பகடை

This entry is part [part not set] of 33 in the series 20110424_Issue

ஷம்மி முத்துவேல்


சிக்கல்கள் பிரித்து எடுக்கப்பட்ட உறவுகளுடன்
சதுரங்கம் புதிதாய் !
பகடைகள் உருட்டப்பட
தோல்விக்கான பயணம்
சூசகமாய் துவங்குகிறது……

64 கட்டங்களுக்கும் ஓர் அவதாரமென
சூழ்ச்சிகளும் சந்தர்ப்பங்களும்
குதிரையும் யானையுமாய் …

காவல்கள் வலுப்பட்ட அரணுக்குள்
பத்திரமாய் அரசனும் அரசியும்
போர் சூத்திரங்கள் மாற்றப்பட
நிசப்த வெளிகளில் இடைபுகுந்த
வெள்ளை தாயாதிகளால்
தோற்கடிக்க படுகின்றார்
கருப்பு ராஜாவும் ராணியும் ….

Series Navigation