தெப்பக்குளத்தில்கிரிக்கெட் மேச்

This entry is part [part not set] of 42 in the series 20031030_Issue

எஸ். ஷங்கரநாராயணன்


பல் இல்லா வாய்க்குழிபோல்
ஊர் நடுவே தெப்பக்குளம்
ஊருக்கே அடையாளம் ஆச்சு

– தெப்பக்குள பஸ் நிறுத்தம்

– அரசியல் பொதுக்கூட்டம்!
தெப்பக்குள சந்திப்பில்!

தாத்தா காலத்தில்
தண்ணீர் ததும்பும்

குளிக்கவும் குடிநீருக்கும்
பொதுமக்கள் நாடுமிடம்

விழாக்காலம் தெப்பம் விட்டு
ஊரார் மகிழ்வர்

நடுவிலொரு மண்டபம்
கோபுரத் தொப்பி

கோபுரத்து பொம்மைகள்
ஓகோவென அழகு

குபுக்கென குதிப்பதற்காய்
கோபுரத்தில் ஏறினவோ

தாத்தா காலம் ஆச்சு
தெப்பைக்குளம் இப்போ
குப்பை கூளம் என்றாச்சு

தெப்பக்குளம் தாத்தாவின்
வாய்போல ஆச்சு

சாமியேறும் கொலுமண்டபம்
சோம்பேறி ஆண்டிமடம்

மீசைவெச்ச தொந்திக்கார
அசுரவம்ச பொம்மை
இறக்கிவிட ஆள்தேடி
பதறியழும் கதறித் தொழும்

பள்ளிக்கூடம் லீவு விட்டால்
பட்டாடைச் சிறுமியென
படபடத்த உற்சாகம்
வாலிபத்தின் ஜாலிபால்

படியிறக்கம் காலரி
பார்வையாளர்… ‘பிஸ்லெரி ‘

கட்சிகட்டி கிரிக்கெட் மேச்
கைதட்டல் ஆர்ப்பரிப்பு

மட்டையடி மொட்டைபாபு
துாக்கிவிட்டான் சிக்ஸர்
கிட்டவில்லை சக்சஸ்

கோபுரத்து பொம்மை
காச்பிடித்து பாபு அவ்ட்

Series Navigation