நாம் புதியவர்கள்

This entry is part [part not set] of 50 in the series 20040226_Issue

புதியமாதவி


====

நான் தென்றலாக
வரவில்லை
அதனாலெயே
புயல் என்று
யார்.. சொன்னது ?

நான் கனவுகளாக
வரவில்லை
அதனாலேயே
நிஜம் என்று
யார்.. சொன்னது ?

நான் காதலியாக
வரவில்லை
அதனாலேயே
சகோதரி என்று
யார்.. சொன்னது ?

நான் மழையாக
வரவில்லை
அதனாலேயே
சூரியன் என்று
யார்.. சொன்னது ?

நான் விடியலாக
வரவில்லை
அதனாலேயே
இருட்டு என்று
யார்.. சொன்னது ?

நான் அதாக
வரவில்லை
அதனாலேயே
இதாக இருக்க
யார்.. சொன்னது ?

நான் நானாக
நீ நீயாக
நீயும் நானும்
புதிதாகப் பிறந்தவர்கள்..

நான் யார்…. ?
நாளைய
அகராதி
எழுதும்….
அதுவரை
இருக்கின்ற சொற்களில்
என்னைக் கழுவேற்றி
உன்னை
முடித்துக்கொள்ளாதே.

—-
puthiyamaadhavi@hotmail.com

Series Navigation