு புடிச்சிறுச்சாம்
ஐயனார் மவன
கூடப்படித்தவர்களின்
குடும்பச்செய்திகளை
வாசித்தாள் அம்மா
பத்துமாதந்தானே புள்ளைக்கு
பத்துவருசமாச்சே ?
பையில்லாமலா படைச்சிட்டான்
பாதகத்திய ?
புலம்பினாள் அம்மா
‘மாமா ஆசையாயிருக்கு
பன்னீ கறி எடுக்கிறியா ? ‘
என்றாள் நான் பெற்றிடாத சிசு
madhiyalagan@yahoo.com