நேசி மலரை, மனசை

This entry is part [part not set] of 42 in the series 20050408_Issue

டான் கபூர்


எல்லாமே.
எல்லாமே.
எழுந்து இடுப்பை உயர்த்திடர்
இயலாது போகிறது.
எலும்பு முறிந்த நாய் மாதிாி.

எல்லாம்,
எல்லை கடந்த எல்லாக் கந்தல்களும்
இதயத்தில் விழுந்து
நெருப்பிட விளைகிறது.

மணம் பரப்பும் ப+க்களாகவோ.
மணம் நுகரும் மூக்களாகவோ.
இவன் இல்லை.
ஊன்று கோலில் நடை பயிலும்
எல்லாம்
எல்லாம்
இவனில்.
போய்ச் சாம்பல்
காற்றில் பறக்க சிறகு முளைத்த உயிர்கள்.

நீலவான் ஒளிவிடும்.
சந்திரனையும்
சூாியனையும்
கொஞ்ச நட்சத்திரக் குழந்தைகளையும்
பெற்றெடுத்த மாது.
நான் லயித்துக் கிடக்க.

பச்சையையும்
ப+க்களையும்
தென்றலையும் மேவிவிடும்
இன்னொரு மாது
பூமி
நான் ருசித்துக்கிடக்க.

கபடத்தோடு பதுங்கி நிற்கும் கடுவன் போல
புாிபடாத ஒன்றாய்
காத்துக்கிடக்கிறது…

நேசி.
மலரை.
மனசை.

நானும் நீயும்.

டான் கபூர், இலங்கை
—-

Series Navigation

டான்கபூர்

டான்கபூர்