நடை – பகுதி – 4 – திருப்பதி பெருமாள்

This entry is part [part not set] of 30 in the series 20050909_Issue

வெங்கட்ராம கிருஷ்ணகுமார்


ரஜினி திருப்பதிக்குப் போவது செய்தியாக வருகின்றது. நாங்கள் 160 கி.மீ நடந்து மலைக்கு போய், மலையேறி பிறகு பெருமாளை 8 மணி ந்றம் காத்துருந்து பிறகு பார்த்த போது பெருமாள் மட்டும் எங்களைக் கவனித்தார் என்று சொல்ல வேண்டும். புத்தூரில் கால் கட்டுக்களுடன் சொங்கிப் போயிருந்த என்னை நண்பன் எழுப்பி அதிகாலை 1 மணிக்கே கிளப்பிவிட்டான். இன்று நண்பகல் திருப்பதிக்கு போகணுமடா! ே ?ாட்டல் அசோகாவில் நல்லா சாப்பாடு இருக்கு!

பெருமாளை மாலைக்குள் பார்க்க வேண்டுமென்று கட்டளையே போட்டான். மெதுவாக கால் வலிக்க கொல்லைக்குப் போய்விட்டு, காலைக்கடனைக் கழித்துவிட்டு மேலும் கால்களைப் பதம் பார்க்க விறுவிறுவென்று கல்யாண மண்டபத்தை விட்டு வெளியே வந்தோம். இஅர்வில் நிலாவின் மெலிதான வெளிச்சத்தில் புத்தூரை விட்டுக் கிளம்பி, திருச்சானூர் போகலானோம். மீண்டும் சரக் சரக்கென்று கற்கள் நிறைந்திருந்த தார் ரோட்டில் கால் பொதிய நடந்தோம். இரு புறமும் புதர்களும், அவ்வப்போது தெரியும் கொள்ளிக் கண்களையுடைய காட்டுப் பூணைகளும், ஆந்தைகளும் எங்களைப் பயமுறுத்தின.

மச்சி! நம்ம தெரு பூனைக் கண்காரிமாதிரி இந்தப் பூனைகள் இருக்கே ? என்று வம்பிழுத்தேன். உடனே, பூனைக் கண், முயல் போன்ற மார்புகள், மான் போன்ற விழிகள், மயில் போன்ற நடை, பாம்பு போன்ற நெளினம் என்று 90% தமிழர்களுக்கே உரிய பிடித்த ‘பெண்கள் ‘ பற்றி வெட்டிப் பேச்சு வளர்த்தேன்.

பெருமாளைப் பார்க்கும் போது இப்படி நினைக்கலாமா என்று ஒரு பக்தி தேசிகன் கேட்டான். நாங்க ‘பத்மாவதித் தாயாரைப் பற்றியும் நினைக்கின்றோம். எதிர்காலத்தில் பெருமாள் எங்களுக்கு எப்படிப்பட்ட பெண்களைக் கட்டி வைப்பார் என்று யோசிக்க வேண்டாமா ? ‘ என்று பதிலுரைத்தோம். ஒரு கட்டத்தில் ஒரு மேட்டினருகே வந்து பள்ளமாக ரோடு இறங்கும் போது தூரத்தே நாமத்துடன் பெருமாள் மலையும், கீழே கோவில்களின் மின்விளக்குகளும் பளிச்சிட்டன. ஒரு வைகுண்டத்தை அடைந்தது போன்று இருந்தது.

தெய்வத்தை நேரில் கண்டதைப் போன்று இருந்தது. அந்த தெய்வீக எண்ணத்துடன் மேலும் வம்புப் பேச்சுகள் தொடர ரேணிகுண்டா பக்கம் வந்து சேர்ந்தோம்.

குண்டாக இருந்த ஒரு ஆந்திர அழகி (தினத் தந்தி ‘அழகி ‘ இல்லை!), கண்கள் பெரிதாக விரிய ‘காப் வேண்டுமா ? ‘ எனக் கொஞ்ச, ‘என்ன பேர் ? ‘ என்றுத் தெலுங்கு மாதிரி தமிழில் பேசினோம். ‘ரேணுகா ‘ என்றூ அவள் சொன்ன இனிமையானக் குரலுக்காக 13 காபி ஆர்டர் கொடுத்தோம்.

திருப்பதியின் காலை வெயிலில் அவளைப் பார்த்திருந்தால் அப்படிக் கொடுத்திருக்க மாட்டோம். ஏதோ அவ்வளவு நடந்து வந்ததால் மனதிற்கு மருந்தான அந்தச் சுக்குக் காபியைக் குடித்து விட்டு ஒரு வயலில் இறங்கினோம். இப்படியே போனால் ஒரு கோவில் வருமென்று ஒரு பெரிசு சொல்லிவிட்டு, முன்னால் தவ்விக் குதித்து ஓடியது. நாங்கள் மெதிவாக ரேணுவாகாவை மனதில் வணங்கியபடி கோவிலண்டைப் போனால் அதன் பெயர் ‘ரேணுகா எல்லம்மன் கோவில் ‘, கன்னத்தில் போட்டபடிக் கோவிலைத் தாண்டி ரயில் நிலையம் அருகே சென்றோம். பேய் படத்தில் வருவதைப் போன்று ஒற்றைப் பிளாட்பாரத்தோடு அரு ரூமுடன், ஒரு அழுக்குக் குடிநீர் தொட்டியுடன், ஒரு சிமெண்ட் பெஞ்சுடன் ஒத்தை டிராக் உள்ள ரயில் நிலையமது.

‘ஒரு டிரெயின் மட்டும் வருமாடா ? ‘ என்றக் கேள்வியைத் தப்பாகப் புரிந்து கொண்டு ‘உன்னைப் பார்த்தா ஒருத்தியும் வர மாட்டா ! ‘ என்று நண்பன் சொல்ல ‘தேவுடா! தேவுடா ‘ என்று பெருமாளைக் கூப்பிட்டேன். ஒரு பெரிசு அதற்கு ‘கோவிந்தா! ‘ என்று கூப்பிடு ! கேட்பது கிடைக்கும் ‘ என்று கூறியது. அதன் பிறகு ஒரு வருடத்தில் எனக்குத் திருமணம் ஆனது விந்தை.

காலைப் புலர ஆரம்பித்தது. அல்லி மலர்கள், தாமரைகள் இருந்த ஒரு குளத்தினருகே கால்களை நனைத்து சிறிது இளைப்பாறினோம்.

‘ஏண்டா அந்தக் காலத்தில் வடக்கே பயணம் போய் இப்படி தான் உயிர் விடுவார்களாமே ! ‘ என்று கேட்டு வைக்க ‘இங்கேயே கிட, பாடை இலவசமாகக் கிடைக்கும்! பனை ஓலைகளும் விலை மலிவு ‘ என்று கொடூரமாக என் நண்பர்கள் விடை அளித்தனர். உடலில் நடந்த நடை மூலம் சுமார் பத்து கிலோ குறைந்திருக்கும். சீக்கிரம் சாப்பிட்டு நல்லா உடம்பைத் தேற்றிவிட வேண்டுமென்று நினைத்தேன். தற்போது இரண்டு கிலோ குறைக்கப் போராட வேண்டியிருக்குது. திருச்சானூர் கிராமம் தெரிய ஆரம்பித்தது. பெருமாள் கோவில்களில் ஒரு செளகரியம். காலையில் நல்லா பொங்கல் கிடைக்கும். அன்று வடையும் (ஆஞ்சனேயர் அருளால்) தளிகைப் பண்ணியிருந்தார்கள். அந்த வாசனையை மோப்பம் பிடித்தவாறு, பத்மாவதி தாயாரை வணங்கி கோவில் குளத்தினருகே அனைவரும் குளிப்பதைப் பார்த்தோம். நம்ம பங்கிற்கு நல்லா குளித்து கோவில் குளத்தினை மேலும் ‘தூய்மைப் படுத்துவோம் ‘ என்று

குளித்தோம். எங்களைப் போன்ற ‘ஆண்டிகளும் ‘, மேலும் பல பிச்சைக்காரர்களும், முடியை மழித்தவர்களும் நீரில் மூழ்கி எழ, பக்தியுடன் குள நீரை கையால் விலக்கி (அப்படி தள்ளினால் அழுக்கு பக்கத்தில் போகி விடுமாம் என்றான் என்நண்பன்! அவன் தாண் பக்கத்தில் குளித்தான் !), சொம்பினால் மொண்டு குளித்தேன். வாயில் போன நீரைப் பளிச்சென்று குளத்திலேயேத் துப்பி என்னால் ஆன பக்தியைக் காண்பித்தேன்.

என்னைப் போன்று ஒருவர் நீரில் துப்பியதைக் கையில் எடுத்துக் கீழேவிட்டு மந்திரம் சொல்லி ‘நாராயணனுக்கே சம்ர்ப்பணம் ‘ என்றார்.

‘கடவுளே ! என்னை மன்னித்துவிடு ‘ என்று கூலாகச் சொல்லிவிட்டு என் கசக்கிக் கட்டியக் கந்தையைக் கட்டினேன். துவைத்த ஜட்டியைத் தலையில் தொப்பி போன்றுக் கவிழ்த்து காயப் போட்டுக் கொண்டு சுத்தமாக திருப்பதி நடக்கலானேன். புகைக் கக்கிய லாரிகள் அருகே செல்ல, டிராபிக் உணர முடிந்தது.

திருப்பதியின் எல்லை சமீபித்தது. எதையோ சாதித்து போன்று இருந்தது. என்ன என்று தெரியவில்லை. நடந்து பாருங்கள்! எல்லாரும் உணர்வீர்கள். மற்றவர்கள் மெதுவாகச் செல்ல, எங்கிருந்தோ எனக்குள் உற்சாகம் பெருக மற்றவர்கள் அனைவரையும் விட வேகமாகச் சென்றேன். அசோகா ஹோட்டலில் காத்திருக்கும் ‘பஃபே உணவு ‘ தான் காரணம் என்று யாரிடமும் சொல்லவில்லை. திருப்பதி நகரத்து சிறுவர்கள், சிறுமிகள் பள்ளி செல்லும் காட்சியைக் கண்டவாறு சென்றோம். எங்களைப் பார்த்து ‘கோவிந்தோ! ‘ என்று அன்புடன் விளித்தனர்.

கோவிந்தனைக் காணத் கீழ் திருப்பதி வந்த்டோம். வந்தவுடன் மேல் திருப்பதிக்குப் போகும் பேருந்துகளைக் கண்டவுடன் ஏறி சீக்கிரம் பெருமாளைப் பார்த்து விடலாமா என்ற ஆசைப் பிறந்தது. அதை அடக்கிக் கொண்டு, பெருமாளை ஏமாற்றக் கூடாது என்று சபதம் புரிந்தோம். பிறகு அசோகா ஹோட்டலில் தஞ்சம் புகுந்தோம். சாதாரண சமயத்தில், எங்களைப் போன்றவர்களி அந்த ே ?ாட்டலில் அனுமதித்திருக்க மாட்டார்கள். ஏடோ பணம் வாங்கினப் பாவத்திற்காக எங்கள் அனைவரையும் அனுமதித்தனர். பஃபேயை ஒரு கை, கால் பார்த்தோம். வலிதாங்காமல் தரையில் உட்கார்ந்து உணவை வீடு கட்டிய ஆத்மாக்களும் உண்டு. நாகரிகம் பார்க்கும் மனது கூட மறுத்து கீழே உட்கார வைத்தது. மனிதன் நிலைமை மாறினால் எதையும் செய்வான் என்று எங்களுக்குப் புரிந்தது. எழ முடியாமல் தவித்த எங்களுக்கு வெள்ளை ஆடையணிந்த சர்வர்கள் உணவைப் பறிமாறினர். நன்கு சாப்பிட்டோம்.

ஏற்பாடு செய்திருந்த அசோக் லேலண்டு நிறுவத்தினருக்கு நன்றி சொல்லிவிட்டு, மேல் திருப்பதிக்கு மலையேறக் கிளம்பினோம்.

முட்டியை ஒடிக்கும் காளி கோபுரத்தில் ஏறி, மலைப் பாதை வழியாகக் கிளம்பினோம். மற்ற நண்பர்கள் முன்னால் ஏறி சாதிக்க வேண்டுமென்று அவசரமாக ஏறி, அனைவருக்கும் முன்னால் மேலேப் போய் சேர்ந்தேன். அந்த 4 மணி நேர நடையினை மற்க்க முடியாது. ஒரு இடத்திலும் உட்காராமல், வழியே மோர், கலர் சோடா போன்றவற்றைக் குடித்துவிட்டு மாரத்தான் வீரன் போன்று நடந்தேன். துணைக்கு நின்றிருந்த கருடன், மற்றும் அனுமாரைத் துணைக்குக் கூப்பிட்டேன். படிகளின் அருகே இருந்த புதரில் மாலைக் கடனைச் சில நண்பர்கள் கழித்தனர். மேலே ஏற மேலே ஏற, காற்றுக் குளிர ஆரம்பித்தது.

ஒலிபெருக்கிகளில் எம்.எஸ். சுப்புலக்சுமியின் பாடல்கள் மெலிதாகக் கசிய, அடுத்தடுத்த படிகளைக் கடந்டோம். மலைச் சுனையாகச் சில பாறைகளில் வழிந்தோடிய நீரினைப் பருகிப் புத்துணர்ச்சி கண்டோம். பசுமையான் காடுகள் அடர்ந்த மலைகள் அக்கம் பக்கத்தில் தென்பட இயற்கையையும் கண்டு களித்து, ?ிந்துக்களின் வாடிகன் நகரமான ‘திருப்பதி ‘ காண மேலே விழைந்தோம். கூட வந்த ஒருவன் மயங்கி விழ, அவனைக் கைத்தாங்கி மேலே அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது.

‘பாண்டேஜ் பாண்டியன் ‘ என்று என்னைக் கேலி பண்ணிய அவனைத் தோளில் தாங்கி கரை சேர்த்தேன். அனைவரும் கிரங்கிக் கிடக்க மேலே அறையைப் ‘புக் ‘ பண்ணி அனைவரையும் வழி காட்டி செல்ல ஆசைதான்! ஆனால் மேலே நானும் சொங்கிப் போகிவிட, ஒரு பெரிசு எங்களுக்கு எல்லா அறைகளையும் புக் பண்ணி கொடுத்தது. அந்தப் புண்ணியத்தினால் அவரை இனிமேல் பெரியவர் என்று தூயத் தமிழில் அழைக்கலாம் என்று முடிவு செய்தோம்.

ஆனால், ஒன்று சொல்லனும். பாலாஜி மனது வைத்தால் (மனசு மனுசனுக்குத் தானே, கடவுளுக்குமா ? என்று என் மன்சு கேட்டது ?), சீக்கிரம் பார்த்து விடலாம். அன்று மன்சு வைக்காததால், சுமார் 6 மணி நேரம் கழித்து பார்க்க நேரிட்டது. அந்த 6 மணி நேரம் எங்கள் நடைப் பற்றி கேலியும், கிண்டலுமாகப் பொழுது கூண்டுக்குள்ளேச் சென்றது. 6 மணி நேரமும் வம்பு, அக்கம் பக்கம் இருந்த பெண் பக்தைகளைப் பார்ப்பதிலும் சென்றது. கோவிந்தா, கோவிந்தா என்று கும்பலுடன் கோவிந்தா போட்டோம். கும்பலுடன் கோவிந்தா போடும் பழக்கம் அன்று கற்றுக் கொண்டது தான். அவ்வப்போது எதைத் தேடி இவ்வளவு நடந்தோம், என்றெல்லாம்

மனது கேட்கும். கடைசியில் வெங்கிடாசலபதியைப் பார்த்தது 2 நிமிடங்கள் தான். கூட ஒரு நிமிடம் பார்க்க ஒரு 50 ரூபாய் நோட்டை அங்கிருந்த ஒரு பணியாளரின் கையில் திணித்தோம். ‘அன்பு ‘ காணிக்கை தான்.

அவர் என்னைத் தள்ளி விட்டார். பிறகு மற்றவர்களைத் தள்ளிவிட்டார். என்னை மட்டும் கண்டு கொள்ளாமல் விட்டார். பெருமாள் பக்கம் என்னிடம் அப்படி ஒரு வாத்சல்யம். சும்மா சொல்லக் கூடாது அலங்காரம் பிராமாதம். வீட்டில் அப்படிச் சொல்லி லட்டு கொடுத்தால் தான் நான் திருப்பதி வந்தேன் என்று நம்புவார்கள்.

உள் பிராகாரத்தைச் சுற்றி வரும்போது மனதில் சுமார் 1 நிமிடம் பாலாஜியின் உருவத்தை எண்ணிப் பிரார்த்தனை செய்தேன். அமைதியாயிருந்தது. என்னைப் போன்ற பாமரனுக்கு உதவியாக இருந்தது. மீண்ட நடையில் சில சமயம் மனதில் வெறுமை படர்ந்து தூயமாக இருக்கும். அந்த சலனமில்லாத மனதைப் பாலாஜி தந்தார். இதற்காகவே அடுத்து எவெரெஸ்ட் ஏற வேண்டும்!

—-

Krishnakumar_Venkatrama@CSX.com

Series Navigation