டிஜிட்டல் உரிமைகள் மேலாண்மை (Digital Rights Management) ((எம் ஐ டி டெக்னாலஜி ரிவியூவில் பேசப்பட்ட 10 முக்கிய எதிர்காலத் தொழில் ந

This entry is part [part not set] of 18 in the series 20010204_Issue

ரஞ்சித் சிங்


இருபத்தோராம் நூற்றாண்டின் ஆரம்பத்தின், முக்கியமானதும் பெரியதும் ரத்தக்களரியுமான போர்களின் அடிப்படைக்களம் மெக்லீன் என்ற ஊரில் இருக்கும் ரஞ்சித் சிங்கின் அலுவலகத்தில்தான் இருக்கப் போகிறது. போரின் எதிர்வரிசைகள் தெளிவாக வரையறுக்கப்பட்டிருக்கின்றன. ஒரு புறம் புத்தகம், இசை, திரைப்படம், புகைப்படப்பிரதிகள் மற்றும் இன்னும் பலவற்றை உருவாக்குபவர்கள். மறுபுறம் இந்த உருவாக்கத்தை சுதந்திரமாக வினியோகிக்க விரும்புபவர்கள் (நாப்ஸ்டர் விஷயத்தைச் சிந்தித்துப் பாருங்கள்)

அப்புறம் இங்கே ரஞ்சித் சிங். ஜெராக்ஸ் நிறுவனத்திலிரிந்து பிரிந்து வந்த ContentGuard என்ற நிறுவனத்தின் தலைவர். இந்த நிறுவனம் உருவாக்கத்தை பாதுகாத்து (content protection) மின்வலையில் வியாபாரத்துக்கு ஏற்றபடி மாற்றித்தரும் நிறுவனம்.

இவ்வாறு தங்களது படைப்புகள் மின் வலை எங்கும் எந்தவித பிரதியுபகாரமும் இன்றி உபயோகப்படுத்தப்படுவது கண்டு படைப்பாளிகள் வருத்தப்படுகிறார்கள். இதுவே ரஞ்சித் சிங்கும் கண்டெட்கார்ட் செய்யும் வேலையும். டிஜிட்டல் உரிமைகள் மேலாண்மை என்ற Digital rights management, or DRM மின் வலையில் வரக்கூடிய புரட்சி என்று சொல்கிறார் ரஞ்சித் சிங். ‘படைப்பாளிகள் தங்களது படைப்புகள் பரவலாக பாராட்டப் படுவதை விரும்புகிறார்கள். ஆனால் தங்களுக்கு வரவேண்டிய பிரதியுபகாரம் வராமல் போய்விடுவது கண்டு வருந்துகிறார்கள். ஆனால் இணையத்திலோ புகைப்படங்களும் இன்னும் பல படைப்புகளும் அட்சரசுத்தமாக அழிவு இன்றி பலபேருக்கு வினியோகிக்கப்படுகிறது. ஆனால் படைப்பாளிகளோ அல்லது படைப்பாளிகளை வேலைக்கு வைத்திருப்பவர்களோ எந்தவிதமான பணமும் வினியோகத்தால் பெறமுடிவதில்லை ‘ என்றார்.

ஒவ்வொரு படைப்பிலும் ஒரு சாவியையும் பூட்டையும் (எண்கள் வடிவத்தில்) இந்த நிறுவனம் போடுகிறது. படைப்பு ஒரு பூட்டு எண்ணை வைத்து கலைக்கப்படுகிறது. கலைக்கப்பட்ட இந்த படைப்பு உபயோகப்படுத்த விரும்புபவருக்கு அனுப்பப்படுகிறது. உபயோகப்படுத்துபவர் தனியாக ஒரு சாவியை இந்த படைப்போடு பெற்றுக்கொள்கிறார். (சாவி வேண்டுமெனில் பணம் அல்லது வேறு ஏதாவது பிரதியுபகாரம் தர வேண்டும்). சாவிக்கும் பெறப்பட்ட படைப்பும் இணைந்து நிற்கின்றன. ஆகவே இந்தப் படைப்பு இன்னொருவருக்கு அனுப்பப்பட்டால் அந்த இன்னொருவரால் அதே சாவி போட்டுக்கூட திறக்க முடியாது. (இது பல சாவி திறப்பு பூட்டாக செயல்படுகிறது)

சரி, ஏன் இந்த டிஜிட்டல் உரிமை மேலாண்மை எல்லா இடங்களிலும் இல்லை ? இரண்டு காரணங்கள். ஒன்று படைப்பாளிகள் தங்களது படைப்புகளுக்கு எந்த அளவுக்கு பணம் வாங்குவது என்று தீர்மானம் செய்யவில்லை. ஒரு பாடலுக்கு எவ்வளவு காசு வாங்குவது என்று தீர்மானம் செய்யவில்லை. அந்த பாடலை வேறு யாருக்கும் அனுப்ப இயலாத நிலையில் ஒரு பாடலைக் கேட்பவர் எவ்வளவு காசு தர இசைவார் என்பது பாடல்களை வினியோகம் செய்பவர்களால் யூகிக்க முடியவில்லை. இதற்கு பல பொருளாதார மாதிரிகளை பயன்படுத்தி யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இரண்டாவது விஷயம் இன்னும் கஷ்டமானது. ‘இந்த பூட்டு சாவி போன்ற விஷயங்கள் ஒரு உபயோகிப்பாளருக்கு தெரிய வரக்கூடாது. இதற்காக பெரிய வேலைகள் செய்து ஒரு பாடலைக் கேட்கவேண்டுமென்றால், அந்த நபர் வேண்டாமென்று போய்விடக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. ‘ என்கிறார் ரஞ்சித் சிங். இதை தீர்க்கவேண்டி, கண்டெட் கார்ட் நிறுவனம், மைக்ரோஸாஃப்ட், அடோப் போன்ற நிறுவனங்களோடு கூட்டு வைத்திருக்கிறது. இந்த முறையை புத்தகங்கள், இசை, வீடியோ போன்ற விஷயங்களில் உபயோகப்படுத்த திட்டமிட்டிருக்கிறார்கள் இவர்கள்.

‘DRM என்ற டிஜிட்டல் உரிமை மேலாண்மைக்கு நல்ல எதிர்காலம் இருந்தாலும், இன்று ஆரம்ப நிலையிலேயே இருக்கிறது. ‘ என்கிறார் Reciprocal, Inc என்ற நிறுவனத்தின் தலைவரான ஜான் ஷ்வார்ட்ஸ். இந்த நிறுவனம் கண்டெட் கார்ட் மற்றும் பல நிறுவனங்களின் டி ஆர் எம் தீர்வுகளை படைப்பாளிகளுக்கும் படைப்பாள நிறுவனங்களுக்கும் விற்கிறது. ‘வியாபாரச் சந்தையில் இந்த டிஆர்எம் தீர்வுகள் பரவலாக உபயோகப்படுத்தப்படுவதற்கு இன்னும் ஓரிரு வருடங்களாகும் ‘ என்கிறார் எரிக் ஷ்ரெய்ரர். இவர் டிஆர்எம் விஷயங்களைப்பற்றி ஃபாரஸ்டர் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு செய்திகள் தரும் வேலையில் இருக்கிறார். ‘மக்களுக்கு எளிமையான வழியில் படைப்புகள் வேண்டும் ‘ என்றும் கூறுகிறார் இவர். உதாரணம் நாப்ஸ்டர். ஷ்ரெய்ரர் சொல்வது போல இது ‘தடுத்து நிறுத்த இயலாதது ‘. நாப்ஸ்டர் அமைப்பு, நீதிமன்றங்களால் இழுத்து மூடப்பட்டாலும், இண்டெர்நெட் என்ற இணையத்தின் மூலமாக இணையத்தை உபயோகிப்பவர்கள் தொடர்ந்து தங்கள் பொருள்களை தங்கள் நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் கொடுத்துக்கொண்டே இருப்பார்கள் என்றும் கூறுகிறார்.

ஆனால் ரஞ்சித் சிங் அவர்கள் டிஜிட்டல் உரிமை மேலாண்மை பரவலாக உபயோகிப்படும் என்று கருதுகிறார். அதற்கு நாப்ஸ்டர்க்குத்தான் நன்றி சொல்லவேண்டும் என்றும் கூறுகிறார். ‘நாப்ஸ்டர் இந்தப் பிரச்னையை படைப்பாளி நிறுவனத்தலைவர்கள் (உதாரணமாக சோனி, கொலம்பியா, ஃபாக்ஸ் போன்ற பாடல்கள், சினிமாக்கள் உருவாக்கும் படைப்பு நிறுவனங்களின் தலைவர்கள்) அளவுக்கு அவர்கள் இதைப்பற்றி சிந்திக்கும் அளவுக்கு இதை கொண்டு சென்றது. அவர்கள் தங்கள் லாபம் இது போன்று, தனிநபர் இணைய வினியோகம் மூலம் குறைவதை காண்பித்து அவர்கள் படைப்பை காப்பாற்றிக் கொள்ள வைத்தது ‘ என்றார்.

Series Navigation

ரஞ்சித் சிங்

ரஞ்சித் சிங்