நரேந்திரனின் கட்டுரை பற்றி

This entry is part [part not set] of 48 in the series 20040311_Issue

பாலாஜி சீனிவாசன்


திண்ணையில் நரேந்திரனின் கட்டுரை படித்தேன் (எலோயீ! எலோயீ! லாமா சபக்தானி!)

கட்டுரையில் பல இடங்களில் தவறான தகவல்கள்.

1. ‘கலிபோர்னியாவில் இருக்கும் ஹாலிவுட்டில் தனக்கென சொந்தமாக ஒரு சர்ச் கட்டியிருக்கும் கிப்ஸன் ‘ – கிப்ஸனின் சர்ச் மாலிபூவில்

உள்ளது, ஹாலிவுட்டில் இல்லை.

2. ‘இந்தப் படத்தைப் பார்த்து ரசித்த போப் ஜான் பால் ‘ – போப் இதைப் பற்றி எந்த கருத்தும் வெளிப்படையாக சொல்லவில்லை என்று

மறுப்பு வந்தது வாடிகனிலிருந்து.

3. ‘சைக்கோத்தனமாக சித்தரிக்கப் பட்டிருக்கும் கிரேக்கப் படை வீரர்கள் ‘ – அவர்கள் ரோம வீரர்கள், கிரேக்கர்கள் இல்லை.

4. ‘அன்னை மரியாளாக நடித்த இஸ்ரேலிய நடிகைக்கு ‘ – மேரியாக நடித்த Maia Morgenstern ஒரு ரோமேனியன். இஸ்ரேலிய நடிகை

இல்லை.

இதில் ‘இயக்குனருக்கு இந்தப் படத்தில் வேலையே இல்லை ‘ என்று அசட்டுத் தனமான விமர்சனமும் Ernst & Young பற்றியும் ஆஸ்திரேலியர்கள்

பற்றியும் தேவையில்லாத புராணமும் வேறு. ஆங்கிலத்தையும் விட்டுவைக்கவில்லை. ‘dancing towards the bank ‘ என்று புது பிரயோகம்

வேறு (laughing all the way to the bank மறந்து போயிருக்கலாம்). இந்த மாதிரி தரமில்லாத கட்டுரைகளை வெளியிடுவது

திண்ணைக்கு இழுக்கு.

—-

balaji_cheenu@yahoo.com

(தகவல் பிழைகளைச் சரிபார்க்க திண்ணை குழு தவறியதற்கு வருந்துகிறோம். எதிர்கால வாசகர்களுக்காக இந்தப் பிழைகள் கட்டுரையில் சரி செய்யப் பட்டுள்ளன. சுட்டுக் காட்டிய பாலாஜி சீனிவாசனுக்கு நன்றி. கட்டுரை ஆசிரியர்கள் தகவல்களைச் சரிபார்த்துவிட்டு திண்ணைக்கு ஆக்கங்களை அனுப்பும்படி கேட்டுக் கொள்கிறோம். – திண்ணை குழு)

Series Navigation

பாலாஜி சீனிவாசன்

பாலாஜி சீனிவாசன்