துரோகர்(துரோணர்)
பிச்சினிக்காடு இளங்கோ

தகுதி கேட்டாய் முதலில்
தட்சிணை கேட்டாய் பின்பு
கூச்சமில்லையா
‘குரு ‘ என்று சொல்லிக்கொள்ள..!
குரு பக்தியைக்
கொலைசெய்த
முதல் குற்றவாளி நீ!
உன் பெயரை
உச்சரிக்கிறபோதே
யுக யுகமான ஏமாற்றம்
மூச்சை அடைக்கிறது…!
மீண்டும்
எங்கள் குருவாகிவிடுவாயோ
புயாலாகிறது அச்சம்!
ஏகலைவன்களே
எச்சரிக்கையாய் இருங்கள்!
ஒரு கட்டை விரல்
ஊனம் போதும்
கடைசிவரை விழித்திருக்க…
—-
ilango@stamford.com.sg