துரும்படியில் யானை படுத்திருந்தது

This entry is part [part not set] of 54 in the series 20080110_Issue

கே ஆர் மணி


வாழ்த்தித்தானாக வேண்டும், பரிசுகள் வரும் போது. வாழ்த்துக்கள் ஸங்கர்.

எல்லா பரிசுகளோடும் விமர்சனங்களும் விழுகிற காலமிது. ஆனால் தமிழக அரசு விருதுகளை பற்றி எப்போதும் யாரும் அதிகமாய் வாய் திறப்பதுமில்லை. தெரிந்த, புரிந்த சிதம்பர ரகசியமது.

நீர்வலை நாவலுக்கு தமிழக அரசின் பரிசென்றபோது மகிழ்ந்தார்கள் என் மும்பை இலக்கிய நண்பர்கள். அன்பாதவன் உடனே பாராட்டுக்கடிதமெழுதச் சொன்னார். புதிய மாதவியின் மின்னஞ்சல் ஏற்கனவே பாராட்டுக்களை அனுப்பிவிட்டது. மதியழகனுக்கும் மகிழ்ச்சி. நான்தான் விமர்சன குச்சியால் தலையை சொறிந்துகொண்டிருந்தேன். அவரது மற்ற நாவல்களும், குறிப்பாய் கிரணமழையும், திசை ஒன்பது பத்தும் படித்துவிட்டு நீர்வலை சாதாரணமாகத்தான் படும்.

ஒருவேளை மிகத்துயரமான நிகழ்ச்சியின் இலக்கியபதிவு என்பதால் தேர்வாளார்களின் கவனம் பெற்றிருக்கலாம். ஒரு உலகத்தின் ஹென்றியை ஞாபகமூட்டும் லாரி டிரைவர், அன்பான குடும்பம், நாயகனின் பலநாள் வெறும் நீர்ச்சவாரி என ஒரு திரைக்கதைக்கான அத்தனை அம்சங்களும் கொண்டு சாதாரண வாசகனை குறிவைக்கும் நாவல். பலநாள் வெறும் ஒரு கட்டையின் துணை கொண்டு வாழ்க்கையை பிடித்துக்கொண்ட ஒருவனின் செய்தியால் உந்தப்பட்டு, எழுதித்தள்ளியதாக ஸ சொன்னதான ஞாபகம்.

பரிசுகள் ஒன்றும் இவருக்கு புதிதல்ல. கிட்டத்தட்ட அறுபது எழுபது புத்தகங்கள், தொடர்ந்து சீரான இலக்கியபணி, மற்ற
சக இலக்கிய பயணிகளோடு உணர்வாய் தொடர்பு என வாழ்க்கை தொடர்கிறது. இப்போது துரும்படியில் யானை படுத்திருக்கிறது.
திருவிழாக்காலங்களில் யானைக்கும் மகிழ்ச்சிதான். அது அங்குசமின்றி திரிந்தகாலங்களும் உண்டு. பசித்த யானைக்கு இந்த
சோளப்பொறிகள், பரவாயில்லை. அவரை உளவுப்பூர்வமாய் பாராட்டும் சின்ன ரசிகர்வட்டமுண்டு. அவர்களோடு விமர்சன உராய்தலில்
தன்னை வளர்த்துகொள்ள அவர் தவறுவேதேயில்லை.

மும்பை சயான், வாசி மற்றும் கோரகான் தமிழ்ச்சங்கங்களுக்கு என் நன்றிகள். தற்கால இலக்கியத்திகான தேடலில் தினவெடுத்து
நல்ல எழுத்தாளர்களை இங்கு வரவேற்று, அவர்களது படைப்பை Atleast அறிமுகப்படுத்தும் ஆசை கொண்ட எங்களுக்கு அவர்களின்
மூக்கு நுழைக்காத அமைப்பு உதவிகள் ரொம்பவும் தேவை. மூன்று இடங்களிலும் சங்கர நாராயணனின் பேச்சும், கட்டுரை வாசித்தலும்
அதை தொடர்ந்த எங்களின் விமர்சனங்களும், அதற்குப்பின்னான சின்ன இலக்கிய வியாக்ஞானங்களும் நிறைய எழுத்தாளர்களோடும்
தொடரவேண்டும் என்று பேராசைப்படுவதை எப்படி தடுக்கமுடியும்.

துரும்படியிலிருந்து யானை எழுந்து வரும். யானைக்கான இடம் வீதியே. தார் ரோட்டில் சத்தமும், மண் ரோட்டில் புழுதியும் கிளப்பலாம்.
புதிய புழுதியாய் இருக்க வாழ்த்துக்கள்.

அவரை பற்றி அறியாதவர்களுக்காக சின்ன அறிமுகம் கீழே :

பிறப்பு :
28 அக்டோபர் 1959 திருநெல்வேலி அருகே ஸ்ரீவைகுண்டம்
வளர்ப்பு :
12 வயதுமுதல் இடப் பெயர்ச்சிகள் – கல்லூரி மதுரை / பியூசி மதுரைக்கல்லூரி. பி எஸ்ஸி கெமிஸ்ட்ரி மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரி / (என் முதல் நாவலே எங்கள் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. மாணவர்களுக்குப் பாடமாகி விட்டது)
குடும்பம் :
மனைவி உமாமகேஸ்வரி, இரு ஆண்மக்கள் – பிரசன்னா 4வது ஆண்டு என் ஐ டி திருச்சி பி டெக் கம்பியூட்டர் சயின்ஸ் – அடுத்தவன் பிளஸ் டூ எஸ்பிஓஏ பள்ளி அண்ணாநகர் சென்னை
படிப்பு :
B Sc Chemistry
தொழில் :
தந்தியலுவலகத்தில் டெலிகிரா·ப் மாஸ்டர்

வாசிப்பு:
உயர்நிலைப் பள்ளி அளவிலேயே எங்கள் ஸ்ரீவைகுண்டத்து அருமையான நூலகம் மூலம் அர்த்தம் அதிகம் புரியாமல் பெரிய புத்தகங்கள் வாசித்தது – ஜாக்லண்டன், ஜான்ஸ்டீன்பெக், ஹெமிங்வே … இப்படி. வளர்ந்து நினைவு தெரிந்தபோது அவைகளை ஆங்கிலத்தில் வாசித்தபோது தமிழில் வாசித்தது ஞாபகம் வந்தது.
வாசிப்பின் தொடக்கம்
உயர்நிலைப்பள்ளிப் பழக்கம்
வாசித்ததில் தூண்டிய எழுத்து
ராஜநாராயணன், பூமணி, பின் ஜானகிராமன், லா ச ரா
பசுமரத்தாணியாய் பதிந்தது
கோபல்ல கிராமம், பிறகு
என் குளத்தில் கல்லெறிந்தவர்கள்-
எழுத்தாளர்கள் /
நிறைய. நான் ஒரு பத்திரிகை நி ஜ ம் – என நடத்தியவன். நிறையப் பேருக்கு நண்பனுங் கூட. நேற்று எழுத ஆரம்பித்த வித்தியாசமான எழுத்தாளர்களையும் நான் தோள் சேர்த்து நட்பு கொள்கிறவன். அதனாலேயே திரட்டுகள் அதிகம் கொண்டு வருகிறேன். 1) ஆகாயப்பந்தல் 2) பரிவாரம் 3) யானைச்சவாரி 4) ஜுகல்பந்தி (சங்கீதக் கதைகள்)
என்னை அசைத்த எழுத்துகள்/
கவிதையில் ஞானக்கூத்தன், காளமேகம், கட்டுரைக்கு சுந்தர ராமசாமி, கதைகளில் ஒரு கோடிப் பேர்!
நவீன எழுத்தின் சில முத்துகள் /
நவீன எழுத்து என்பதே ஒரு பம்மாத்து வேலை! ஜெயமோகனின் யதார்த்த நாவல் ஏழாம் உலகம் பெற்ற வெற்றி அவரது பிற நாவல்கள் பெறவில்லை அல்லவா?

எழுத்தின் தொடக்கம் :
1978 இரண்டாம் ஆண்டு கல்லூரிப் படிப்பில்
பிடித்த வாசிப்புகள்:
சாமர்செட் மாம், தாமஸ் மன், ஹெமிங்வே
தன்னை தொலைத்த வாசிப்புகள்:
மேலே சொன்ன ஆசாமிகள்
பிடித்த புத்தகம்:
Old man and the sea
பிடித்த தத்துவம்:
எவரிடமும் எதாவது கற்றுக் கொள்ள நமக்குக் கிடைக்கும்

எழுத்து அநுபவங்கள்:
முதல் எழுத்து –
சாவியில் 1978
என்னில் எனக்கு பிடித்த ஐந்து கதை, ஒரு நாவல், ஒரு கவிதை
5 கதை – பாற்கடல்/லா ச ரா – நேரம்/பூமணி – நாற்காலி/கி.ரா – வாரிக்குழி/ஜெயமோகன் – அசோகமித்திரனின் நிறையக் கதைகள்
நாவல் – அம்மா வந்தாள், அபிதா
கவிதை –
இக்கரைக்கும் அக்கரைக்கும்
அலைகிறான் ஓடக்காரன்
அமைதியாய் ஓடிக்கொண்டிருக்கிறது நதி
எழுத்தில்

இதுவரை எழுதிய புத்தகங்கள்:
சுமார் 60

தொகுத்த புத்தகங்கள் 5

இசையின் மீதான நாட்டம் /
தெரியாது! ஒரு இசைக்குறுந்தகடு வெளிக் கொண்டுவந்தேன். ஸ்ரீ அரவிந்த அன்னை சார்ந்தது – நிசப்த ரீங்காரம். அடுத்த தகடு ஸ்ரீ அன்னை சார்ந்து ‘மலர்க்கொலு’ தயாரித்து வருகிறேன். முதல் தகடில் 6 பாடல்கள் எழுதியவன். இரண்டாவது தகடில் எல்லாப் பாடல்களும் புனைகிறேன் – ஒருவேளை எட்டு. இசை பற்றி ஒரு திரட்டு வெளியிட்டேன்

மொழிபெயர்ப்பு முயற்சிகள்: .
கனவுச் சந்தை – உலகச் சிறுகதைகள் வெளியாக உள்ளது

சாதனையாய் நினைப்பது –
தொட்ட அலை தொடாத அலை நாவலை. ஆனால் மற்றவர்கள், குறிப்பாக என் அலுவலகப் பெண்டிர் மனதில் நேற்று இன்றல்ல நாளை நாவலே.

பாராட்டுகள் :
ஸ்டேட் பாங்க் பரிசு, தமிழக அரசு பரிசு, திருப்பூர் தமிழ்ச்சங்கப் பரிசு, அக்னி அட்சர விருது, என்.சி. அனந்தாச்சாரி விருது…. இப்படி டஜன் அளவு

குட்டுகள்:
அருமையான வாசகர்கள் எனக்கு, குட்டுகள் பற்றி நேரில்!

விமர்சனங்கள்:
இந்து தினமணி மற்றும் இதழ் விமரிசனங்கள் இந்தியன் லிட்ரேச்சர் – தொடர்ந்து ஒரே சீராக இயங்கி வரும் எழுத்தாளர் என என்னைச்சொன்னது, சரி என்று பட்டது!

திரைதுறை அநுபவங்கள்:
ஒரு படம் சாதி சனம் – முதன்மை உதவி இயக்குநன். பாலு மகேந்திரா, ஜேடிஜெர்ரி, வின்சன்ட் செல்வா என ஒரு ஐந்தாறு குறும் படங்கள் தேறும்.

Series Navigation

கே ஆர் மணி

கே ஆர் மணி