ஞாநியின் ‘கான்சர் கல்பாக்கம் ‘ கட்டுரையில் தவறான சில கருத்துக்கள்

This entry is part [part not set] of 28 in the series 20030504_Issue

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng(Nuclear) கனடா

முகவுரை: மதிப்புக்குரிய நண்பர் ஞாநி எழுதிய ‘கான்சர் கல்பாக்கம் ‘ என்ற கட்டுரையில் கதிர்வீச்சின் கொடிய இன்னல்களைக் குறிப்பிட்டு, நிர்வாகத் துறைகளில் உள்ள ஓட்டைகளை எடுத்துக் காட்டி, மாநில அரசா அல்லது மத்திய அரசா எது அபாயப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் என்று கேட்ட கேள்வி வரவேற்கத் தக்கதே! ஆனால் அவர் மக்களைப் பயமுறுத்தக் கூறிய சில கடுமையான நோய் விளைவுகள் அணு உலைக் கதிர்வீச்சால் மெய்யாக நிகழ்ந்தவையா என்பது ஐயப்பாட்டுக் குரியன! மற்றும் அவரது சில கதிர்வீச்சுக் கருத்துக்கள் உயிரியல் விஞ்ஞானத்துக்கு முரண்பட்டவை என்பது எனது கருத்து!

கல்பாக்கம் அணு உலைப் பணியாளிகளுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் புற்று நோய் ஏற்படும் வாய்ப்புகள் மிக அதிகம் என்ற தவறான கருத்தைப் பரப்பி வருவது, நியாயமான எச்சரிக்கை ஆகாது! கல்பாக்கத்தில் பணி செய்து குறைந்த அளவுக் கதிரடி பெற்றுப் புற்று நோய் வந்து செத்துப் போனவர், ஊனக் குழந்தை பெற்றவர், பிறப்புறுப்பில் புற்று நோய் பெற்றவர், ரத்தப் புற்று நோய் பெற்றவர், குடல் புற்று நோய் பெற்றவர், ஆறு விரல்காரர் ஆகியோரின் வட்டாரப் பட்டியலைக் காட்டி, அவை யாவும் அணு உலைக் கதிர்வீச்சால் உண்டானவை என்று மெய்ப்பிக்காமல் அழுத்தமாகப் பறைசாற்றுவது உயிரியல், மற்றும் கதிரியல் விஞ்ஞானத்துக்கு [Biological & Radiological Science] ஒவ்வாத வாதங்கள்!

1945 ஆம் ஆண்டு அமெரிக்கா அணு குண்டுகளை ஹிரோஷிமா, நாகசாகியில் போட்ட பின்பு, 58 ஆண்டுகளாக அணுக்கதிர்ப் பொழிவில் நரக வேதனையில் அவதிப் பட்டுக் கொண்டிருக்கும் ஜப்பான் தேசத்தில், 53 அணுமின் உலைகள் பாதுகாப்பாக இயங்கி 43,490 MWe ஆற்றல் மின்சக்தியைப் பரிமாறிக் கொண்டு வருகின்றன!

வட அமெரிக்காவிலே மிகப் பெரிய பிக்கரிங் அணுமின் நிலையம் எட்டு அணு உலைகளைக் [8×500 MWe] கொண்டு, முப்பது ஆண்டுகளாக (2000-4000) MWe ஆற்றலைப் பரிமாறிப் பல மில்லியன் மக்கள் நடமாடும் டொரான்டோ நகரின் விளிம்பிலே பாதுகாப்பாக இயங்கி வருகிறது! கல்பாக்கம், கூடங்குளம் அணுமின் உலைத் திட்டங்கள் எல்லாமே பஸ்மாசுரனுக்கு வரம் கொடுக்கும் திட்டங்கள்தான் என்பதை நிரூபிக்க அறிவியல் ஆதாரங்கள் உண்டு என்று ஞாநி நக்கல் புரிகிறார்! அப்படி என்றால், 2000 ஆண்டு வரை பாதுகாப்பாக இயங்கி 351,000 MWe மின்சக்தி உற்பத்தி செய்து கொண்டிருக்கும் உலகின் மற்ற 436 அணுமின் நிலையங்களையும் அவர் சேர்த்துக் கொள்ள வேண்டும்!

அணுமின் நிலைய எதிர்ப்பாளிகள் பாரதத்தின் அணு உலைகள் சிலவற்றை ஒரு முறை அல்ல பல முறை நேரில் கண்டு, கதிரியக்கம் எந்த இடங்களில் உள்ளது, கதிர்வீச்சு எவ்விதம் கவசத்தால் குறைக்கப் படுகிறது, மனிதர் பணி செய்யும் போது உடல் நலம் எப்படி பாதுகாக்கக் படுகிறது என்பதைத் தெளிவாக அறிந்து கொள்வது அவரது எதிர்ப்பு வாதங்களுக்கு வலுவைக் கொடுக்கும்!

அணு உலைகளில் நேரடிப் பங்கேற்றுச் சேமித்த எனது அனுபவங்கள்

முதலில் எனது அணுவியல் அனுபவத்தைப் பற்றிச் சிறிது கூற விழைகிறேன். 1956 இல் யந்திரவியல் எஞ்சினியராகி 1957 ஆண்டு முதல் 2002 வரை சுமார் 45 ஆண்டுகள், இந்திய அணுசக்தித் துறைகளிலும், கனடாவின் அணுமின் உலைகளிலும் இயக்கம், பராமரிப்பு, அணுவியல் நுணுக்கம், பயிற்சி, பாதுகாப்பு ஆகிய துறைகளில் நேரடிப் பங்கு கொண்டு, உலகின் அணு உலைகள் [கனடாவின் NRX, அமெரிக்காவின் Three Mile Island, ரஷ்யாவின் Chernobyl] சிலவற்றின் விபத்துகளை ஆராயும் ஆய்வுக் குழுவில் பணி செய்திருக்கிறேன். 1975 இல் ஒரு மாதம் தங்கி ஜெர்மனியின் மூன்று அணு உலைகளைக் கண்டு ஆழ்ந்து நோக்கி அவற்றின் பராமரிப்பு, பாதுகாப்பு அமைப்புகளை அறிந்து வந்திருக்கிறேன்.

பம்பாயில் கனடா இந்திய ஆய்வு அணு உலையை [CIRUS Reactor] ஆறு ஆண்டுகள் இராப்பகலாய் இயக்கிப் பல விபத்துக்களைக் கையாண்டிருக்கிறேன். ராஜஸ்தான் அணுமின் உலையில் [Rajasthan Atomic Power Station] எட்டாண்டுகள் பணியாற்றி, அவற்றில் மூன்று ஆண்டுகள் அணு எருவூட்டும் யந்திரங்களில் [Nuclear Fuelling Machines] எரிக்கோல்களுடன் [Nuclear Fuel Bundles (Fresh & Spent)] தொடர்பு கொண்டிருக்கிறேன். கல்பாக்கம் சென்னை அணுமின் நிலையத்தில் [Madras Atomic Power Station], நான்கு ஆண்டுகள் டெக்னிகல் சூபரின்டென்டன்ட் எஞ்சினியராகப் பணியாற்றி, அங்குள்ள வேக அணுப் பெருக்கி அணு உலை [Fast Breeder Reactor] அமைக்கப்படும் போது நேராகப் பார்த்து இருக்கிறேன்.

கனடாவின் டக்லஸ் பாயின்ட் அணுமின் நிலையத்தில் [Douglas Point Nuclear Power Station] மூன்றரை ஆண்டுகள் எரிக்கோல் யந்திரங்களைக் கையாண்டு அணு உலைக்கு எரிபொருள் ஊட்டி யிருக்கிறேன். அதுபோல் கனடாவின் புதிய, மிகப் பெரிய புரூஸ் அணுமின் நிலையத்தில் [4×750 MWe=3000 MWe] பத்தாண்டுகள் எரிக்கோல் ஊட்டும் யந்திரங்களை இயக்கிப் பராமரிப்புத் துறையில் பணியாற்றி, அடுத்து ஆறு ஆண்டுகள் அணு உலைப் பாதுகாப்புத் துறையில் நேரடிப் பங்கேற்றிருக்கிறேன். குறிப்பாகக் கடந்த 45 ஆண்டுகள் ஆயிரக் கணக்கான ஊழியர்களுடன் உலவிப் பாதுகாப்பாகப் பணியாற்றி, ஓரளவு கதிரடி [Radiation Dose] வாங்கி, வீண் கதிரடி படாமல் உடல் நலமோடு இன்னும் வாழ்ந்து வருகிறேன். ஓய்வுக்குப் பின் ஆலோசகராகப் பணிபுரிந்து வரும் தற்சமயத்திலும் கதிர்வீசும் அணு உலைத் தளங்களில் அடிக்கடி உலவி தகவல்களைச் சேகரித்து வருகிறேன். எனது கட்டுரையின் முடிவான ஒரே ஒரு விளம்பர அறிக்கை:- பாரத அணுமின் உலைகளில் பணி புரிய, யாரும் அஞ்ச வேண்டிய தில்லை!

ஞாநியின் கட்டுரையில் நிஜமற்ற, தவறான சில கருத்துக்கள்

1.

ஞாநியின் கருத்து:

கல்பாக்கத்தில் ஒரு விபத்து நேர்ந்தால் போதும்! சென்னை நகரம் அவ்வளவுதான்! செர்நோபில் கதி ஏற்படும்!

எனது விளக்கம்:

செர்நோபிள் வெடி விபத்துக்குக் காரணங்கள்: அடுத்தடுத்து நிகழ்ந்த பல மனிதத் தவறுகள், மூல டிசைன் கோளாறுகள், எப்போதும் கனலாக இருக்கும் திரள்கரி அடுக்கு [Moderator Graphite Pile] மிதவாக்கியாகப் பயன்பட்டது, கதிரியக்கப் பொழிவுகளை உள்ளடக்கும் கோட்டை அரண் இல்லாதது! அந்த கோர விபத்து பாரதத்தின் எந்த அணு உலையிலும் நிகழவே நிகழாது! கல்பாக்க அணுமின் உலையில் கனநீர் மிதவாக்கியாகப் பயன்படுகிறது! மேலும் நாலடித் தடிப்பு கொண்டு உறுதி யாக்கப்பட்ட, முன்முறுக்கப் பட்ட ஸ்டால் கான்கிரீட் கோட்டை அரண் [4 feet thick Pre-stressed Reinforced Concrete Cotainment] உள்ளதால், விபத்து நேர்ந்தாலும் கதிரியக்கப் பொழிவுகள் கோட்டையை விட்டு வெளியே தாண்டவே தாண்டா!

விபத்துக்கள் பலவிதம்! சிறு விபத்து, பெரு விபத்து, பாதுகாப்பு விபத்து, கதிர்வீச்சு விபத்து, வெப்பத் தணிப்புநீர் இழப்பு, அணு உலைக் கட்டுப்பாடு இழப்பு, அபாய கால மின்சாரம் இழப்பு இப்படிப் பல விதங்கள். கல்பாக்க அணுமின் உலையில் பெரு விபத்து நிகழ்ந்தாலும், சென்னை நகரம் அழியாது! மகாபலிபுரமும் அழியாது!

2. ஞாநியின் கருத்து:

பயங்கர வாதிகளுக்கு அணு உலைகள் சிட்டிங் டக் [Sitting Duck] என்று சொல்லக் கூடிய எளிமையான இலக்குகள்! அதன் மீது விமானத்திலிருந்து ஒரு குண்டு போட்டால் போதும்! அணுக்கதிர் இயக்கம் சென்னையை அழித்துவிடும்!

எனது விளக்கம்:

விமானத்திலிருந்து குண்டு போட்டால், அணு உலை வெடிக்காது! அணு உலைத் தானாக நிறுத்தம் ஆகி, வெப்பத்தைத் தணிக்க போதிய நீரில்லாது, எரிக்கோல்கள் உருகி, கோட்டை அரணில் ஓட்டை நேர்ந்தால் கதிரியக்கம் காற்றடிக்கும் திசையில் பரவும். சென்னையிலும், மகாபலிபுரத்திலும் கதிர்க் கழிவுகள் பொழிந்து, மாந்தர் கதிர்த் தீண்டலில் துன்புறுவர்! ஆனால் சென்னை நகரம் கதிர்வீச்சால் அழியவே அழியாது! கதிர்மானிகளைக் கொண்டு கதிர்கள் தீண்டிய [Radioactive Contaminations] இடங்களைக் கண்டு பிடித்து, அவை நீக்கப் பட வேண்டும்! ஆங்கு வாழும் மாந்தரில் கதிரடி பட்டோரும் இருப்பார்! கதிரடி படாமல் தப்பினோரும் இருப்பார்! ஆனால் சென்னையில் உள்ள கட்டடங்கள், வீடுகள் சேதமடையா!

3. ஞாநியின் கருத்து:

கல்பாக்கத்தில் விபத்து நடந்தாலே போதும்! விபத்து எதுவும் நடக்காது என்று எந்த உத்தரவாதமும் கிடையாது! அப்படி நடந்தால் அதற்கு யார் பொறுப்பு ? கல்பாக்கத்தில் கதிரியக்கத்தால் சுற்று வட்டாரங்களில் புற்று நோய் அதிகரித்தால், அதற்கு யார் பொறுப்பு ?

எனது விளக்கம்:

அணுமின் நிலையத்தில் விபத்து நேர்ந்தாலும் சரி, சுற்று வட்டாரத்தில் புற்று நோய் அதிகரித்தாலும் சரி, அவற்றை நேரடியாகக் கவனிப்பது, மத்திய அரசைச் சேர்ந்த அணுசக்திக் கார்பொரேஷன் [Nuclear Power Corporation of India Ltd (NPCIL)] ஒன்றுதான். NPCIL அதை முறையாகக் கையாள மேற்பார்வை செய்வது, தனித்தியங்கும் ‘அணுசக்திக் கட்டுப்பாடு வாரியம் ‘ [Atomic Energy Regulatory Board (AERB)]. ஆராயப்பட்ட தவறுகள் முற்றிலும் திருத்தப்படும் வரை, அணுமின் உலை இயக்க அனுமதி லைசென்ஸை முறிக்க AERB வாரியத்துக்கு முழு அதிகாரமும் உள்ளது.

4. ஞாநியின் கருத்து:

கல்பாக்கம், கூடங்குளம் திட்டங்கள் எல்லாமே பஸ்மாசுரனுக்கு வரம் கொடுக்கும் திட்டங்கள்தான் என்பதை நிரூபிக்க அறிவியல் ஆதாரங்கள் உண்டு!

எனது விளக்கம்:

அறிவியல் ஆதாரங்களை ஞாநி ஏனோ தர வில்லை! நண்பர் ஞாநி அவற்றையும் காட்டி யிருக்கலாம்! பஸ்மாசுரன் காலத்தில் அணுசக்தி விஞ்ஞானம் முளைக்க வில்லை! படிக்காததால், அவனும் புதிய அணு உலைகளை முடுக்கத் தெரியாமல் திருதிருவென்று விழிப்பான்! அவனுக்கும் முதலில் பயிற்சி தேவை! கல்பாக்க கனநீர் அழுத்த இரட்டை அணு உலைகள் சிறந்த பாதுகாப்புத் தன்மைகளைக் கொண்டவை. கல்பாக்க வேகப் பெருக்கி சோதனை அணு உலை, பாதுகாப்பு ஏற்பாடுகள் போதாததால், ஆற்றல் குறைக்கப் பட்டு 25% [10 MWt] ஆற்றலில் இயங்கி வருகிறது!

KudanKulum Reactor

1986 இல் செர்நோபிள் அணு உலை விபத்துக்குப் பிறகு ரஷ்ய விஞ்ஞானிகள், எஞ்சினியர்கள் கூடி கனடா, அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் நாட்டு நிபுணர்களின் உதவியால் பல முறைகளில் மேன்மைப் படுத்திய VVER-1000 [Version:392] இரட்டை அணு உலைதான் கூடங்குளத்தில் தற்போது நிறுவகம் ஆகி வருகிறது! அந்த அணு உலைகள் ஒவ்வொன்றுக்கும் இரட்டைக் கோட்டை அரண்கள் இருப்பதால், செர்நோபிள் அணு உலைபோல் வெடிப்பு ஏற்பட வாய்ப்புக்கள் கிடையா! VVER-1000 அணு உலையில் மிதவாக்கியாக எளிய நீர் [Light Water] பயன்படுகிறது! திரள்கரி [Graphite] அடுக்குகள் அல்ல!

5. ஞாநியின் கருத்து:

கல்பாக்க ஊழியர், தற்காலிக ஊழியர், வட்டார மக்கள் ஆகியோர் எந்த அளவுக்குப் பாதுகாப்பாக இருக்கிறார்கள் ?

எனது விளக்கம்:

அணு உலைகளில் பொது ஊழியருக்கு அணு உலை பற்றியும், பாதுகாப்பு வழிகள், உடல்நலக் கவச நெறிகள் பற்றியும் விளக்கமான பயிற்சிகள் அளிக்கப் படுகின்றன. தற்கால ஊழியருக்கு சிறிதளவு பயிற்சியே அளிக்கப் படுகிறது. ஆயினும் அவர்கள் பணி புரிகையில் பயிற்சி பெற்ற பொது ஊழியர் முழு நேரமும் அவர்களை நேரடி மேற்பார்வை செய்து வருகிறார்கள். வட்டார மக்களுக்கு சினிமா, டெலிவிஷன், பொதுக் கூட்டம், மற்றும் அறிவிப்புகள் மூலம் பயிற்சி அளிக்க வேண்டும்.

6. ஞாநியின் கருத்து:

அணு உலைப் பணியாளருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் புற்று நோய் ஏற்படும் வாய்ப்புகள் மிக அதிகம்! கல்பாக்க வட்டாரத்தில் பணியாட்கள், அவரது குடும்பத்தார் 15,020 பேர்களைச் சோதித்ததில் 167 நபர்கள் புற்று நோய் கொண்டுள்ளதாகவும் அவர்கள் கல்பாக்கம் மருத்துவ மனையிலே சிகிட்சை பெற்று வருவதாக அறியப்பட்டது.

எனது விளக்கம்:

முக்கியமாகச் சொல்ல வேண்டியது, கல்பாக்கம் மருத்துவ மனையில் புற்று நோயாளிகளுக்கு சிகிட்சை தர எந்த விதக் கருவியோ அல்லது போதிய வசதியோ எதுவு மில்லை! அங்கு புற்று நோய் சிகிட்சைக்குத் தேவையான டாக்டரும் இல்லை! எப்படி 167 பேர்கள் கல்பாக்கத்தில் புற்று நோய்ச் சிகிட்சை பெற்று வந்தார்கள் என்பது ஆச்சரிமாக இருக்கிறது!

என் தாய் கல்பாக்கத்தில் 1979 ஆகஸ்டு மாதம் புற்று நோயில் காலமானார்! கல்பாக்கத்தில் எஞ்சினியாரான எனது நண்பர் கலாசேகர் புற்று நோயில் இறந்தார். மேலும் அணுமின் உலைகளில் 25 ஆண்டுகள் பணியாற்றிய எனது மேலதிரிகாரி ராமமூர்த்தி ரத்தப் புற்று நோயில் காலமானார். இருபது ஆண்டுகள் கதிரடி நான் வாங்கியதற்கும், என் தாயாருக்குப் புற்று நோய் வந்ததற்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது! கல்பாக்க வட்டாரத்தில் உள்ள பின்புலக் கதிர்வீச்சால் [Background Radiation], என் தாயாருக்குப் புற்று நோய் வரவில்லை! அதே போன்று, என் நண்பர் கல்பாக்கத்தில் பணி செய்தாலும், அவரது புற்று நோயிக்கு அணு உலைக் கதிர்வீச்சுக் காரண மன்று! என் மேலதிரியின் புற்று நோயும் கதிர்வீச்சால் உண்டாக வில்லை! அணு உலை எதிர்ப்பாளி ஒருவர் இந்த மூன்று சம்பவங்களையும் தனக்கு ஆதரவாய்ப் பயன்படுத்திக் கொண்டு, அணு உலைப் பணியாளரும், அவரது குடும்பத்தாரும் புற்று நோயில் செத்து வருகிறார்கள் என்று பறை சாற்றலாம்!

அணு உலையில் பணி புரிபவர்களுக்கு, அணுக் கதிரடியால் உடனே புற்று நோய் தாக்கப் படுவது அபூர்வம்! மேலும் ஊழியரின் குடும்பத்தாருக்குப் புற்று நோய் தொற்றுவது மிக மிக அபூர்வம். மேலும் புற்று நோய் தொற்று நோய் அன்று! மேற்கூறிய 167 பேரின் புற்று நோய்கள் அணுக்கதிர் தாக்கப் பட்டதால் வந்தவை என்பது கதிரியல் மருத்துவர் [Radiation Specialist] நிரூபிக்க வேண்டும்! கல்பாக்க வட்டாரத்தில் புற்று நோய் வர வேறு பல காரணங்களும் இருக்கலாம்!

7. ஞாநியின் கருத்து:

கல்பாக்க அணு உலை ஊழியர்கள் பணி புரிகையில் வாங்கிய தனிப்பட்ட கதிரடி அளவுகள் அவருக்குக் காட்டப் படுவ தில்லை! வாங்கும் அளவு வரையரை மீறினால் மட்டுமே ஊழியருக்கு அறிவிக்கப் படுகிறது.

எனது விளக்கம்:

ஞாநியின் இக்கூற்று முற்றிலும் உண்மை யானது. கனடா போன்ற மேலை நாடுகளில் பொது அறிக்கைப் பலகையிலே தனிப்பட்டோர் கதிரடி அளவுகள், ஆண்டுக்கு நான்கு தடவை அறிவிக்கப் படுகின்றன. பாரதம் அம்முறையைப் பின்பற்ற வேண்டும். அணு உலை யூனியன் அதை ஒரு கோரிக்கையாய் எடுத்து மாநில அரசின் துணையோடு சாதிக்க வேண்டும்.

8. ஞாநியின் கருத்து:

தணிந்த அளவு கதிரடி [Low Radiation Dose] வாங்கிய தற்காலிக ஊழியர் ஒருவர் புற்று நோயில் மரணம்! ஒருவர் குடல் புற்று நோயில் தாக்கப் பட்டார்! ஒருவருக்கு ரத்தப் புற்று நோய். ஒருவருக்குப் பிறப்புறுப்பில் புற்று நோய்! ஒருவருக்குக் குழந்தை அங்க ஊனமாகப் பிறந்தது! கல்பாக்க வட்டாரத்தில் ஆறு விரல்காரர் அநேகர் காணப் பட்டனர்!

எனது விளக்கம்:

பாரத அணுவியல் துறையகம் ஆரம்பம் முதலே அகில நாட்டுக் கதிர்வீச்சுப் பாதுகாப்புக் குழு [International Commission of Radiological Protection (ICRP)] தயாரித்த, கதிரடி அளவியலைத் தானும் தழுவிக் கொண்டது. தணிந்த கதிரடி பட்டோர், அம்முறைப்படி அமைந்த கதிரடிப் பட்டியலைக் காண வேண்டும். கதிரடி அட்டவணையில் காணப்படும் விளைவுகளை இதுவரை யாரும் பிழையென்று நிரூபித்த தில்லை! மேற்கூறிய எல்லா விதப் புற்று நோய்கள், அங்க ஈனம், ஆறு விரல் முளைப்பு போன்றவை யாவும் தணிந்த கதிரடியால் விளந்தவை என்று கதிரியல் மருத்துவரால் நிரூபிக்கப் படாமல் பறை சாற்றுவது நியாய மற்ற வாதங்கள்!

உயிரியல் விளைவுகள் [Biological Effects]:

அகில நாட்டு விஞ்ஞானக் கதிர்வீச்சு விளைவுகள், [United Nations Scientific Committee on the Effects of Atomic Radiation (UNSCEAR-1993)], அகில நாட்டுக் கதிரியல் பாதுகாப்பு, [International Commission on Radiation Protection (ICRP-1990)], அகில நாட்டு விஞ்ஞானக் கதிர்வீச்சு உயிரியல் விளைவுகள் [National Academy of Sciences ‘ Committee on the Biological Effects of Ionizing Radiation (BEIR-1990)] ஆகிய முப்பெரும் பேரவைகள் வரையறுத்த அட்டவணைக் காண்க. (UNSCEAR-1993), (BEIR-1990) இரண்டும் புனைந்த ‘புற்றுநோய் எதிர்பார்ப்பு விளைவுகள் ‘ [Cancer Risk Estimates]: ஒரு ரெம் தணிந்த கதிரடி [Low Radiation Dose of 1 Rem] வாங்கும் பணியாளிகள் 10,000 பேரில் 4 பேர் புற்று நோயுற்று மரணம் அடையலாம் என்று அனுமானிக்கிறது. அதே சமயத்தில் வேறு விதங்களில் புற்று நோய் பெற்று இறப்பவர் எண்ணிக்கை 10,000 இல் 2500 பேர் [கனடாவின் புள்ளி விவரம்]! ஆகவே எவரெல்லாம் கதிர்வீச்சால் புற்று நோய் உற்றார் என்பது கதிரியல் மருத்துவரால் நிரூபிக்கப்பட வேண்டும்!

இனவழி விளைவுகள் [Genetic Effects]:

விலங்கினங்களை வைத்து ஆராய்ந்ததில், கதிர்வீச்சால் ஏற்படும் ‘இனவழி எதிர்பார்ப்பு விளைவுகள் ‘ [Risk of Genetic Effects] ஒரு ரெம் வாங்கிய 10,000 ஊழியரான பெற்றோர்களில் ஒருவர் அங்க ஈனக் குழந்தையைப் பெறலாம் என்று அனுமானிக்கப் படுகிறது!

9. ஞாநியின் கருத்து:

பாதுகாப்பு ஏற்பாடுகள் சரிவரப் பின்பற்றப் படுவதில்லை! கையுறையில் ஒட்டை உண்டாகி ஒருவர், பிளாஸ்டிக் உடை கிழிந்து ஒருவர், கதிர்த் திரவத்தைச் சுமந்து ஒருவர் [40 Rem Dose] கதிரடி வாங்கினர்!

எனது விளக்கம்:

கையுறை ஓட்டை, பிளாஸ்டிக் கவச உடைக் கிழிவு ஆகியவற்றால் பட்ட கதிரடி தவிர்க்கப் பட்டிருக்கலாம். ஆனால் அணு உலைகளில் வேலை செய்யும் போது, அவ்விதம் ஏற்பட்டால் பணியாளர் உடனே அவற்றை மாற்றிக் கொள்வர். அதிகரித்து வாங்கிய அவரது கதிரடிகள் உடனே கருவிகளில் தனியாக அளக்கப்படும். 40 ரெம் கதிரடி வாங்கிய நபரையும் அவரது நேரடி நிர்வாகியையும் அழைத்து, உடல்நல விஞ்ஞானிகளின் குழு [Health Physicists] ஏன், எப்படி, எங்கே நிகழ்ந்தது என்று உளவு செய்து, தக்க நடவடிக்கைகள் எடுக்கும். பணியாளியின் நிர்வாகி தவறு செய்தது கண்டு பிடிக்கப் பாட்டால், அவர் மீது புகார் நடவடிக்கை செய்து அவருக்கு எச்சரிப்பு அறிக்கை அளிக்கப்படும்.

அணுசக்தி யுகத்தை விட்டு மாட்டு வண்டி யுகத்துக்கு யாத்திரை!

கல்பாக்கம், கூடங்குளம் அணுமின் உலைத் திட்டங்கள் எல்லாமே பஸ்மாசுரனுக்கு வரம் கொடுக்கும் திட்டங்கள்தான் என்பதை நிரூபிக்க அறிவியல் ஆதாரங்கள் உண்டு என்று குறிப்பிடும் ஞாநி ஏனோ ஆதாரங்களைக் காட்ட வில்லை! அப்படி என்றால், 2000 ஆண்டு வரை உலகில் பாதுகாப்பாக இயங்கி 351,000 MWe மின்சக்தி உற்பத்தி செய்து கொண்டிருக்கும் மற்ற 436 அணுமின் நிலையங் களையும் அவர் சேர்த்துக் கொள்ள வேண்டும்! பாரத நாட்டில் 13 அணு உலைகள் இயங்கி சுமார் 2620 MWe ஆற்றல் மின்சக்தி அளித்து வருகின்றன! 1945 ஆம் ஆண்டு அமெரிக்கா அணு குண்டுகளை ஹிரோஷிமா, நாகசாகியில் போட்ட பின்பு, 58 ஆண்டுகளாக அணுக்கதிர்ப் பொழிவில் நரக வேதனையில் அவதிப் பட்டுக் கொண்டிருக்கும் ஜப்பான் தேசத்தில், 53 அணுமின் உலைகள் பாதுகாப்பாக இயங்கி 43,490 MWe ஆற்றல் மின்சக்தியைப் பரிமாறிக் கொண்டு வருகின்றன!

திரிமைல் தீவு விபத்தில் தொய்ந்து போன அமெரிக்காவில் இப்போது 104 அணுமின் உலைகள் ஓடிக் கொண்டு 97,400 MWe ஆற்றலை அனுப்பிக் கொண்டிருக் கின்றன! பாரதம், கனடா நாடுகளை விடக் கடும் கட்டுப்பாடு நெறிகளில் அவை யாவும் பாதுகாப்பாக இயங்கிய வண்ணம் உள்ளன! தற்போது மின்சக்தியின் தேவை பெருகிக் கொண்டு வருவதால், கடந்த காலத்தில் மூடப்பட்ட பழைய அணுமின் உலைகள் பல அமெரிக்காவிலும், கனடாவிலும் திறக்கப் பட்டு புதுப்பிக்கப் படுகின்றன!

1986 இல் செர்நோபிள் அணுமின் உலை வெடித்துச் சூழ்மண்டலத்தில் கதிர்ப் பொழிவுகளைப் பரப்பிய ரஷ்யாவில் இப்போது 29 அணுமின் உலைகள் 19,843 MWe மின்சாரம் உற்பத்தி செய்து வருகின்றன! அரை மாங்காய் வடிவான தென்கொரியாவில் 16 அணுமின் உலைகள் 12,990 MWe ஆற்றல் மின்சக்தி [இந்தியாவை விட 5 மடங்கு அணுமின் சக்தி] பரிமாறி வருகின்றன! முதல் அணு ஆயுதங்கள் தயாரிப்பில் முழுப் பங்கேற்ற பிரிட்டனில் 35 அணுமின் நிலையங்கள் [12,960 MWe], பிரான்ஸில் 59 அணுமின் உலைகள் [63,000 MWe], மற்றும் பல ஐரோப்பிய நாடுகளில் அநேக அணுமின் நிலையங்கள் இயங்கி வருகின்றன!

ஞாநி பயமுறுத்துவது போல் புற்று நோய் பணியாளிகளுக்கும், அவரது குடும்பங்களுக்கும், வட்டாரப் பொது மக்களுக்கும் உண்டாகி வருகிற தென்றால், அவற்றைப் பல ஆண்டுகளாய் இயக்கி வரும் 31 உலக நாடுகள் அவ்வித இன்னலுக்கு அஞ்சி, ஏன் 436 அணுமின் நிலையங்களை இழுத்து மூடவில்லை! அணுமின் உலைகளால் மாந்தருக்குப் புற்று நோய் வரும் என்று பயமுறுத்தி, அணு உலைகளை மூடச் சொல்லும் ஞாநி, அணு யுகத்திலிருந்து பின்னோக்கிச் சென்று, பாதுகாப்பாக வாழ மீண்டும் ‘மாட்டு வண்டி யுகத்துக்குப் ‘ பாரதத்தை இழுத்துச் செல்ல விரும்புகிறார்! அப்பணியில் அவருக்கு வரவேற்புக்குக் கிடைக்காது, பலத்த எதிர்ப்புகள் இருக்கும் என்பதில் ஐயமில்லை!

அணு உலை விபத்துகள் எவ்வாறு கையாளப் படுகின்றன ?

ஞாநி அச்ச மூட்டுவது போல், இந்திய அணு உலைகள் ஊழியருக்குப் பாதுகாப்பு இல்லாமல் கதிரடி கொடுத்தும் யந்திரங்களோ, அன்றி உடனே கான்சர் உண்டாக்கும் கொடிய சாதனங்களோ அல்ல! போபால் ரசாயனத் தொழிற்சாலையில் 1984 டிசம்பரில் மனிதத் தவறால் ஏற்பட்ட பயங்கர விபத்து போல், பாரத அணுமின் உலைகள் எதனிலும் இதுவரை நேரவில்லை! டெல்லிக்கு அருகில் உள்ள நரோரா அணுமின் உலையில் 1993 மார்ச்சில் யந்திரப் பழுதுகள் உண்டாகி வெடிப்பு ஏற்பட்ட போதும், பாரத இயக்குநர்கள் அணு உலையைப் பாதுகாத்துக் கதிர்வீச்சு வெளியாகாமல் காப்பாற்றி யுள்ளார்கள்!

ஆனால் ரஷ்யாவின் செர்நோபிள் அணுமின் உலையில் நேர்ந்த பயங்கர விபத்து போல் கல்பாக்கத்திலோ அன்றி கூடங்குளத்தில் வளர்ந்து வரும், ரஷ்ய அணுமின் உலைகளிலோ நிகழப் போவதில்லை! காரணம் அந்த அணு உலைகள் யாவும் பாதுகாப்பாக நாலடித் தடிப்புக் கோட்டை அரணுக்குள் அமைக்கப் பட்டுள்ளன! சீர்குலைந்த செர்நோபிள் அணு உலையில் கோட்டை அரண் இல்லாததால்தான், கதிரியக்கம் சூறாவளிபோல் பரந்தது! கட்டுப்பாடு அற்ற பலவித மனிதத் தவறுகளால் ரஷ்ய அணு உலையில் வெடித்தது போல் பாரத அணுமின் உலைகளில் நிகழவே நிகழாது!

உலகெங்கும் முற்போக்கு, பிற்போக்கு, மற்றும் இடைப்போக்கு நாடுகள் முப்பத்தி ஒன்றில் 438 அணுமின் நிலையங்கள், இப்போது மின்சாரம் பரிமாறி வருகின்றன! அணுசக்தி ஆக்கம், உடல்நலப் பாதுகாப்புத் துறைகளில் [Radiation Health Physics] பாரதம் முற்போக்கு நாடாக முன்னேறியதற்குத் திறமைமிக்க இயக்குநர்கள், பராமரிப்புப் பணியாட்கள், உடல்நல விஞ்ஞானிகள் [Health Physicists], அணுமின் நிலைய பாதுகாப்புத் துறைகள், அணுசக்திக் கட்டுப்பாடு வாரிய நிபுணர்கள் [Nuclear Regulatory Board] ஆகியோரே காரணம்.

அணு உலைகளில் கதிரடி விளைவுகள் எவ்வாறு கையாளப் படுகின்றன ?

பாரத மாந்தர் அணுமின் நிலையங்களில் பணிபுரிய அஞ்ச வேண்டிய தில்லை! பணியாளிகளுக்கு அணு உலைப் பயிற்சிக் கூடங்களில் உயர்ந்த பயிற்சி முறைகள் கற்றுக் கொள்ள வாய்ப்புகள் அளிக்கப் படுகின்றன. அணு உலையில் பாதுகாப்பு விதிகளை மீறிப் பணி செய்கையில் ஏற்படும் கதிரடி நிகழ்ச்சிகள், விபத்துகள் [Radiation Incidents & Accidents] மூன்று குழுவினரால் சீராக ஆராயப் படுகின்றன. ஒன்று ஷிஃப்ட் குழு. இரண்டாவது உடநல விஞ்ஞானக் குழு. மூன்றாவது பாதுகாப்பு துறைஞர் அமைக்கும் தனிக்குழு. அந்த மூன்று குழுக்களும் தனித்தனியாக இயங்குபவை. பணியாளர் ஒருவருக்குக் பெரும் கதிரடி நேர்ந்த சில நிமிடங்களில், அந்த ஷிஃப்ட் இயக்குநர் அதிபதி அனைத்து விபரங்களையும் சேகரித்து, நேரடியாகத் தீர விசாரித்து கதிரடிப் பதிவுக் குறிப்பிலும் [Radiation Log], ஷிஃப்ட் குறிப்பிலும் [Shift Log] கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். ஓரிரு நாட்களுக்குள் உடல்நல விஞ்ஞானிகள், விபத்தில் சிக்கிய பணியாளியின் கதிரடித் தீவிரத்தைத் தெளிவாக மேலும் பிலிம் பாட்ஜில் [Radiation recorded Film Badge] ஆராய்ந்து, உடனடியாகச் செய்ய வேண்டிய மருத்துவ முறைகளைக் கையாளு வார்கள்.

தீவிரக் கதிரடி விபத்துக்குத் [Major Radiation Accidents] தனிக்குழு ஒன்று அமைக்கப் பட்டு விளைவுகள், காரணங்கள், தவிர்ப்பு முறைகள் ஆகிய யாவும், ஆராய்ந்து காணப்பட்டு பதிவுத் தகவல் மூலம் மேலதிகாரிகளுக்கும், அணுசக்திக் கட்டுப்பாடு வாரியக் குழுவினருக்கும் அனுப்பப் படுகிறது. எந்தப் பெரும் கதிரடி நிகழ்ச்சியும் அந்த மூவரது நேரடிக் கவனத்து வராமல் போகாது.

கல்பாக்க மின்சார நிலையத்தின் அணு உலைகள், வேகப் பெருக்கி அணு உலை [Fast Breeder Test Reactor] ஆகியவற்றில் கதிர்வீசும் அணுப்பிளவுக் கழிவுகள் பேரளவில் உள்ளன. எவ்விதப் பயங்கர விபத்து நேர்ந்தாலும், கழிவுகள் கோட்டை அரணிலிருந்து வெளியேறுவது அபூர்வம். ஆனால் அணுப்பிளவுக் கழிவுகளை மீள் சுத்திகரிப்பு செய்யும் தொழிற்சாலையில் [Spent Fuel Reprocessing Plant] பயன்படும் கழிவுகளின் அளவு, அணு உலைகளின் கழிவுகளோடு ஒப்பிட்டால் சிறிதளவே. பாதுகாப்புக் கவசங்களை முறையாக அணியாமல், பாதுகாப்பு நெறி முறைகளைப் பின்பற்றாமல் பணி செய்தால், இயக்குநர் கழிவுகளின் கடும் கதிரடித் [Severe Radiation Dose] தாக்குதலில் சிக்கிக் கொள்ள வாய்ப்புள்ளது. தொழிற்சாலை நிர்வாக அதிகாரிகள், உடல்நல விஞ்ஞானிகள் அத்தகைய தவறுகள் நேரா வண்ணம் இராப் பகலாய்க் கண்காணித்து வருகிறார்கள்.

அணுமின் உலை எதிர்ப்பாளிகளுக்கு ஓர் ஆலோசனை!

பாரத மாந்தர் அணுமின் நிலையங்களில் பணிபுரிய அஞ்ச வேண்டிய தில்லை! அணு மின்சக்தி மீது அச்சமும், வெறுப்பும் வளர்ந்து வருவதைப் புறக்கணித்து, அதைப் பாதுகாப்பாகப் பயன்படுத்திக் கொள்ள பாரத மக்களுக்குத் திறமும், அறிவும், பொறுமையும் உள்ளன! அணு உலை ஆதரவாளிகள் அணுமின் சக்தியை ஆக்க வழிகளில் முன்னேற்றும் போது, எதிர்ப்பாளிகள் அது பாதுகாப்பாகப் பயன்படுத்தி வருவதற்குக் காவற்பணி புரியலாம்! மேலும் ‘அணுசக்திக் கட்டுப்பாடு வாரியத்தில் ‘ [Atomic Energy Control Board] கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு மனித நலத்துறையைக் [Health Physics Dept] கவனித்து வரலாம்! படைப்பாளிகள் விமானத்தை உருவாக்கிய போது, பயந்த எதிர்ப்பாளிதான் பாதுகாப்பாக இறங்க பாராசூட்டைக் கண்டுபிடித்தார் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது!

இந்தியாவில் இன்னும் பல ஆண்டுகளுக்கு மின்சாரம் பரிமாறிக் கொண்டு, மக்களுக்கு பணி செய்து வர போவது, அணுமின் நிலையங்களே! அந்த மெய்விதியை ஏற்றுக் கொண்டு ஆதரவாளரும், எதிர்ப்பாளரும் இணைந்து ஆக்க வினைகளில் ஈடுபடுவதுதான் மனித நாகரீகம்! அணுசக்தியின் பலன்கள், பாதகங்கள், பாதுகாப்பு முறைகள் ஆகியவற்றை மக்களுக்கு அடிக்கடிப் புகட்டி, அதனால் எதிர்பார்க்கப்படும் அபாயங்களைக் கையாளும் முறைகளைத் திரைப்படம், டெலிவிஷன் மூலம் பள்ளிக்கூட இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள், மற்றும் பொதுநபர் அனைவருக்கும் எடுத்துக் காட்டி, பக்க ஊர்களில் பயிற்சிகள் அளிக்க மத்திய அரசு, மாநில அரசு, மாவட்ட அரசு, கிராமிய அரசுகள் முன்வர வேண்டும்!

அணுமின் நிலைய எதிர்ப்பாளிகள் பாரதத்தின் அணு உலைகள் சிலவற்றை ஒரு முறை அல்ல பல முறை நேரில் கண்டு, கதிரியக்கம் எவ்வாறு கையாளப்படுகிறது, கதிர்வீச்சு எவ்விதம் கவசத்தால் குறைக்கப் படுகிறது, மனித நலம் எப்படி பாதுகாக்கக் படுகிறது என்பதைத் தெளிவாக அறிந்து கொள்வது அவரது எதிர்ப்பு வாதங்களுக்கு வலுவைக் கொடுக்கும்! மேலும் கதிரியக்கக் காப்பு முறைகளை ஆதரவாளர் மேற்கொண்டும் செம்மைப் படுத்த அந்த அனுபவங்கள் பயன் உள்ளதாக இருக்கும்!

மேற்கொண்ட தகவல்களுக்கு ‘அணுசக்திக் கட்டுப்பாடு வாரியம் ‘ தயாரித்த நெறிகள், வழிகாட்டி முறைகள் [Atomic Energy Regulatory Board: Codes & Guides] ஆகியவற்றை www.aerb.gov.in என்னும் அகிலவலை முகப்பில் நோக்குக!

[jayabar@bmts.com]

**************************

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா