திருப்பூரில் பதியம் இலக்கியக் கூடல்

This entry is part [part not set] of 39 in the series 20101002_Issue

பதியம்


திருப்பூரில் பதியம் இலக்கியக் கூடல் ச.தமிழ்ச்செல்வன் உரையாற்றினார்.
செப்டம்பர் 26, திருப்பூர் பதியம் இலக்கிய அமைப்பும் – மகேஸ்வரி புத்தக நிலையமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இலக்கியக்கூடல் நிகழ்ச்சி இன்று மாலை டைமண்ட் தியேட்டருக்கு எதிரிலுள்ள கே.ஆர்.சி.சிட்டிசென்டரில் நடைபெற்றது. பாரதிவாசன் தலைமை தாங்கினார், மகாதேவன் வரவேற்றார்.
பிரெஞ்ச் எழுத்தாளர் ஆல்பெர் காம்யு எழுதி தற்போது தமிழில் வெளிவந்துள்ள ” மரணதண்டனை என்றொரு குற்றம்” என்ற நூலை அறிமுகப்படுத்தி வழக்கறிஞர் மாதவி பேசினார். நூல் பற்றி கருத்துரையாற்றிய மருத்துவர் நா.சண்முகநாதன் இந்தியாவில் மரணதண்டனை வழங்குதல் நிறுத்தப்படவேண்டும் என கேட்டுக்கொண்டார். ஏற்கனவே 113 உலக நாடுகளிலட இத்தகைய நிலையுள்ளது என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.
கவிதைகளை நாடக வடிவில் மேடையேற்றும் ‘நிகழ்த்து கவிதை’ நிகழ்ச்சியை சென்னை கூத்துப்பட்டறை கலைஞர் தம்பிச்சோழன் நிகழ்த்தினார்.
நிறைவாக சிறப்புரையாற்றிய தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க மாநிலப் பொதுச்செயலாளர் ச.தமிழ்ச்செல்வன், மனித மனங்களையும் எண்ணவோட்டங்களையும் தீர்மானிப்பதில் மதங்கள் / ஊடகங்கள் / கல்வி நிலையங்களின் பங்கு குறித்து விரிவாக விளக்கினார். ஏராளமான இலக்கிய ஆர்வலர்கள் மழைச்சாரலுக்கிடையிலும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Series Navigation

பதியம்

பதியம்