நீள்கிறது கவலை

This entry is part [part not set] of 31 in the series 20050707_Issue

பிச்சினிக்காடு இளங்கோ


(சிங்கப்பூர்)

மதமும்
மதத்தால் வரும் மதமும்
இல்லாத என்
எதிர்காலத்தோழன்
என்னபாடு படுவான்!

‘ எங்கும் இருக்கிறான்
இறைவன்
எல்லாமாகவும் இருக்கிறான்
இறைவன் ‘-விடு என்னை
என்பவனை
என்னபாடு படுத்தும்
இந்த உலகம்!

இறைவன் இருக்கிறான்
என்பதைவிடவும்
அவன்
எப்படி இருக்கிறான்
என்பதே முக்கியம்

எப்படி இருக்கிறான்
என்பதை விடவும்
அவன்
எந்த மதத்தினன் என்பது
இன்னும் முக்கியம்

‘மதமில்லாத இறைவனா ‘
உன்னை மன்னிக்கமாட்டோம்

இறைவனில்லாத
மதமிருக்கமுடியும்
மதமில்லாத
இறைவனிருக்கமுடியாது

மதமில்லதாத ஓர்
இறைவனை நம்பும்
உன்னைவிடவும்
இறைவனே இல்லை என்பவன்
தெளிவானவன்

‘ஒன்று
இறைவனை இல்லையென்று சொல்
அல்லது
அவன்
எந்த மதத்தினன் என்று சொல் ‘

மதமில்லாத இறைவன்
எனச்சொல்லும் உன்னையும்
மதமில்லாத இறைவனையும்
மன்னிக்கமாட்டோம்

மதமில்லாத மனிதனுக்கு
எதிர்காலம் உண்டா ?
மதமில்லாததோர்
எதிர்காலம்தான் உண்டா ?

pichinikkaduelango@yahoo.com

Series Navigation