பாப்லோ நெரூதாவின் ‘உ ன து பா த ங் க ள் ‘

This entry is part [part not set] of 57 in the series 20041209_Issue

தமிழில் – சுகுமாரன்


—-

உன் முகத்தைப் பார்க்க முடியாதபோது
உன் பாதங்களைப் பார்க்கிறேன்.
வளைந்த எலும்பாலானவை உன் பாதங்கள்,
திடமான சின்னப் பாதங்கள்.
அவையே உன்னைத் தாங்குகின்றனவென்றும்
உனது இனிய பாரம்
அவற்றின் மேல்தான் உயர்கிறதென்றும்
எனக்குத் தெரியும்.
உன் இடை, உன் மார்பகங்கள்,
உன் முலைக்காம்புகளின் இரட்டைச் சிவப்பு,
சற்றுமுன் பறந்துபோன
உன் கண்களின் கூடுகள்,
உன் விரிந்த கனி வாய்,
உன் செந்நிிற முடிச்சுருள்.
ஆனால்,
நான் உன் பாதங்களைக் காதலிக்கிறேன்.
ஏனெனில்,
அவை பூமியிலும் காற்றிலும்
நீரிலும் நடந்தன-
என்னைக் கண்டடையும்வரை.

—-
தமிழில்: சு கு மா ர ன்
—-

Series Navigation

சுகுமாரன்

சுகுமாரன்