பங்களாதேஷ் அரசுகள் தொடர்ந்து நசுக்கும் மதச்சிறுபான்மையினர்

This entry is part [part not set] of 46 in the series 20040129_Issue

டாக்டர் சமீர் சர்க்கார்


முன்னுரை

தங்களது தாய்நாடான பங்களாதேஷிலேயே மதச்சிறுபான்மையினர் (இந்துக்கள்) உண்மையிலேயே தங்களது மதம் காரணமாக நசுக்கப்படுகிறார்களா என்பது பற்றி பரந்த சந்தேகம் இருக்கலாம். நடந்து வரும் விஷயங்கள் இந்த உண்மையை வெளிக்காட்டுகின்றன. கூடவே, இந்தியாவின் பிரிவினை மற்றும் பங்களாதேஷின் சுதந்திரம் ஆகியவற்றை வரலாற்று ரீதியாகப் பார்க்கும்போது உண்மை வெள்ளிடை மலையாகத் தெரிகிறது. இந்தியாவின் பிரிவினை சுமார் 10 லட்சம் மக்களைக் கொன்றது. இன்னும் 1 கோடியே 50 லட்சம் மக்களை தங்கள் பிறந்த இடம் விட்டு இன்னொரு இடத்துக்குச் செல்லும்படி வற்புறுத்தியது. பிரிவினைக்குப் பிறகு, இந்தியா ‘இந்திய குடியரசு ‘(Republic of India) என்ற பெயரைப் பெற்றது. ஆனால், பாகிஸ்தானோ, ‘பாகிஸ்தானிய இஸ்லாமியக் குடியரசு ‘ (Islamic Republic of Pakistan)என்றாகியது. அதன் அரசியலமைப்புச் சட்டத்திலேயே இடம் பெற்றிருக்கும் சிறுபான்மையினருக்கு எதிரான அணுகுமுறை பாகிஸ்தானின் தோற்றத்தின் போதே உருவாகிவிட்டது. பாகிஸ்தானிய இஸ்லாமியக் குடியரசின் அரசியலமைப்புச் சட்டத்தில் குடியரசின் ஜனாதிபதியாக ஒருவர் ஆகவேண்டுமெனில் அவர் இஸ்லாமிய மதத்தைச் சார்ந்தவராக மட்டுமே இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. இஸ்லாமியரல்லாத ஒருவர் இந்த நாட்டின் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், இஸ்லாம் ஆபத்துக்குள்ளாகும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இப்படிப்பட்ட ஒரு சட்டம் எழுதப்பட்டிருக்கிறது.

“A person shall not be qualified for election unless he is a Muslim” [Article 32(2)]

முஸ்லீம்களுக்கு முஸ்லீமல்லாதவர்களுக்கும் இடையேயான பிரிவு தெளிவாக அரசியலமைப்புச் சட்டத்தில் எழுதப்பட்டிருக்கிறது.

‘இஸ்லாமிய மதச்சட்டங்களையும் போதனைகளையும் தனித்தனியாகவும், சமூகமாகவும் இணைந்தும் பாகிஸ்தானிய முஸ்லீம்கள் குரானிலும் சுன்னாவிலும் குறிப்பிட்டமுறையில் வாழவேண்டும், மதச்சிறுபான்மையினர் தங்கள் மதத்தையும் கலாச்சாரத்தையும் ஒழுகுவதற்கான போதுமான ஏற்பாடுகளும் அமைத்துக்கொடுக்கப்படவேண்டும். ‘

ஆனால் இந்திய அரசியலமைப்புச் சட்டமோ வேறொரு செய்தியைத் தெரிவிக்கிறது.

‘WE THE PEOPLE OF INDIA, having solemnly resolved to constitute India into a SOVEREIGN, DEMOCRATIC REPUBLIC, and to see are all its citizens; JUSTICE, Social, economical and political, LIBERTY of thought, expression, belief, faith and worship; EQUALITY of states and opportunity; and to promote among the all; FRETERNITY assuring the dignity of the individual and the unity of the nation ‘.

‘நாம், இந்திய நாட்டின் குடிமக்கள், இந்தியாவை சுதந்திர இறையாண்மை கொண்ட, ஜனநாயகக் குடியரசாகவும், இதில் இருக்கும் அனைத்து குடிமக்களுக்கும், சமூக, பொருளாதார, அரசியல் நீதி கிடைக்குமாறும், எண்ணம், வெளிப்பாடு, நம்பிக்கை, மத நம்பிக்கை மற்றும் மதவழிபாடு இவற்றில் சுதந்திரமும், வாய்ப்புகளிலும் நிலைமையிலும் சமத்துவத்தையும், தனிமனிதர்களுக்கு இடையே சகோதரத்துவத்தை உருவாக்குவதற்கும், தேசத்தின் ஒருமைப்பாட்டுக்கும், தனிமனிதனின் கெளரவத்துக்கும் இடையேயான சகோதரத்துவத்தையும் உருவாக்க உறுதி பூணுகிறோம் ‘

கீழ்க்கண்ட பகுதிகள் எவ்வாறு சிறுபான்மையினர் பங்களாதேஷில் அமைப்பு ரீதியாக ஒடுக்கப்படுகிறார்கள் என்பதை விளக்கும்.

வகுப்புக்கலவரங்கள்

1950இல் நடந்த வகுப்புக்கலவரங்கள் ஏற்கெனவே அனைவருக்கும் தெரிந்த விஷயங்களே. இந்தக்கலவரங்களில் பாதிக்கப்பட்ட இந்துக்களின் நிலையும் அனைவருக்கும் தெரிந்ததே. பாகிஸ்தானிய அரசாங்கம் தனது ராணுவத்தையும் போலீஸையும் இந்துக்களைப் பாதுகாப்பதற்காக அனுப்பியது. ஆனால், இந்த ராணுவமும் போலீசும், இந்துக்களைப் பாதுகாப்பதற்குப் பதிலாக, மாபெரும் அழிவிலும் ஒடுக்குமுறையிலும் இறங்கியது. முக்கியமாக இந்துப்பெண்களுக்கு எதிராக இந்த ராணுவமும் போலீசும் வெறியாட்டம் ஆடியது. அன்று பாகிஸ்தானின் சட்டம் மற்றும் பாராளுமன்ற மந்திரியாக இருந்த ஜோகேந்திரநாத் மண்டல் அவர்களின் ராஜினாமாக் கடிதம் இதனை தெளிவாக்குகிறது. ‘ஒடுக்கப்பட்ட மக்களை மேலும் இந்த ராணுவம் ஒடுக்கியது மட்டுமல்லாமல், இந்த இந்துக்களின் வீட்டில் இருந்த உணவுப்பண்டங்களையும் கவர்ந்து சென்றது. இரவில் ராணுவ முகாம்களுக்கு இந்துப்பெண்களை கட்டாயமாக அனுப்பி வைத்து ராணுவத்தினரின் காம இச்சைகளை தீர்த்துக்கொள்ளவும் வற்புறுத்தியது ‘ 1950இல் நடந்த கலவரங்களின் காரணமாக, இந்துக்கள் தங்கள் பிறந்த நாட்டிலிருந்து வெளியேற கட்டாயப்படுத்தப்பட்டார்கள். 1950-51 வருடங்களில் மட்டும், 25 லட்சம் இந்துக்கள் இவ்வாறு தங்கள் பிறந்த நாடான (பங்களாதேஷ்- அன்றைய பாகிஸ்தான்) விட்டு வெளியேறினார்கள். எந்த அரசியல் கட்சியும், இந்த சிறுபான்மையினருக்கு ஆதரவாகவும், இந்த வெளியேற்றத்தை தடுக்கவும் முயலவில்லை.

நீதித்துறை மூலமாக ஒடுக்குமுறை

பாகிஸ்தானிய அரசாங்கம், ‘East Bengal Emergency Requisition of Property Act 13 (1948); East Bengal Evacuees Administration of Immovable Property Act 24 (1951); East Bengal Prevention of Transfer of Property and Removal of Documents and Records Act (1952). என்ற சட்டங்களை நிறைவேற்றியது. ஒடுக்குமுறையை அதிகரிக்க, பாகிஸ்தான் 1957இல் நாட்டை விட்டு வெளியேறியோர் சொத்து நிர்வாகச் சட்டம் Pakistan Administration of Evacuees Property Act 12 (1957) என்ற ஒன்றையும் நிறைவேற்றியது. ஐக்கிய முன்னணி அரசு கலைக்கப்பட்டதும், ராணுவ ஆட்சி 1958இல் அமல் செய்யப்பட்டது. ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டம் 1962இல் ஆரம்பித்தது. ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தை திசை திருப்ப, அரசாங்கமே 1964இல் ஒரு வகுப்புக்கலவரத்தை உருவாக்கியது. இதன் காரணமாக, கிழக்குப் பாகிஸ்தானில்பாதிக்கப்பட்டவர்கள் நிவாரணச்சட்டம் என்ற ஒன்றை 1964இல் உருவாக்கியது. இந்த அரசாங்கச்சட்டம் பாதிக்கப்பட்ட இந்துக்களுக்கு நிவாரணம் அளிக்கத்தான் உருவாக்கப்பட்டது. ஆனால், நடைமுறையில் அவர்களை இன்னும் ஒடுக்கவே பயன்பட்டது.

1965, 6 செப்டம்பர் அன்று, இந்தியா பாகிஸ்தான் போரின் போது, பாகிஸ்தான் பாதுகாப்புச் சட்டம் – எண்- 23 என்ற ஒன்று உருவாக்கப்பட்டது. இந்தச் சட்டத்தின் கீழ், இந்துக்கள் வெறுக்கும் கறுப்புச்சட்டம் என்றழைக்கப்படும் ‘எதிரி சொத்து பதிவு சட்டம் 1965 ‘ என்ற ஒரு சட்டம் உருவாக்கப்பட்டது.

தாய்நாட்டின் மீது கொண்ட பாசத்தால், இந்துக்களும் பங்களாதேஷின் சுதந்திரப்போராட்டத்தில் பங்கு பெற்றனர். சுதந்திர பங்களாதேஷில் அவர்களது உரிமைகள் மதிக்கப்படும் என்றும், அவர்கள் சம உரிமையோடு வாழ்வார்கள் என்றும் நம்பிக்கை கொண்டிருந்தனர். 1971 ஏப்ரல் 10 ஆம் தேதி, ஷேக் முஜிபுர் ரஹ்மான், இந்துக்களை ஒடுக்கும் எல்லா பாகிஸ்தானிய சட்டங்களும் நீக்கப்படுகின்றன என்று அறிவித்தார். 26 ஆம் தேதி மார்ச் மாதம், 1972இல், பங்களாதேஷ் சொத்து சம்பந்தமான ஜனாதிபதி அவசரச் சட்டம் எண்- 29 நிறைவேற்றப்பட்டது. 1974இல் எதிரி சொத்து சட்ட நீக்கம் எண்-45 அறிவிக்கப்பட்டது. ஆனால், பங்களாதேஷில் இல்லாதவர்கள் சொத்து சட்டம்- எண் 46, 1974 நிறைவேற்றப்பட்டது. அதாவது எதிரிச் சொத்துசட்டம் சட்ட எண் 45 ஆல் நீக்கப்பட்டு, சட்ட எண்-46ஆல் திரும்பக்கொண்டுவரப்பட்டுவிட்டது.

1976இல் ஜியாவுர் ரஹ்மான், சட்ட எண்-46ஐ நீக்கினார். அதன் பின்னர் சட்ட எண் 92ஐ அமல் செய்தார். இது பழங்காலத்திய பாகிஸ்தானிய சட்டத்துக்கு ஈடானது. அரசாங்கமே எல்லா இந்துச் சொத்துக்களுக்கும் உரிமையாளராகவும் விற்க உரிமை உடையதாகவும் ஆகிறது. இந்துக்களின் சொத்து உரிமைகள் அனைத்தையும் பறித்து இந்த சட்டம் அனைத்தையும் அரசாங்கச் சொத்தாக ஆக்கிவிட்டது. இதே நேரத்தில், பங்களாதேஷின் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை கொள்கைகள் நான்கை மாற்றியதும், மீண்டும் ராணுவ ஆட்சியை கொண்டுவந்ததும், மக்களுக்கான அடிப்படை உரிமைகளை ரத்து செய்ததும் இந்த ஜியாவுர் ரஹ்மானே என்பது நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது. மேலும், 23 மே 1977இல் வெளியிட்ட சர்க்குலர் மூலம், மேலும் அதிகமான எதிரிச் சொத்துக்களை கண்டுபிடிக்க பிராந்திய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு, இந்துக்களை பாடாய்படுத்தியதும் இவரே என்பதும் கணக்கில் கொள்ள வேண்டியது.

அடுத்த ராணுவ சர்வாதிகாரி ஜெனரல் எர்ஷாத் தனது முந்தைய ராணுவ அதிகாரியின் காலடித்தடங்களிலேயே சூலை 31ஆம் தேதி முந்தைய அதிகாரியின் 23 மே சர்க்குலரை நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக இஸ்லாம் மதத்தை பங்களாதேஷின் அரசாங்க மதமாக அறிவித்தார். இந்த சட்டம் மேலும் இந்துக்களை ஒடுக்கவும் நசுக்கவும் பிராந்திய அதிகாரிகளுக்கு ஊக்கம் அளித்தது.

கலேதா ஜியா அரசாங்கம் இந்துக்களை இன்னும் நசுக்க வேண்டி, 1993 நவம்பர் 4இல் எதிரி சொத்துக்களை விவரணம் செய்யச்சொல்லி சர்க்குலர் அனுப்பினார்.

அவாமி லீக் அரசாங்கத்தின் இறுதிக்காலத்தில் இந்த கறுப்பு சட்டம் நீக்கப்பட்டது. இருப்பினும், அது நடைமுறையில் பயன்படுத்தப்பட்டே வருகிறது.

Hindu Population Variation of the Hindu population with time as presented in Table 1 raises many questions.

கீழ்க்கண்ட அட்டவணையில் காணப்பட்டிருக்கும் இந்து ஜனத்தொகை மாறுதல் குறித்த தகவல்கள் பல கேள்விகளை எழுப்புகின்றன.

அட்டவணை : 1 : இந்து மக்கள் ஜனத்தொகை

வருடம், முஸ்லீம்கள்(%), இந்துக்கள்(%)

1951 76.9 23.1

1961 80.4 19.6

1974 85.4 14.6

1981 86.6 13.4

1991 87.4 12.6

கடந்த 50 வருடங்களில், இந்த துணைக்கண்டத்தில் சராசரி மக்கள்தொகைப் பெருக்கம் சுமார் 3 மடங்கு. இதை கணக்கில் எடுத்துக்கொள்ளும்போது, பங்களாதேஷில் இந்துக்களின் மக்கள்தொகை சுமார் 4 கோடியாக இருக்கவேண்டும். ஆகவே இந்த மக்கள்தொகை கணக்கெடுப்பபைப் பார்க்கும்போது சுமார் 25 மில்லியன் (2.5 கோடி) இந்துக்கள் காணவில்லை என்பது தெளிவாகிறது. இது விளக்கமுடியாத பல கேள்விகளை எழுப்புகிறது.

சிறுபான்மையினர் அரசுப்பணிகளிலும், வேலையிலும், கல்வியிலும் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பதை கீழ்க்கண்ட அட்டவணைகள் குறிப்பிடுகின்றது.

Members of the Parliament

Table 2: Representation of Hindus in the parliament

பாராளுமன்றத்தில் இந்துக்களின் பிரதிநிதித்துவம்

வருடம் மொத்தம் இந்து பிரதிநிதிகள்

1954 309 72

1973 315 12

1979 8

1988 4

1991 11

1996 9( ?)

2001 3

இந்துக்களின் இன்றைய மக்கள்தொகையைக் கணக்கில் எடுத்தாலே, பங்களாதேஷ் பாராளுமன்றத்தில் இருக்கவேண்டிய இந்துப்பிரதிநிதிகளின் எண்ணிக்கை 40.

ராணுவத்திலும், எல்லைக்காவல் படையிலும் போலீஸ் துறையிலும் மிகமோசமாகவே இந்துக்களின் பிரதிநிதித்துவம் இருக்கிறது.

ராணுவம்

Table 3: Representation of Hindus in army

Position Total Hindu (%)

Jawan 80,000 0.63

Second LT/LT 900 0.33

Captain 1,300 0.62

Major 1,000 4.0

Lt Col 450 1.7

Colonel 70 1.4

Brigadier 65 ( ?)

Maj General 22 4.5

Air Force and Navy

விமானப்படையிலும் கப்பல்படையிலும் இந்துக்களின் பிரதிநிதித்துவம் ஏறத்தாழ சூன்யம்.

எல்லைக்காவல் படையில் இந்துக்களின் சதவீதம் 0.75%

போலீஸில் இந்துக்களின் சதவீதம்

Position Total Hindu (%)

Ordinary 80,000 2.5%

ASP/Asst Commissioner 635 6.3

DSP/Addl SP 87 2.3

SP/AIG 123 8.1

DIG 18 5.5

Add/IG 6 0

IG 1 0

அரசாங்க பணியிலும் இந்துக்களின் சதவீதம் மிகவும் குறைவே.

இதுவரை பங்களாதேஷின் சரித்திரத்தில் ஒரே ஒரு இந்துவே வைஸ் சான்ஸலராக ஒரு பல்கலைக்கழகத்தில் இருந்திருக்கிறார். இருந்தும், அவர் சட்டத்துக்குப் புறம்பாக அவர் சார்ந்திருந்த மதம் காரணமாக பதவியிலிருந்து தூக்கப்பட்டார். வைஸ் சான்ஸலர் தவிர அரசாங்கம் ப்ரோ வைஸ் சான்ஸலர் என்பவரையும் பல்கலைக்கழகங்களுக்கு நியமிக்கிறது.ஏராளமான இந்து கல்வியாளர்கள் இருந்தும், இதுவரை ஒரு இந்துவும் இந்த பதவிகளுக்கு நியமிக்கப்பட்டதில்லை. உயர்படிப்புக்கு கொடுக்கும் கல்வி மான்யங்களிலும், மருத்துவக்கல்வி இடங்களிலும், பாரபட்சம் மிகவும் பரவலாக இருக்கிறது.

ஆயினும், பல கோடி டாலர்கள் மதரஸாக்கள் மற்றும் இஸ்லாமியப் பல்கலைக்கழகங்களில் செலவிடப்படுகின்றன. சமஸ்கிருத ‘டோல் ‘கள் மற்றும் பாலி மொழிக் கல்வி நிலையங்கள் பெயரளவுக்கே இருக்கின்றன. சிறுபான்மையின் கல்வி நிலையங்களில் இருக்கும் சிறுபான்மையின மத போதகர்கள் சம்பளம் மற்றும் இதர படிகளில் பாரபட்சம் காட்டப்படுகிறார்கள்.

பங்களாதேஷ் அரசாங்கம் ஏராளமான பணத்தை இஸ்லாமிய மத இடங்களுக்கே செலவழிக்கிறது. இந்து புத்த மற்றும் கிரிஸ்துவ சர்ச்சுகளுக்கு அரசு உதவி மறுக்கப்படுகிறது. எல்லா அரசாங்க, மற்றும் அரசாங்கம் சாராத அனைத்து கல்வி நிலையங்களிலும் மசூதி மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.

வானொலி மற்றும் தொலைக்காட்சியில் இஸ்லாமிய மத புத்தகங்களிலிருந்து மட்டுமே போதனைகள் செய்யபப்டுகின்றன. இஸ்லாமிய மத விழாக்கள் மட்டுமே நாடு தழுவியவையாக அரசாங்க ஆதரவுடன் நடத்தப்படுகின்றன.

சவர் நினைவிடம் என்பது பங்களாதேஷ் சுதந்திரப்போராட்டத்தின் போது உயிர்துறந்த அனைத்து மக்களின் நினைவாகவும் எழுப்பப்பட்டது. எல்லா மதத்தைச் சார்ந்தவர்களும் அந்த சுதந்திரப்போராட்டத்தில் கலந்து கொண்டார்கள் என்பது உண்மை நிகழ்ச்சி. ஆனால், அந்த நினைவிடத்தில் ஒரு மசூதியே கட்டப்பட்டது. மற்ற மதச்சிறுபான்மையினரின் பங்களிப்பு உதாசீனம் செய்யப்பட்டது.

பொதுவாக, அரசாங்கப்பணத்தில் பிரபலமான மற்றும் தேசத்தலைவர்களின் படங்களே இருக்கும். பங்களாதேஷின் பணத்தில் பல மசூதிகளின் படங்கள் மட்டுமே இருக்கும். மற்ற மதச்சிறுபான்மையினரின் மத இடங்கள் எந்தவிதமான முக்கியத்துவத்தையும் பெறுவதில்லை.

இறுதியாக.

ஏற்கெனவே பங்களாதேஷின் மெதுவாக இனப்படுகொலை நடந்துவருகிறது என்பது கண்கூடு. 01 அக்டோபர் 2001இல் நடந்த ஆட்சி மாற்றம் இந்த இனப்படுகொலையையும் இனச்சுத்திகரிப்பையும் வேகமாக்கியிருக்கிறது.

சிறுபான்மையினருக்கெதிரான சமீபத்திய கொடுமைகளும் ஒடுக்குமுறைகளும், இந்த சிறுபான்மையினர் தங்களது தாய்நாட்டில் தொடர்ந்து வாழ்வது என்பது கேள்விக்குறியாக ஆக்கியிருக்கிறது. இந்த சிறுபான்மையினரை பாதுகாப்பது கீழ்க்கண்ட வழிமுறைகள் மூலமே முடியும்.

ஃ அரசாங்கத்தையும் மதத்தையும் பிரிப்பது

ஃ மதச்சார்பின்மையை பங்களாதேஷின் அரசியலமைப்புச் சட்டத்தில் மீண்டும் கொண்டுவருவது.

ஃ உண்மையிலேயே சுதந்திரமான நீதித்துறையை உருவாக்குவது

ஃ இதுவரை உருவாக்கப்பட்டிருக்கின்ற பாரபட்சமான சட்டங்கள் மற்றும் அறிக்கைகள் மற்றும் சுற்றறிக்கைகளை நீக்குவது

சமீபத்திய அரசாங்கம் தூண்டிய அக்கிர அடக்குமுறைகள் நாட்டை இன்னும் இருட்டுக்குள் தள்ளி வெளியேற முடியாத குகைக்குள் தள்ளிவிடும் என்பதையே அறிவுறுத்துகின்றன.

துணை நூல் பட்டியல்

Kankar Sinha (1997). Communalism and Minority Crisis. Dhaka: Anannya Publishers

Bhowmik N and Dhar B (1997). Anjali. Dhaka: Dhaka Mahanagar Puja Committee

Dutta C R (1993). The Disgrace

Series Navigation