நேசத்துடன் காதலுக்கு
Published March 26, 2009 • By
ஸ்ரீபன்
ஸ்ரீபன்

காதல் அதன்
அழகான தருணங்களில்
எதையாவது எதிர்பார்க்கிறது
கடைக்கண் பார்வையையோ
ஒரு சிறு புன்னகையைத்தானும்
பரிசாகக் கேட்கிறது
கனவுகளை பூக்களால் நிரப்புகிறது
வெறும் வார்த்தைகளைக்கூட
கவிதையாக்குகிறது
கூட்டத்தின் நடுவில் குழந்தையாகி
அசடு வழிகிறது
முரண்பாடுகளை ரசித்து
மறந்துபோகிறது
ஏமாற்றங்களை மட்டும்
ஏரிமலைக்கு முன்னய
அமைதிபோல
தனக்குள்ளேயே புதைத்து
மௌனித்துப் போகிறது
ஸ்ரீபன்