தி.ஜானகிராமனின் பெண்கள்,ஆண்கள்,கிழவர்கள்

This entry is part [part not set] of 40 in the series 20031204_Issue

மாலதி


___________________________________________

மஞ்சள்,குங்குமம், மடித்தண்ணீர்,மடிசார்க்கட்டு தவிர மேல் அடையாளங்கள் காட்டாத

கலாசாரத்தின்

பெண்பாலரை பாலிய நுண்வெளிப்பாடுகளுள்ள காமக்கிழத்தியராகப் பேசவிட்ட

மாபாதகத்தைப்

பண்ணியவராக பெண்ணியவாதிகளால் மீண்டும் மீண்டும் கழுவேற்றப்பட்ட ஒருவரின்

எழுத்தைக்

குறித்து விவாதிக்க இப்போதும் கூச்சப்படுமளவுக்கு பாசாங்குகள் உள்ளவர்களாய்

இருக்கிறோம்

‘மரப்பசு ‘ என்ன கதை என்று மாமியாரிடம் விளக்கமுடியாது. அம்மிணி மீது நம்மை

மிஞ்சிக்கொண்டு

ஓடி அணைகிற அன்பை , அவளின் சுதந்திர தாகத்தின் மீது இயல்பாகப் பொங்குகிற

ஆமோதிப்பை,

அவளின் நேர்மைகளின் சிகரங்களை அண்ணாந்து பிரமிக்கும் நம் மரியாதைகளைப்

புறக்கணித்து

விட்டு, ‘ஆமா, அவ தொட்டுத் தொட்டுப் பேசணுங்கறா சகலரையும், அப்படியே

சகலரும் அவளையும்

நம்மையும் சேர்த்து தொட்டுத் தொட்டுப் பேசிப் பின் பொத் பொத்தென்று

போட்டுவிட்டால் என்ன

செய்யலாம்னு சொல்லி வெச்சாளோடி ? ‘ என்று மாமியார் கேட்கும்போது நமக்குச்

சொல்ல பதில்

இல்லை.தொடுவதற்கும் தொடப்படுவதற்கும் மனநலம் வேண்டும். தேர்வுகள் ஒத்துப்

போக வெண்டும்.

உயிர்த்தேனிலிருந்து உயிர்த்த அனுசூயா நீண்டு மரப்பசுவான கதையை ஒரு புறம் ஒதுக்கி

வைப்போம்,

படிம அளவில் அம்மிணிகளை ஒப்புக்கொண்டு.

‘மரகதம் மட்டுமில்லை. மற்ற பெண்களும் என்னுள் இருந்தார்கள். கறுப்பு, சிவப்பு,

மஞ்சள்,

மாநிறம், வெள்ளை, அழகு, பாந்தம், கோரம், அன்னவாசல்,பட்டணம்,

ஸ்ட்ராட்போட், டோக்கியோ,

இன்னும் எங்குமுள்ள பெண்களும் என்னுள் கிடந்தார்கள். எல்லோருக்குமாகச்சேர்த்து

உச்சமான

இன்பத்தை உச்சமான நோவை நான் பட்டுக் கொண்டது போலத் தோன்றியது. ‘

என்று அம்மிணி

குரலில் ஜானகிராமன் சொல்வது படிமத்தை உறைவிக்கத்தான்.

இயல்பை மீறிய அதீதங்களாக விவரிக்கப்படும் கதைக்கருக்களில் பெண்மையின்

போகார்த்த

வடிவம் ஒரு புத்திப் பருண்மையும் சூடிக் கொள்ளும்.

பெண்ணின் முழு இருப்பு சில வரிகளில் திகட்டாமல் கொடுக்கப்படும்.சொல்லச்

சொல்லப் பொருள்

விரிந்து விஸ்வரூபமாகி வாழ்வியல் முழுவதும் அதில் கரைந்து போகும்.

பெண்ணுரு சுயநலம் கொள்ளும்போதும்[இந்து, குஞ்சம்மா] பொதுநலம் பேணும்போதும்

[செங்கம்மா,

பவானியம்மாள், ஜகது] சுதந்திரம் பூசிக்கொள்ளும்போதும்[அனுசூயா,அம்மிணி]புத்தியை

வரிக்கும்

போதும்[யமுனா,புவனா] ‘செத்தேன்,செத்தேன் ‘என்று சர்வமும் ஒடுங்கும்.

ஆண்மைகுன்றி ,அரசியல்

முடங்கி ஆணவங்கள் கல்லாங்காய் அடிக்கப்பட்டு குற்றுயிரும் கொலையுயிரும் ஆகும்.

எப்படி ? எப்படி நேரலாம் இது ? என்று கேள்விகள் சுற்றிச் சுற்றிப் பறந்து

வருகின்றன. இது

வக்கிரம்,இப்படி ஒரு பார்வையா ? என்று பச்சைக் கோபத்தில் இயலாமையில்

பதைத்துப்

போகின்றன வாசகப் பிரதிகள்.

உண்மையைத் தாங்கும் சக்தி என்று இருந்து வைத்தது நமக்கு ?

கிளிமங்கலமும் அன்னவாசலும் ராஜங்காடும் கொரடாச்சேரியும் கொள்ளிடமும்

கும்பகோணமும்

தாம் உலகமா ? என்றால் பேச இடமில்லை.

முன் கழிந்த காலங்களீல் எல்லாம் ‘இன்மை ‘ப்பொருளாய் இருந்த பெண்மையை உண்மை

யாக்கி அதன் கண்,காது,மூக்கு,பாதம், புறங்கை, விரல், பூனைமுடி,

மொட்டைத்தலை, நார்மடி,

சொல்,பேச்சு,லஜ்ஜை,ராயசம்,கம்பீரம், ஆகாத்தியம், ஆளுமை, எல்லாவற்றையும்

வெளிப்படுத்தின

படைப்பாளியை மலினப்படுத்த மனசு வந்து விடாது மனச்சாட்சியுள்ள யாருக்கும்.

அந்தப்பெண் உண்மை கோலமிடலாகவும், கூடத்தில் ரேழியில்,நடமாடலாகவும்,

பரிமளிக்கும்

சமையலாகவும் கைச்சோற்றுப் பகிர்தலாகவும், பக்குவமான வார்த்தையாடலாகவும்,

கட்டளை

யாகவும் வேண்டுகோளாகவும் , விழியின் பதிவாகவும் சுட்டுப் பொதித்த மாதிரியில்

மனசில்

அழுந்தும் சரித்திரமானது.

‘நிற்கட்டும், போகட்டும் ‘ என்று புருஷன்மாருக்கு விடுகதை போடுவதோடு நில்லாமல்

உலகப்

போர் நின்றதற்கு வீட்டுக்குள் பாயசம் வைத்துக் கொண்டாடும் வியாபகமுள்ள பெண்மை

ஜானகிராமன் காட்டித் தானே தெரிய வந்தது ?

ஆண்களை ஒரு படி இறக்கிப் பேடித்தனம் ஒட்ட வைத்து , பெண்களை அதீத

வேட்கையில்

அலைவதாகக் காட்டினார் என்பதாகக் குற்றச்சாட்டு உண்டு ஜானகிராமன் மீது.

மனிதர்களை

இயல்பாக நடமாட விட்டார் என்பது தான் உண்மையாக இருக்க முடியும்.

‘ரங்கமணிக்கு ஒரு வெறி வந்து ஆட்டிற்று . அரைப்புடவையை அவிழ்த்து ரவிக்கையைக்

கழற்றிவிட்டு நிற்க வேண்டும் போலிருந்தது. சராசரிக்குச் சற்று மிஞ்சின உயரத்தைத்,

தன் உடம்பை எலும்போடும் நரம்போடும் இழுத்துக்கட்டியிருந்த தசைக்கட்டை,

அழுத்தத்தை,

இரவின் அரை வயிற்று உணவையும் மீறி மதர்த்திருந்த வளத்தை, மணிக்கட்டு உள்ளங்கை

களின் உரத்தை அப்படியே தன் ஆகிருதி அனைத்தையும் நிமிர்ந்து நின்று விசிற வேண்டும்

போலிருந்தது ‘

என்று படிக்கும்போது சத்தியமாய் விரசம் தட்டவில்லை மனசுக்குள்.நோயாளிக்குக்கட்டி

வைக்கப்பட்டு ,குறுகிய காலத்துக்குள் விதவையான மருமகளை மாமியார் குழந்தை

யின்மைக்குப் பிணை கட்டும்போது எந்த மருமகளுக்கு மேலே சொன்னபடி

ஆங்கரிக்காது ?

தினம் காலை யெழுந்தால் நேர நேரத்து உண்டி ,சகல வசதி, மறு நாள் பசிக்கு

உத்திர

வாதங்கள் எல்லாம் இருந்து வாய்க்கும் ஜீவனத்துக்கு வெடி குண்டுப் பதுங்கு வழிகள்

தெரியாது. படுக்கையில்லாத பாதையோர உறக்கம் தெரியாது. பசிக்கான

துருவுதலும்

தன் சார்ந்த பிறரின் அபத்திரங்கள் கொடுக்கும் வலியும் தெரியாது.

பட்டினி இருந்திராத எவர்க்கும் சாப்பாட்டுக்குப் பறக்கும் ஆவேசம் அசிங்கம் தான்.

பாலியம் ஒரு மதம் மாச்சரியம். எப்போதும் அடையாளப்படாமல் ஆனால்

நிரந்தரமாக

உள் வசிக்கிற தீவிர ஆளுமை அது.

[மனிதம் தான் மதத்துக்கு மாற்று என்பதை புரிந்துகொண்டிருக்கிறோ மெனினும் இந்த

இடத்தில் ஆழத்துக்காக இந்த ஒப்புமையை உபயோகிக்க அனுமதியுங்கள்]

ஒரு இந்துவாகவோ கிறித்துவனாகவோ எப்போதும் உணர்வது போல ஒரு ஆணாகவோ

பெண்ணாகவோ எப்போதும் உயிர் தன்னை உணர்கிறது.எந்த நேரத்திலும் தன்னுணர்வு

மாறுவதேயில்லை.

பால் ஈர்ப்பு எல்லா வயதுகளையும் ஆட்டி வைக்கும்.கண்டு ஐயரின் உள்ளங்கால்

அழுக்கைத் துடைக்கும். [மரப்பசு]கோபாலியின் பாட்டுக்கு

உருகும்[மரப்பசு]பாபுவைப்

பார்த்து வெகுளும்[மோகமுள்]அப்புவைக்கட்டிஉருட்டும்[அம்மா வந்தாள்]நூறு நூறு

விதத்தில் உலகம் துளைக்கும்.

இந்து விபூதியும் நாமமும் இட்டுக்கொள்வான். கோவில் பக்கம் கண் போகும்போது

கன்னத்தில் போட்டுக்கொள்வான். பிரசாதத்துக்குக் காத்திருந்து விழுங்குவான்.

பிராகாரம் சுற்றுவான்.அபிஷேக நீர் காய்ந்து போன பின் பக்கக்கால்வாயைத்

தொட்டு பக்தியோடு முகர்வான். நிர்மால்யத்தை மிதிக்க மாட்டான்.

அதுபோலவே பெண்ணை ஆண் கோபுர தரிசனம் போல வியப்பான். நிறம்

பார்ப்பான்.

உறுப்பு கணிப்பான். வெறுமனே பார்ப்பான். வாய்ப்பு நேரும்போது ஆள்வான்.

அடிமையாவான்.

மதவொழுக்கத்தில் தியானம் நேர்படாதது போலவே ஆண் பெண் உறவில் கவனமும்

ஆழமும் எல்லாருக்கும் கைவருவதில்லை. மத வழிபாட்டில் வரைமுறை பிடிபடாதது

போலவே ஆண் பெண் உறவில் வெறும் நிசிப் பயணம் மட்டுமே கைவந்தது. எல்லா

நேர அனுபவம் ,ஐந்து நேரத்தொழுகை இல்லை. அர்த்தம் புரியாமலே மதத்தில்

ஈடுபடுபவனைப் போல கவனங்களோ புரிதலோ ரமித்தலோ இல்லாமல் உறவில்

கட்டுப்பட்டு மனிதர்கள் இருந்தார்கள், இருக்கிறார்கள்.

கவனங்கள் மாறும்போது கவனம் நீங்கும்போது பிடி இறுக்கம் தளர்கிறது. பொருள்

கை நழுவுகிறது.சட்டநாதனுக்குக் குஞ்சம்மாவிடமிருந்த ஆரம்பக் கிறக்கம் தொடரா

தது மாதிரி. இந்துவுக்கு அப்புவிடம் இருந்த அன்பு அவள் திருமணத்துக்கு முன்

வெளிப்படாதது மாதிரி. ‘வீடு ‘ விற்காத டாக்டர் தன் பெண்டாட்டியை வீட்டுக்

குள்ளேயே இழந்த மாதிரி.

தன் வீட்டுக்குள்ளேயே பிறன் குழந்தைகள் வளர்கின்றன. டாக்டர் சந்தானத்தின்

வீட்டில் கம்பவுண்டரின் குழந்தை[வீடு],தண்டபாணியின் வீட்டில் சிவசுவின்

குழந்தைகள்[அம்மா வந்தாள்], பழனி வீட்டில் வையன்னா குழந்தை[மலர்மஞ்சம்].

ஜானகி ராமனின் கதைகளில் பிறன் குழந்தைகளாக சொந்த வீட்டுக்குள் வேர்

விட்டவை,இன்றும் பிறன் விதைப்புகளாகக் குடும்பங்களுக்குள் மனசின்

வெறுப்புகளாக அலட்சியங்களாக வெறிகளாகப் பிறந்து வளர்ந்து தான்

விடுகின்றன.

சமூகமோ சட்டமோ கலாச்சாரமோ நாகரீகமோ மனித நேயமோ போட்டு விடும்

கோடுகளைக்கூடத் தாண்டி மத மாச்சரியங்கள் போய் விடுகின்றன.

அது சார்ந்த பொறாமைகள் ஆங்காரங்கள் சகிப்பின்மைகள் களியாட்டங்கள்

அனைத்தையும் நடுக்கடல் போல ஆழம் அடக்கிக் கிடக்கிற வாழ்க்கை ,மேலே

மிதக்கவிடத் தான் செய்கிறது அவ்வப்போது.

ஆராதனையில் அந்தர்யாஹம்[ஹ்ருத்யாஹம்] என்றும் பாஹ்யாஹம் என்றும் இரு

அங்கங்கள் உண்டு.உள் வழிபாடு வெளி சம்ப்ரமம் என்று இரண்டுமே முக்கியம்.

ஏதாவது ஒன்றை விடுகிறோம் நாம்.

பூஜையும் யக்ஞமும் ஒன்றன் பின் ஒன்றாகத் திரும்பச் செய்தல் தான். அதாவது

பூஜை சொல் என்றால் யக்ஞம் செயல்.

இரண்டுமே ஈடுபாட்டின் அடையாளங்கள்தாம். படிமரூபங்கள் தாம்.

[காதலையும் காமத்தையும் போல]

பூஜையில் ஆயிரத்தெட்டு போற்றி சொல்கிறோமே, வெவ்வேறு தேவதைகளுக்குச்

சொல்லப்படும் போற்றிகள் கிட்டத்தட்ட ஒரே அர்த்தம் கொண்டவையாயிருக்கும்.

‘முக்குணங்கள் உள்ளவளே போற்றி! குணங்கள் அற்றவளே போற்றி! ‘ போன்ற

இரு முரண்பட்ட நாமாக்கள் சில நாமாக்களின் இடைவெளி யோடு வரும்.

அந்தந்த தெய்வத்தின் பிரத்யேக அடையாளங்களான சூலம், வேல், ஆவுடை,

சிவாகார மஞ்சம், மோதகம் போன்ற குறிப்புகளை நீக்கிவிட்டால் எல்லா

தெய்வங்களின் ஆயிரத்தெட்டு நாமாக்களும் ஒன்றே. மற்றபடி தெய்வங்களின்

உருவங்கள், கற்பிதப்படும் குணங்கள், பிரத்யேக அடையாளங்களினால்

புரிய வைக்கப்படும் பூடகங்கள் உருவகங்கள் எல்லாரும் அறிந்ததே.

வெவ்வேறு வகையில் அடையாளப்பட்டாலும் ஜீவனின் அடிப்படைத் தேவை

சமமே என்பதிலும் வழிபாடு அனைவருக்கும் பரஸ்பரத் தேவை என்பதிலும்

ஆண் பெண் அவ்வப்போது இடம் மாறிக் கொள்ள வேண்டும் என்பதிலும்

உடன்பாடு வர வேண்டும்.

இந்துக்கள் யாருக்கும், சூர்ய வழிபாடு உருவில் சொல்லப்பட்ட நித்யகர்மா ,

ஒரு வகையில் பாவமன்னிப்புச் சடங்குக்கு ஒப்பான பிராயச்சித்தம் என்பதோ,

கர்மஞான யோக பக்தி வரைமுறைகளின் குறும் வடிவம் என்பதோ,பால்,இனம்,

கடந்த எல்லாருக்குமான மேலாண்மைப்பயிற்சி என்பதோ, ஒரு உளவியல்

தர்க்கவியல் நுட்பம் என்பதோ வர்மக்கலை உள்ளாக்கம் என்பதோ தெரியாது.

செய்பவர்களும் உணராமலே ,அழுக்கு நூலோடும், அதீத இன அடையாளத்தோடும்

மேல் வர்க்கத்து அரட்டலுக்கான தகுதியோடும் நித்ய கர்மாவை சம்பந்தப்

படுத்தி விட்டது பரிதாபம்.

மேற்படி விவரங்களை எதற்காகச் சொன்னேன் என்பது விளங்கியிருக்கும்.

சராசரி இந்து போலவே ஆணும் பெண்ணும் முக்கியங்களை மறுதலித்துக்

குறியீடுகளில் கவனம் செலுத்துகிறார்கள் என்பது புரிந்தாகவேண்டும்.

ஜானகிராமனில் ஆன்மிகத்தேடலும் பாலியச்செய்திகளும் இணையாக வருகிற

ரகசியமும் இப்படியே இருக்க முடியும்.

மதத்தில் யோனி குண்டமும் லிங்க பூஜையும் குறியீட்டுத் தத்துவங்கள் என்பதை

அறியாத எல்லாருக்கும் உலகம் வேறு வேறு வியாபாரக்கூரைகளையும், வேஷக்

கூரைகளையும், தேடல்கூரைகளையும் போர்த்தியிருப்பதாகத்தான் தெரியும்

நிஜமான நீலக்கூரையை ஜானகிராமனில் உணராதவரைக்கும்.

இந்து சாராம்சத்தில், தன்னைத் தானே முன் நிறுத்தி , தான் செழிக்க, தான்

விரும்பி ஏற்றுக்கொண்ட வடிவை , தனக்காகவே ஸ்மரிப்பது தியானம் என்று

சொன்னபடி தானோ என்னவோ ‘உனக்கில்லை, எனக்கிருக்கு ‘ என்று மீண்டும்

மீண்டும் மனசில் ஜபித்து மார்பைப்பார்த்துக்கொள்வாள் பங்கஜம்[நளபாகம்]

ஆன்மீகத்தேடலை அங்கங்கே எட்டிப்பிடிக்கும் பாத்திரங்கள்.

இது இல்லை என்றால் அது.அது நேராவிடில் இது.இரண்டையும் சரிக்கட்டி

வாழ்க்கை. நழுவின விஷயத்தை மீட்டெடுப்பதில் வேகமும் ஆங்காரமும் வரத்தான்

வரும். அவசரகட்டத்தில் மட்டும் இயங்கத்துணிந்த அம்மாவந்தாள் இந்துவும்

செம்பருத்தி குஞ்சம்மாவும் போல. எகாம்ப்ரேஸ்வரி மாதிரி மணல் லிங்கத்தை

வெள்ளம் கொண்டுபோகாமல் அணைக்கப் புறப்பட்டுத் தோற்ற பெண்கள்

இருக்கிறார்கள்.

எல்லாம் இருக்கும்போது வேறு தேடலைக் கொண்ட ‘அலங்காரங்கள் ‘

வகைப்பாடு கேட்பவர்கள். ஆண்மதம் கேட்கிறதே! பெண்மதம் சளைக்குமா ?

ஜீவன் சமமல்லவா ?மீண்டும் பழைய நழுவிப்போன தியரிக்குத் தான் வர

வேண்டியிருக்கிறது.தண்டபாணியின் போதாமைகள் அலங்காரத்தை வழுக்கி

விட்டிருக்கலாம்

ஜானகிராமனின் பெண்கள் ஏன் இப்படி சராசரிக்கு மேல் உயரமாய் அதீத

அழகோடு மிக வசீகரமாய் சித்தரிக்கப் படுகிறார்கள்என்பது ஒரு கேள்வி.

அவர்களுடைய அசாத்திய அழகே அவர்களின் இனக்கவர்ச்சியின் உக்கிரங்

களாக அடையாளப்பட்டுப் போய் விடுவது ஆபத்தான குறிப்பாய்க் கையாளப்

படுகிறதா என்ற சந்தேகம் துரத்துகிறது.

பொதுப்படையாகப் பார்த்தோமானால் எந்தப் படைப்பாளியும் தன் நாயகி

நாயகரை சாமான்யர்களாகச் சித்தரிப்பதில்லை என்கிற உண்மையிலும்

அழகியல் உணர்வு சார்ந்து இப்படிப் பாத்திரங்கள் அடிக்கோடிடப்படுகிறார்கள்

என்கிற சாத்தியத்திலும் நம்பிக்கை வைக்கும்போது மன நிழல்கள்

மறைகின்றன.

பெண்கள் அழகாகவும் புத்தி சாலிகளாகவும் இருப்பது போலவே ஆண்கள்

கம்பீரமாகவும் சாதனையாளர்களாகவும், கிழவர்கள் விவகாரமாகவும்

குறும்பாகவும் இயலாமைகளின் வெளிப்பாடாகவும் இருக்கிறார்கள்.

கிருஷ்ணாவதார நீர்மைபோல பெண்மை கலந்த நல்ல தன்மை ,பாபு,

கோபாலி, சட்டநாதன், செண்பகவனம் பிள்ளை, சக்ரபாணீ ஐயர்,சரவண

வாத்யார், காமேஸ்வரன், அனந்தசாமி, பூவராகன் எல்லாரிலும்.

முரட்டுத்தனமும் ஆகிருதியும் யோக்யங்களும் மிகுந்த அப்பு[சாண்டோசாமி]

பட்டாபி, சிவஞானம், ராமையா நாய்க்கர், திண்ணை வீரர் கோவிந்து மாமா.

ஆக ஜானகிராமனின் ஆண்கள் வசீகரமானவர்கள். வளைப்பவர்கள். பெண்

வழிச்சேறலில் மிக இனியவர்கள்.தொழுகையில் பெண்ணோடு சமமாகக்

குனிந்து பணிந்து மிக வித்யாசமான ஆராதனையில் லயிப்பவர்கள்.

இயல்பான ஆண்பிள்ளைகளே வளையவந்தார்கள் ஜானகிராமனில்

என்பதற்குச் சாட்சிகள் உண்டு.நாலாவது ஸார் உண்டென்றால் வையாபுரியும்

உண்டு. காமேஸ்வரன் உண்டென்றால் துரைசாமியும் உண்டு. சிவசு போல

கவர்ச்சி வில்லன்களும் உண்டு. பழனிவேலு வையன்னா போல அதிரடி

வில்லன்களும் உண்டு.

‘நான் எங்க ஆம்படையான் சொத்தா மாத்திரம் இருக்கறது அவனுக்கு

ரொம்பக்காலமா பிடிக்கலை ‘ என்பாள் செங்கம்மா பழனிவேலு பற்றி.

வையன்னா போகத்தில் கூட ஏமாற்றுக்காரன்.தன பாக்கியத்தை

வியாஜ்யத்துக்குப் போக வைக்கிறான்.

ஜானகிராமனின் பெண்கள் முடிவெடுப்பவர்கள். மொத்தத்தையும் திசை

திருப்பவல்லவர்கள்.ஊர்த்திசையைக் கூட மாற்ற முடியும், அவர்களுக்கு.எவ்வளவு

ரஹஸ்யங்கள்! எவ்வளவு மர்மங்கள் ! எத்தனை அர்த்தங்கள்! அவர்களின்

அசைவுகளில்! பேச்சுக்களில்!

‘என் உடம்பை மாத்திரம் கட்டி ஆண்டா நான் பெண்டாட்டியா ஆயிடமுடியுமா ?

ஆயிடுவேனா ?நான் ஆகலே, எனக்குக் கல்யாணமே ஆகலே,உடம்புக்குத்தான்

ஆச்சு ‘என்ற இந்து.

‘நீ ரிஷியாயிட்டே,உன் கால்லே விழுந்து எல்லாத்தையும் பொசுக்கிண்டு விடலாம்னு

நினைச்சேன். நீயும் அம்மாபிள்ளையாவே இருக்கே. இப்ப காசிக்குப் போய்

இருக்கப்

போகிறேன் ‘ என்ற அலங்காரம்.

‘எனக்கு என்னவோ பூண்டிமாமாவும் கூட்டமும் அவள்[பைத்தியம்] புடவையைக்

கட்டிக்கொண்டு விடப் போகிறாளே என்று கவலைப் படுகிற மாதிரி இருந்தது.

சிரித்தேன் கண்கள் போகிற திக்கைப் பார்த்து ‘என்ற அம்மிணி.

‘நீங்க எனக்காகத்தான் வந்திருக்கிறதா ஒரு நிச்சயம் வந்துடுத்து. ….அந்தண்ட

போய் பார்த்துண்டே நிப்பேன்…அந்த அவஸ்தையிலே தான் தலையைத் தடவி

ஆச்வாசம் பண்ணின கையை அப்பிடி பிடிச்சிண்டேன். …எனக்கு எல்லாம்…எல்லாம்

ஆயிடுத்து அந்த நிமிஷம்…இந்தக்கை பட்டது போரும், அதிலேயே எல்லாம் கிடைச்

சுட்டது எனக்கு ‘என்று வாக்கு மூலம் தரும் பங்கஜம்.

‘இல்லறத்துறவு எவ்வளவு புனிதமோ அவ்வளவு புனிதமாயிருக்கும் துறவில்லறமும் ‘

என்ற ருக்மிணி.

இவர்கள் சூழலைப் பார்க்கும்போது இவர்கள் அதீதங்களில்லை.

வீம்பு ,வறட்டுப் பிடிவாதம்கொடிகட்டிப் பறக்கிற தோரணை எல்லாவற்றையும்

அணிந்து ஆக்ரோஷமாகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளூம் ஆடவனுக்குத்

தன் சரணாகதியைத் தந்து வசியம் செய்யும் பெண் ,அதையும் ஊருக்காகச்

பெண் அற்புதமாகக் கிடைக்கிறாள் ‘உயிர்த்தேனி ‘ல்

மனிதர்களின் குரோத காமங்களைப் பதிவு செய்து ஜானகிராமன் அவர் பாத்திரங்களின்

சாயலை வாழ்வியலில் தேட விட்டார். மிகப்பெரிய புரிதல் வைத்தார்.

ஜானகிராமனுக்கு அப்புறம் தான் உயிர் கனக்க ஆரம்பித்தது. இளமை நிகுநிகுவென்றிரு

ந்தது.சிமினி விளக்கு மஞ்சள் வெள்ளையாக எரிந்தது. வரப்புப் பூண்டுகள் மணத்தன.

ஆற்றுத்தண்ணீர் வெதுவெதுவென்றிருந்தது. சூரியன் மூங்கில் தோப்பு வழியாக கம்பிகம்பி

யாக விழலானான்.தோலில் எல்லாம் சிலந்தி வலை நெளியலாயிற்று.

இன்னும் எத்தனையோ வெளிப்பாட்டு முறைகள் வெளிக்கிளம்பின.

சங்கீதம் ஆறாகப் பெருகிஓடியது இயலில்.

அவரின் மனிதர்களீல் தான் எத்தனை அன்னதாதாக்கள்! அன்றாடங்காய்ச்சிகள்!எவ்வளவு

பெருந்தன்மை!எவ்வளவு அல்பத்தனம்!இடம் மாறி வளர்ந்த பிறப்புகள்! தாய் மாறிப்

பால்

குடித்த குழந்தைகள்!புதையலில் பங்கு கொடுக்கிற சாயபுகள்!துறவிகள்! பெண்டாட்டி

செத்தவர்கள்!

அவர்களில் எவ்வளவு விதமான மனப்பிராந்திகள்!தோரணைகள்!குடையும் சந்தேகங்கள்!

ஜானகிராமனின் நாவல்களிலே பூமி தொடுகிற லட்சியப்படைப்பு ‘செம்பருத்தி ‘

என்பார்கள்.

சட்டநாதனைப்போல ,புவனாவைப்போல முழுமையான துணைகள் கிடைக்க

நேர்ந்தால்,

எல்லாம் துறந்து ஓடினவர்கள் கூட திரும்பி வர விழைவு வரும்.

பழமும் மலரும் அசையும் கொடி போல புன்னகை அசையும் பெண்ணுருவாக சட்டநாதன்

புவனாவை வரிப்பான். அவள் விழியின் பதிவைக் காணும்போது பூரிப்பு, பிய்க்கமுடியாத

ஒட்டு,உரிமை,உறவு, ஒன்றிப்பு வருடங்களுக்குப் பரவசத்தை நிறுத்திய ஒரு கண அச்சம்

என்று சகலமும் புரிந்ததாகச் சொல்வான் சட்டநாதன்.

‘புவனா அவனைப் பார்வையாலே ஒரு தடவை அணைத்து முத்தமிட்டுச்

சாப்பிடுவதுபோல்

இருந்தது. எட்டி நின்ற சட்டத்திற்குத் தோலில் அது ஊர்ந்தது ‘என்றுவரும்.

அப்படிப்பட்ட அன்யோன்யம் தம்பதிகளிடையே. அந்த ஆதரிச தம்பதியின்

தாம்பத்தியத்தில்

வரும் குறுகின காலத்து நிம்மதியின்மையும் யதார்த்தம். பிரமிக்க வைக்கிற வாழ்க்கை

சாத்தியம்.

பெண்கள் சுயமாய் எப்படி இருக்க முடிந்திருக்கிறதோ அப்படியே ஆண்களும் இருக்க

முடிந்திருக்கிறது. காமத்தைக்கூட உத்தரீய நுனியில் முடிந்துகொண்டு அசைவின்றி இருந்த

அசகாய புருஷர்களைப் பேடிகளாக ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.

அதனால் தான் ஆண்பெண் உறவு நடு நிலையோடு சொல்லப்படுவதாக உறுதிப்படுகிறது.

உதாரணமாக ஒரு கட்டத்தில் சட்டநாதன் கேட்கப்படுவார். அவர் வீட்டில் யார்

யாருக்கு

சரண்டர் என்று. ‘மாறி மாறி ‘ என்று பதில் வரும். இந்தப்பதிலில் தான்

ஜானகிராமனின்

கோட்பாடே இருப்பதாக எனக்குப் படுகிறது.

ஓரிடத்தில் ‘பெண்கள் பூனைகள். அடிக்கக்கூடாது.பூனையின் ஒரு ரோமம் உதிரச்

செய்தால்

கூடப் பாவம். ஆனால் அது மட்டும் இஷ்டத்துக்குப் பாத்திரங்களை

உருட்டும்,பண்டங்களைச்

சூறையாடும்,நாசப்படுத்தும்,எஜமானனிடமோ அவன் சுற்றத்திடமோ எந்த விதப்

பாசமுமில்

லாது ஆனால் அவனுக்கு வேண்டிய எல்ல நாசூக்குகளையும் கோரும் ‘ என்று

ஜானகிராமன்

சொல்வதைக்கூட ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு பாத்திரத்தின் கருத்தாகத்தான்

கொள்ளவேண்டும்.

சொன்ன விஷயம் நல்ல observation என்பதில் சந்தேகமில்லை தானே!

ஜானகிராமனின் கிழவர்கள் லேசுப்பட்டவர்களில்லை. சூரர்கள்.

பேரன் பேரன் தானா என்று சாமிகளைவிட்டுத் துப்பறிந்த

கிழவிகள்![அட்சராப்பியாசம்]

பேத்தியைக் குப்புறப் போட்டு தட்டித் தூங்கப் பண்ணிக்கொண்டு, இழுத்து

இரைத்தபடியே

வந்த மருமகளை,வராத மருமகளை,வறுத்தபடி வசதி மருமகளுக்குஅடங்கியும் போகும்

கிழவிகள்![செம்பருத்தி]

ஸ்டோர் கதவைப்போட்டுடைக்கும் உண்டைக்கட்டி கிழவி! ‘இனிமே

உடைப்பியாடி,உடைப்பியா,

நாதிகெட்ட பொணம்,கதவையா உடைக்கிறெ ? ‘ என்று அவளை அடிக்கும் இன்னொரு

கிழவி!

[குளிர்]

குழந்தையைக்கிள்ளி,

பாயாசத்தைக்கொட்டி,

வயிற்றெரிச்சல் காட்டும் கிழவர்கள்!

விதண்டாவாதம் பண்ணும்,போட்டி போடும் ,குறும்பு பண்ணும், ‘பொம்மை ‘ போன்று

உலாவும் நிலையிலும் மனைவியிடம் முத்தத்துக்கு தேர் வடம் பிடிக்கும் பிடிக்கும்

கிழவர்கள்!

வியாபாரிகள்!வாத்யார்கள்!வ்யாஜ்யக்காரர்கள்!அபூர்வமனிதர்கள்!

மூப்பான மூப்பில்லை. இதய நோயில் பெருத்த மூப்பு, கம்பளிச்சட்டை மூப்பு,

எதையோ எதிர்பார்ப்பது போல நாட்டமிழந்து தெருவைப் பார்த்துக்கொண்டிருக்கிற

மூப்பு,

நீரிழிவு மூப்பு, ரத்த அழுத்த மூப்பு, கண்சதை மூப்பு, இருமல் மூப்பு, சித்தம்

கலங்கிய மூப்பு,

உதவி கிடைக்காத மூப்புகள், கிடைத்தும் பெற்றுக் கொள்ள முடியாத மூப்புகள்.

‘சாமி மாடத்திலா எழுதி வெச்சா குழந்தெ ?நன்னாச் சொல்லு, அப்படியா!

அப்படியா!எனக்குத்

தோணாமெ போயிடுத்தே ‘ன்னு அங்கலாய்க்கும் காரியக்காரக் கிழவர்கள்!

‘புண்ணியமாவது புடலங்காயாவது! எல்லாம் நம்ம மனோபாவத்தைப்

பொறுத்திருக்குதய்யா ‘

என்று மார் தட்டும் ரயில் பயணப்பேச்சாளக் கிழவர்கள்!

துணை வந்த பையனைக் குடை சாய்ந்த வண்டியிலிருந்து மீட்டு வீடு கொண்டு சேர்க்கும்

பென்ஷன் கிழவர்கள்!

வானப்ரஸ்தம் என்று வந்து புகையிலை பிடிக்கும் வசீகரக்கிழவர்கள்!

இப்படி வாழ்வியலை எடுத்து விண்டு விண்டு தாளில் வைத்த ஜானகிராமனைப் பாராட்டும்

விஷயத்தில் மட்டும் ஆணாதிக்க சமுதாயத்தின் பெண்ணடிமைத்தொழில் வியக்கும் தரகுக்

காரக் கும்பலில் தள்ளப்படும் கதியைக் கூட ஏற்கத்தயார்,அப்படி ஒன்று நேரும்

பட்சத்தில்.

ஏனெனில் கடந்த ஒரு நூற்றாண்டை உள்வாங்கி வரப்போகும் நூற்றாண்டைக் கணித்து

சிறு பத்திரிகை உலகத்துக்கும் வணிக பத்திரிகை உலகத்துக்கும் வரிசை வரிசையாக

வாரிசு எழுத்துக்களை ஆரம்பித்து வைத்தவர் ஜானகிராமன்.

வருங்காலத்தைக் கோடி காட்டியதற்கு உதாரணமாக ஒன்றிரண்டுசொல்லமுடியும்

எனக்கு.

பெளத்தமதம் பற்றி அதிகம் அடிபடுகிறது இலக்கியப் பேச்சு இப்போது. ஜானகிராமன்

அப்போதே ‘புத்த சன்யாசி ‘ போன்ற பதங்களை உபயோகப் படுத்தியிருக்கிறார்.

இரண்டாவதாக ஓரினச்சேர்க்கை. நுட்பமாகப் பார்த்தோமானால் ஓரின

ஈர்ப்புகுறித்து

நிறைய கோடி காட்டல் ஜானகிராமனில் கிடைக்கும்.

பெண்கள் மனசு விட்டுக் கரைந்து போவதும் ஒருவரைஒருவர் புகழ்வதும் மிக இயல்பு

ஜானகி ராமனில்.

ரங்கமணியும் சுலோச்சனாவும், செங்கம்மாவும் அனுசூயாவும், அம்மிணியும் மரகதமும்,

காமாட்சியும் ஜகதுவும், நாகம்மாளும் ருக்மணியும்,அகிலாண்டமும் ஜகதுவும், மற்றும்

லட்சுமியும் செங்கம்மாவும்.

‘நூறு ஆளுக்கு சமைக்கணும்னா ஒண்டியா நின்னு சமாளிக்கும். அப்படி ஒரு நிதானம்,

ஒரு கணக்கு, அப்படி ஒரு தெம்பு,அப்படி ஒரு உரம்.. ‘

‘தேன் இந்தக் கையிலே யில்லே, அந்தக்கையிலே…இது சாமான்களை மொத்து

மொத்தென்று எடுத்துக் கொடுக்கும். அது தான் தேனா மாத்தும் ‘

‘எத்தினி இரக்கம்டி உனக்கு ? உலர உலரக் கத்துதுவளே எல்லாம்,பாவம்னு

கொண்டாந்தியா ? உன்கைக்கு என்னாத்தெடி பண்ணிப் போடறது ? ‘

வேறு எழுத்தாளர்களின் பெண்கள் ஒருவருக்கொருவர் இப்படி நுட்பமாகப் புகழ்ந்து

கொண்டதாக ஞாபகமில்லை.

இன்னொரு பகுதி பெண்சிந்தனையாக.

‘தலை முடி நரைக்கவில்லை. கருகருவென்று சிற்றலை ஓடிற்று. வெடவெடவென்று

உடல்.தென்னம்பூ நிறம். சற்று உயரம் தான். முகத்தில் அளவு மீறிய அமைதி.

சதைப்பிடிப்பு இறுக்கம் விடாத அந்த அங்கங்களில் கூட அமைதி விரவியிருந்தது…..

சற்று தூக்கினாற்போல நாசிநுனி பக்கவாட்டில் பார்க்கும்போது கத்தியால் வழித்து

விட்டாற்போல வளைவு சரிவின்றி நறுக்கென்று தெரிந்தது.அவள் முகத்துக்கு அழகு

கொடுத்ததே அதுதான்.

அந்த நறுக்கின் அமைப்பால் தான் சாதாரணமாக அமைந்த மேலுதடும் அதற்குச்

சமமாக

இல்லாமல் சற்று உள்ளே தள்ளியிருந்த கீழுதடும் ஒளியை அதிகமாக வாங்கி இன்னும்

அழகு போல் தோன்றின. நெற்றியில் நேர் வகிடு. பள்ளமில்லாத நெற்றி.சற்றுப்

பெரிய

அடிக்காது. எல்லாம் தனித்தனியாகப் பார்த்தாலும் சேர்ந்து பார்த்தாலும்

அமைச்சலாக

இருந்ததைக் கவனித்தாள் நாகம்மாள். தூர இருந்து பார்க்கிறபோது ஒரு எடுப்பும்

அருகில்

வந்து பார்க்கையில் தனித்தனியாக ஒட்டாமல் விண்டும் நிற்கிற அங்க அமைப்பு இல்லை

இது. உதட்டின் கீழ் ஒரு பள்ளம்,குழிவாய். அதிலே ஓர் அழுத்தம். அகன்று வழிந்த

தோள்

தென்னை அடிமட்டை போல்,இல்லை பரசுராமன் கோடாரி போல் சட்டென்று

இடையை

நோக்கிச்சரிகிற முதுகு. ‘

அப்பா!என்ன அழகு!

அந்த நறுக்கு மூக்கைக் கடிக்க வெண்டும்போலிருந்தது நாகம்மாளுக்கு.

அதைப்பார்க்கப் பார்க்கத் தாங்கவில்லை அவளுக்கு.

‘சண்டாளி!இவ்வளவு அழகாயிருக்கியேடி நீ! ‘என்றாள்.

‘கிட்ட வந்து பார்க்கப் பார்க்கத் தாண்டி உன் அழகு ஒவ்வொண்ணாக் கெளம்பறது ‘

தண்டபாணீ சிவசுவை வர்ணிப்பது விபரீதம் தானே ?

‘சிவசுவைச் சற்று நிமிர்ந்து தான் பார்க்க வேண்டும். அவன் அத்தனை உயரம். உடல்

இரட்டை நாடியில்லை.ஒற்றை நாடியுமில்லை. மொழுமொழுவென்று

பூசினாற்போலிருக்கும்..

நிறம் மாநிறத்துக்குச் ச்ற்றுக் கூடுதல். பெரியதலை .ஆனால் அழகான தலை.

செதுக்கினாற்

போல்ன்ற் நீள மூக்கு.கண்ணும் பெரிய கண்.அலையிட்ட கிராப்பு. நெற்றி முகட்டையும்

அடைத்து நெற்றியையே அகலக் குறைவாகக்கூடக் காட்டிற்று அது. முக அமைப்பு கூட

நம்மூர்

அமைப்பில்லை.ஏதோ பாஞ்சாலம் துருக்கி பாரசீகம்,அந்த மண்ணில் அமைந்த மாதிரி

இருக்கும். அதே மேனி கூட. கை கால் இரண்டிலும் அசாதாரண மெருகுணெளஉட்டத்தின்

மெருகு.

விரல்களும் நீளமாகமழமழவென்று படல் நகங்கள் பளபளக்கப் பெருத்திருக்கும். ‘

கதவு போல் முதுகு பலகை போல் மார்பு என்றெல்லாம் ஆண்பிள்ளையழகை வர்ணிக்கும்

ஆண்கள்.

மேற்கண்டவை ஜானகிராமனின் பார்வை தீட்சண்யத்தைத் தான் காட்டின.

நினைவு தெரிந்த நாள் முதல் படித்து வரும் ஒரு எழுத்துக்கு வருடம் ஒருமுறை திவசமா

செய்து விடப் போகிறேன் ?அந்த சாகாத புனைவுகளுக்கு என்னால் தர முடிந்தது

இந்தப்

புரிதல் தான்.

————————————–

malti74@yahoo.com

திண்ணை பக்கங்களில் மாலதி

  • பிரம்மராஜன் பற்றி

  • அம்மா வந்தாள் பற்றி

  • நாச்சியார் திருமொழி

    Series Navigation

  • மாலதி

    மாலதி