தனுஷ்கோடி ராமசாமி

This entry is part [part not set] of 24 in the series 20051202_Issue

சிவகாசி திலகபாமா


30 ஆண்டு காலமாக கலை இலக்கியப் பெருமன்றத்தின் செயல்பாட்டோடு தன்னை இணைத்துக் கொண்ட சாத்தூரைச் சேர்ந்த தனுஷ்கோடி ராமசாமி மதுரையில் தி.சு நடராஜன், பரிணாமன், நவபாரதி போன்றோரின் இலக்கிய உறவுகளூடா ;க தன்னை வளர்த்துக் கொண்டவர். அவரது படைப்புகள் சிம்ம சொப்பனம், நிழலும் ஒரு கவிதையும், நாரணம்மா, தீம்தரிகிட,, ஆகிய சிறுகதை தொகுப்புகளையும், தோழர் எனும் நாவலையும் தந்தவர் , இலக்கிய கூட்டங்களில் கம்பீரமான தோற்றம் தந்து , பார்க்கின்ற அவரது பேச்சுக்களை கேட்கின்ற பார்வையாளர்களையும் அக்கம்பீரம் தொற்றிக் கொள்ளும் படி செய்பவர்.

கலை இலக்கிய பெருமன்றத்தின் பொதுச்செயலாளராக பொன்னீலனுக்கு பிறகு பொறுப்பேற்று உற்சாகமாக பணிகளை திட்ட மிட்டுக் கொண்டிருந்தவர், கடந்த வெள்ளிக் கிழமை நமை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். அவரது படைப்புகள் அவரது நினைவை நம்முடன் வாழ வைக்கும்

—-

Series Navigation