நான் கடவுள் பற்றிய மணி அவர்களின் கட்டுரை மிக அருமை

This entry is part [part not set] of 30 in the series 20090219_Issue

தவநெறிச்செல்வன்


ஆசிரியர் அவர்களுக்கு

நான் கடவுள் பற்றிய மணி அவர்களின் கட்டுரை மிக அருமை, இப்படியும் விமர்சனம் எழுத முடியுமா?
வெறுதே படம் பற்றி எழுதாமல், அதில் மும்பையின் ஞாயிறு பற்றிய நினைவுகள் நடப்புகள் இரண்டும் எழுதி ஒரு
அழகான கதை போல இருந்தது,

//இது பிரமாண்டமல்ல. சங்கரால் ஐநூறு பிச்சைக்காரர்களை கொண்டு படம்பிடிக்க முடியும். ஆனால் பாலாவினோடது

ஆழமான ஒன்று. It has depth in it. பாலா ஒரு அகோரி. இயக்குநர்களில் சைவம், அசைவம், வைஸ்ணவம் எல்லாமுண்டு.

இவர் ஒரு அகோரி கல்ட். குருதத், ரே, பாலசந்தர், பாரதிராஜா எப்படி ஒரு கல்ட்டோ(cult) பாலாவும். நீங்கள் ஏன்

கிராமத்தை வைத்துமட்டும் படம் எடுக்கீறீர்கள் என்று பாரதிராஜாவை கேட்க முடியாதோ, கேட்க கூடாதோ (?)

பாலாவையும் ஏன் இப்படி, குரூரமாய், மன உடல் நிலை பிறழ்ந்தவர்களை, இருண்ட பகுதியை மட்டும் காட்டுகிறார் என்று கேட்கக் கூடாது.//

மிக அருமை

//கல்யாணமாகி வருடங்களானாலும் புதுமணத்தம்பதிகளை பார்க்கும்போது எனக்குள் சில்லென சிறகு விரிகிறது. ஏதோ ஒன்று. ‘நல்லாயிருங்க’ என்று அருகில் போய் ஆசிர்வாதம் செய்யத்தோன்றும். ‘ஏன் மானுடன் இந்தக்காதலோடு காலமெல்லாம் இருக்கமுடியவில்லை’ கேள்விகள் மனதை போர்த்தும்//

உண்மைதான் அற்புதமாக இருந்தது.

தவநெறிச்செல்வன்

Series Navigation