திக்குத் தொியாத கட்டடக் காட்டினிலே…

This entry is part [part not set] of 30 in the series 20010819_Issue

வ.ந.கிாிதரன்


ஜன்னலிற்கு வெளியில்
மின்னலும் இடியும்
கொட்டும் மழையும்
சலனமற்ற படமாய்
விரைவதைப் பார்த்தபடி
இருப்பதிலொரு
சுகமா ? இல்லை
இழந்ததையெண்ணி
சோகமா ?

திக்குத் தொியாத
கட்டடக் காட்டினில்
திசை மாறியது
தானெப்போ ?

அதிகாலையில்
தலை விாிக்கும்
பனைப் பெண்களே!
உம்மை மீண்டும் நான்
காண்பேனா ?

முருங்கையில்
துள்ளும் அணிலை,
மாவில் கூவும் குயிலைக்
கவிதையாக்கும்
காலம் இனியும்
வருமா ?

‘கவசங்கள் ‘ புரண்டோடும்
எம் கிராமத்துச்
செம்மண் தெருக்கள்
மீண்டும்
தலை நிமிர்வதெப்போ ?

ம்..

மேகத்தையாவது
தூது விடலாமென்றால்
அதுவும் என்னைப் போல்
நாடி விட்டு ஊரு விட்டு
அலைந்து திாியுமொரு
அகதியாக.
அகதிக்கு
ஆகாயமே துணை.

Series Navigation

வ.ந.கிரிதரன்

வ.ந.கிரிதரன்