This entry is in the series 20040401_Issue

சிக்கந்தர் பாட்சா


என்னுள் நீ
உடைந்து நொறுங்கிய தருணத்தில்
உனக்கான என் உணர்வுகள்
கற்பிழந்துவிட்டிருந்தது
என் தன்மானத்தில் தலையிலெறி
குத்தி கிழித்து குதறி
கோரதாண்டவமாடியிருந்தாய்
உனக்காய் செலவழிந்த நொடிகள்
கழிவுப் பொருள்களாய்
காற்றில் இரையப்பட்டிருந்தது
நீ விட்டுப்போன இதயத்தின்
வெறுமை பக்கங்களில்
வெறுப்பு வந்தடைத்திருக்க
இறந்துபோயிருந்தேன்!

sikkandarbasha@hotmail.com

Series Navigation