பாவண்ணனின் வணக்கம் தமிழகம்

This entry is part [part not set] of 25 in the series 20050812_Issue

தேவமைந்தன்


உண்மையிலேயே நானும் என் குடும்பத்தாரும் சன் தொ.கா. ‘வின் ‘வணக்கம் தமிழகம் ‘ நிகழ்ச்சியையும் ‘அரட்டை அரங்க ‘த்தையும் விரும்பிப் பார்ப்பவர்கள் அல்ல. எப்பொழுதாவது நேரம் ஒதுங்கினால் வேண்டா வெறுப்பாகப் பார்ப்போம். காரணம், நாங்கள் கொஞ்சம் ‘கிரியேடிவ் ‘ குணம் கொண்டவர்கள்.

இந்த மாதம்(ஆகஸ்ட்) 3-ஆம் தேதி காலை தற்செயலாக அந்நிகழ்ச்சியைப் பார்த்தோம். எழுத்தாளர் பாவண்ணன் உருவத்தையும் ‘நேம் கார்டை ‘யும் கண்டவுடன், ‘சரி, வி ?யம் இருக்கும்! ‘ என்று நிமிர்ந்து உட்கார்ந்தோம். மொழிபெயர்ப்புப் பற்றிய ஆழ அகலங்களைத் தொடத் தொடங்கினார் பாவண்ணன்.

இராமாயணத்தின் மறு உருவாக்கமாக எப்படி கம்பனின் இராமகாதையும் எழுத்தச்சனின் இராமாயணமும்

உருவாயினவோ, அப்படி உருவாவதுவே சரியான மொழிபெயர்ப்பு என்றும் இந்த வேலை இதிகாச காலத்திலிருந்தே தொடங்கிவிட்டது எனவும் பாவண்ணன் கூறினார்.

வாசிப்பு என்பது மரம் என்றால், அதன் கனி படைப்பு; கனியின் சுவை, அதனால் அடையும் அனுபவம் எ

ன்று உவமைகளை எளிமையாகப் பயன்படுத்தி வாசிப்பனுபவத்தை விரும்பித் தேடி நுகரும் ஒருவனே சிறந்த மொ

ழிபெயர்ப்புக்குரிய உந்துதலைப் பெற இயலும் என்றார்.

ஒரு மொழியில் உள்ள, பாமர மக்கள் பயன்படுத்திய சொலவடைகளையும், உயர்ந்தோரும் பயன்படுத்திய மரபுத்தொடர்களையும் மொழிபெயர்ப்பதில்(பெயர்த்துவிடுகிறார்கள் சிலர்!)தான் நல்ல மொழியாக்கம் செய்பவனின் முயற்சியும் பாடுகளும் கடின உழைப்பும் இருக்கின்றன என்றதோடு, ‘அ ?டாவக்ரன் ‘[என்ற முனிவரின்] பின்னணி (தொன்மம்)அறியாமல் மொழிபெயர்த்தால் வி ?யம் விபரீதமில்லாமல் அடுத்த மொழிக்குப் போய்ச் சேருமா என்று கேட்டார். நல்ல கேள்வி.

அப்புறம் ‘வரீசை ‘யாகப் பட்டியல்–எந்தவிதக் காழ்ப்புமில்லாமல்–தன் சமகாலத்திய மொழிபெயர்ப்பாளர்களைப்பற்றியும் அவர்களின் சிறப்பான முயற்சிகள் பற்றியும்; அபார ஞாபக சாதகம்தான். சரளமாக, அன்றைய க.நா.சு. முதல் இன்றைய சா.தேவதாஸ் வரை ஒருவரையும் விடவில்லை. இந்த ஒரு குணத்துக்காகவே கணினிமுன் உட்கார்ந்து இந்த விடியலில் இச்சித்திரம் எழுதுகிறேன்.

தான் இவ்வாண்டு மொழியாக்கத்துக்கான சாகித்ய அகாதெமி விருதுபெறக் காரணமாக இருந்த எஸ்.எல்.பைரப்பா நாவலின் தமிழாக்கமான ‘பருவம் ‘ பற்றியும் அதன் விரிவான மகாபாரதக் கதைப் பின்னணி–துரியோதனின் கதை-ஆர-அச்சு-நிலை குறித்தும் தெளிவாக எடுத்துக் கூறினார்.

தவிர, கிரீஷ் கர்னாடின் ஆக்கமான ‘பலிபீடம் ‘-நாட்டுக்கதை தந்த ‘நாகமண்டலம் ‘- ‘கவர்மெண்ட் பிராமணன் ‘பின்னணியில் உள்ள நியாயம்[தன் சொந்த அனுபவம்] என்று பலப்பல….சொல்லிக்கொண்டே போகலாம்.

என்ன செய்வது ? எப்பொழுதாவது இப்படி ஒரு நேர்காணலை ‘வணக்கம் தமிழகம் ‘ நிகழ்ச்சியில் ஒளி பரப்பிவிடுகிறார்கள். இதை நம்பி இன்னொரு நாளும் பார்த்தேன். கட்டைக் குரலோடும், வெற்றிலை பாக்குப்போட்டுச் சிவந்த நாக்கோடும் ஒரு பழைய காலேஜ் வாத்தியார் இலக்கிய நயம் பற்றி அடிக்க வருவதுபோல் பேசத் தொடங்கினார். வாழ்க்கையே, அந்தக்கணத்தில், திகைத்துப் போனது. —அ.பசுபதி(தேவமைந்தன்)

.

pasu2tamil@yahoo.com

Series Navigation

தேவமைந்தன்

தேவமைந்தன்