துடுப்புகள்

This entry is part [part not set] of 46 in the series 20041021_Issue

பனசை நடராஜன்


மணக் காலத்துக்குப் பின்
தனிக் குடித்தனமெனும்
இயந்திரப் படகின் மேல்
மயக்கம் கொண்டதால்
மழலைக் காலமும்
இளமைக் காலமும்
வாழ்க்கைப் படகினை
வழிநடத்தியத் துடுப்புகள்
சிதைந்த சிதிலமாய்..
முதியோர் இல்லங்களில்..!
-பனசை நடராஜன், சிங்கப்பூர்-
(feenix75@yahoo.co.in)

Series Navigation

பனசை நடராஜன், சிங்கப்பூர்

பனசை நடராஜன், சிங்கப்பூர்