பனிக்கரடி முழுக்கு

This entry is part [part not set] of 54 in the series 20080110_Issue

புகாரி


அஞ்சு…

டொராண்டோ, கனடா
ஜனவரி 1, 2008 செய்வாய்
உயிரை உறையவைக்கும்
கடுங்குளிர்


நாலு….

ஒண்டாரியோ ஏரி
பனிக்கட்டிகள் மிதக்கும்
சிலீர் நீர்

மூணு….

ஆவிபறக்கும் சுடுநீர்
மழையில்
குளித்துவிட்டு
வெளிவந்தாலே
போர்வை தேடும் நாட்கள்

ரெண்டு…

கையில் சுடச்சுட சூப்பும்
உடலைச் சுற்றிய துவாலை
ஆடையுமாய்
ஏரியின் கரைகளில் பலநூறு
நீச்சல் வீரர்கள்

ஒண்ணு…

பத்துவயது முதல்
பாதிகிழம்வரை
ஆணும் பெண்ணுமாய்
இதோ இதோ என்று
துடித்துக்கொண்டு

ஓடு….குதி…

துவாலையைத் தூர
எறிகிறார்கள்
சரசரவென்று ஏரிக்குள்
விழுகிறார்கள்
உயிர் துடியாய்த்
துடிக்கிறது
வீல் வீல் என்ற அலறல்களோடு
முங்கு முங்கு என்ற
கூச்சல்களோடு…

சிலர் முங்க சிலர்
பின்வாங்க
அம்மாடியோவ்…

கரையில்
பல்லாயிரம் டாலர்கள்
வசூல்

உலகில்
சுகாதார நீருக்கு ஏங்கும்
ஏழை நாடுகளுக்கு
இந்த நன்கொடை…

நீர் நன்கொடை

இவ்வாண்டின் பெரும்பகுதி
சூடானின் நீர்ச்
சுகாதாரத்திற்கு…

வாங்க வாங்க கனடாவுக்கு
நாமும் முங்குவோம்…
இது பனிக்கரடி முழுக்கு

அன்புடன் புகாரி

buhari@gmail.com

http://www.thestar.com/News/article/290378
http://toronto.ctv.ca/servlet/an/local/CTVNews/20080101/Polar_dip_080101/20080101?hub=TorontoHome

Series Navigation

புகாரி

புகாரி