பாண்டிச்சேரி நாட்கள்!

This entry is part [part not set] of 46 in the series 20040129_Issue

கற்பகம்


————————
கடற்காற்றின் ஈரம்
தேசம் தாண்டித் தீண்ட –

நனைகின்ற விழிகள்…
நினைவுகளில்
பாண்டிச்சேரி நாட்கள்!

நடந்த பாதை..
வீசிய தென்றல்.
கொரித்த நிலக்கடலை
மணக்குள வினாயகர்
கண்டு
வரம் கேட்ட கோயில்.

சில்லென்று உணர்வு
தூரத்துச் சாரல்.
நனைந்த மேகம்
என் நிலத்தில் விழாத மழை.

தெற்கின் மணியோசை
ஹரி ஹரி என்ற பாடல்
பயனித்து வரும் ராகம்
மெலிதாக கேட்கும்
இன்னும்
மங்கிய எதிரொலி!

சேற்றினில் சிரிக்கும் செந்தாமரை
ஆயிரம் கேள்விகள் கேட்கும்.

இடம் மாறிய இலக்குகள்
எதிர்காற்றில் எங்கோ சிதறிய சருகுகள்
வேர்களின் வாசனை – வேண்டும்
அன்பான தாலாட்டு…
தொட்டுத் தொட்டுப் போகும்.
கேட்டு மனம்
மீண்டும் மீண்டும் ஏங்கும்!

வேலிப் போட்ட கண்ணீர் குளத்தில்
பண்ணீர் மலர் பூப்பதா ?
மணம் வீசுவதா ?
ஏளனம்தானே ?

விளைவதுதானே விளையும் ?
எது உன் நிலம் ? நிஜமறிவாய்.
நிரந்தரமாய் நானிருக்கிறேன் என்று
என்று
விவேகமாக
வெப்பக்காற்று வீச –

நனைகின்ற விழிகள்…
நினைவுகளில்
பாண்டிச்சேரி நாட்கள்!
—————————
karpagam610@yahoo.com

Series Navigation