வெங்கட் சாமிநாதன்
எனக்கு வஹாபி அவர்களுடன் ஒரு உரையாடலைத் தொடர முயற்சிப்பது மிகவும் சலிப்பூட்டும் காரியமாக இருக்கிறது. வஹாபி மட்டுமல்ல, இஸ்லாத்தைப் பற்றி விளக்கம் சொல்லும் எந்த முஸ்லீம் அன்பருடனும் இதே கதைதான். வஹாபி ஏதோ புனை பெயருக்காக வஹாபி இல்லை. வஹாபி என்ற சொல் இப்போது கொள்ளும் அர்த்தத்தில் அவர் வஹாபியாகத் தான் இருப்பார் போலிருக்கிறது. அதில் பெருமை கொள்வதாகவும் தெரிகிறது.
எனக்கு வஹாபியை வாதுக்கழைத்து அவருடைய வாதங்களின் மத்திம கால நாகரீக குணத்தைச் சுட்டி அவரை ஒப்புக்கொள்ளச் செய்யும் எண்ணம் கிஞ்சித்தும் கிடையாது. அவரோ அவரை ஒத்தவர்களோ, உரையாடும் மனத்தவர்கள் இல்லை. தாம் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லியே நம்மைச் சலிப்படையச் செய்யும் போர்த்திறன் அவர்களது.
ஆனாலும், இப்போது மறுபடியும் நான் எழுதுகிறேன். திண்ணையின் வாசகர்கள் இருக்கிறார்களே அவர்களுக்காக. அவர்கள் நானோ, மலர்மன்னனோ, நேசகுமாரோ கேட்கும் கேள்விகளுக்கும் முன் வைக்கும் வாதங்களுக்கும் வஹாபி அல்லது யாருமோ பதில் சொல்கிறார்களா, பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்களா என்பதை முடிவு செய்துகொள்ளட்டும். இதைத்தான் பேராசிரியர் முகம்மது ர·பி மௌனித்திருக்க நான் பதில் சொல்கிறேன் என்று சொல்லித்தான் வஹாபியும் களத்தில் இறங்கினார்கள்.
இவர்கள் பார்வையும் மனமும் சிந்தனையும் ஒரு மாதிரியாகத் தான் கட்டமைக்கப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது. இந்த மேடைக்கு நான் வந்ததே குரானையோ ஹதீஸையோ படித்தறிந்தவன் என்ற தகுதியில் அல்ல. நேசகுமார் ஒன்று சொல்ல இவர்கள் யாரும் அதை எதிர்கொள்ளாது என்னன்னவோ சம்பந்தமில்லாது கூட்டமாக இரைச்சலிட்டு நேசகுமாரை வாயடைக்க முயல்வது தெரிந்தது. இது திரும்பத் திரும்ப நிகழ்ந்து வந்தது. அதனால் தான் நான் குரானும் ஹதீஸ¤ம் படித்திராவிட்டாலும் படித்த மேதைகளாக பெருமைப் பட்டுக் கொள்ளும் வஹாபி, பேராசிரியர் முகம்மது ர·பி இன்னும் மற்ற யாரும் திசைதிருப்புவதிலேயே, திட்டித் தீர்ப்பதிலேயே கருத்தாக இருப்பதைச் சுட்டவே வந்தேன்.
அதனால் தான் குரான் நான் படித்ததில்லை என்று சொல்லியே நான் இதுபற்றிப் பேச வந்தேன். மூன்றாம் மனிதனாக தள்ளி இருந்து பார்க்கும் எனக்கு இவர்கள் நேசகுமாரின் கேளவிகளால் மிகவும் சங்கடப்பட்டுப் போவதுதான் தெரிகிறது.
வலக்கர உரிமை என்ற சொல்லும் அதற்கான இவர்கள் தரும் விளக்கங்களுமே இவர்கள் இன்னும் ஏழாவது நூற்றாண்டு அரேபியாவிலேயே இருப்பதையும் அதை விட்டு நகர இவர்கள் மறுப்பதையும் தான் காட்டுகிறது. ரூமி பாவம், குற்றம் சாட்டப்படும் பெண்ணை சாட்டையால் அடிப்பது காட்டுமிராண்டித்தனம் என்று சொன்னால், “ஆமாம், அது காட்டுமிராண்டித்தனம் தான்” என்று ஒப்புக்கொள்ளும் மனம் இவர்களுக்கு இல்லை. போதையில் ஒருத்தன் தலாக் சொல்லி, மறு நாள் காலையில் தன் தவறை உணர்ந்தாலும் தலாக் சொன்னது சொன்னது தான் என்று ஷரியத் சட்ட கட்டளை இடும் முல்லா செய்தது காட்டுமிராண்டித்தனம் என்று ஒரு முஸ்லீம் கூட சொல்லவில்லை. எந்த கொடூரத்தையும் நியாயப் படுத்த முல்லா, இஸ்லாம், ஷரியத் குரான் என்று சொன்னால் போதும் இவர்கள் எல்லோரும் சொல்லி வைத்தாற்போல் வாய் அடைக்கப்பட்டு விடுகிறார்கள். நீங்கள் வாழ்வது 2009-ல் தமிழ் நாட்டில், இங்கு எந்தக் குற்றமும் நிரூபிக்கப்பட வேண்டும், நீதி மன்றங்கள் இருக்கின்றன, சட்டங்கள் இருக்கின்றன, இதையெல்லாம் தீர்மானிப்பது எந்த நூற்றாண்டிலோ எங்கேயோ எந்த சரித்திர சமூக நிர்ப்பந்தத்திலோ எழுதப்பட்ட ஷரியத்தை தன் மனம் போக்கில் வளைத்து கட்டளை பிறப்பிக்கும் ஒரு முல்லா இல்லை என்றால், இவர்கள் வாய் திறப்பதில்லை.
பெண்கள் எத்தகைய இழி நிலையில் ஒரு போகப் பொருளாக, அராபியாவின் ஏழாம் நூற்றாண்டு நாடோடி இனம் கருதியதோ அதையே என்றென்றைக்குமான உண்மையாக இவர்கள் இங்கு 2009 லும் சாதிக்கிறார்கள். எந்த மாற்றமும் இஸ்லாத்துக்கு எதிர். ஷரியத் தில் உள்ளது தான், அதில் என்ன உள்ளது எனபதை அந்தந்த ஊர் முல்லா சொல்வது தான் Ultimate Truth என்று சொல்வது நாகரீகத்தின் பால், மனிதப் பண்பின் பால், பட்ட ஒன்று அல்ல. அது ஏழாம் நூற்றாண்டு அராபிய பாலைவனத்தில் உறைந்து விட்ட மனம். சிந்தை. வீட்டில் தனியாக இருக்கும் மருமகளை மாமனார் கெடுத்து வருகிறான். இது ஒரு முல்லாவிடம் தீர்ப்புக்குப் போக, அந்த முல்லா தீர்ப்பு அளிக்கிறான்: மருமகள் தான் தவறு இழைத்தவள். அவள் தன் மாமனாருடன் இணைந்து விட்டதால் இனி அவள் புருஷனோடு வாழக்கூடாது. மாமனாருடன் தான் வாழவேண்டும். இனி அவள் புருஷனுக்கு தாயாகிவிட்டவள். தன் தகப்பனிடமிருந்து விலகி, தன் மனைவியை அழைத்துக்கொண்டு தனியாகப் போக விரும்பிய கணவன் தடுக்கப்பட்டான். அவன் மனைவி, முல்லாவின் தீர்ப்புப் படி, அவனது தாய்க்குச் சமானமானவள். இந்த மூர்க்கனான முல்லா தான் அந்த ஊர் முஸ்லீம்களுக்கு எல்லா வழக்குகளுக்குமான முடிவான தீர்ப்பு தருபவன். இதைப் பற்றியெல்லாம் நம்மூர் வஹாபிகள் வாய் திறக்கமாட்டார்கள். ஏன். இனி வரும் எல்லா சமூகங்களுக்கும் எலலா தலைமுறைகளுக்குமான், உண்மைகளை ஏழாம் நூற்றாண்டு அராபியாவில் சொல்லியாயிற்று.
வலக்கர உரிமை என்ற சொல்லே என்னவோ போல இருக்கிறது. அதற்கு இவர்கள் விளக்கங்கள் வேறு தரத் தொடங்கி விடுகிறார்கள். இந்த சமாச்சாரங்களை இவர்கள் சொல்லக் கேட்டாலே, இன்றைய ஏலமுறைகள் அதன் சாரத்தில் அன்றே தொடங்கியாயிற்று. அதைத் தான் நேசகுமார் சொன்னார். இன்றைய தினம் போல ஒரு முறை, இரண்டு முறை என்று அன்றைய அராபியாவில் யாரும் கத்தவில்லை என்று நான் சொன்னால், உடனே அது ஏலம் இல்லை என்று நான் சொன்னதாக ஒரே குதி. அதன் அன்றைய ஆரம்ப வடிவம் என்று சொன்னதைப் பற்றி மூச்சு விடவில்லை. என்னென்னவோ மயிர் பிளக்கும் விளக்கங்கள். அவர்களை சக ஜீவன்களாக மனிதர்களாக மதிக்கவில்லை, அவர்கள் சந்தைப் பொருட்களாக, ஏலச் சரக்குகளாகத் தானே மதித்தைருக்கிறீர்கள் என்றால், அது பற்றி மூச்சு பேச்சு இல்லை.
ஜைத் என்ற அடிமைப் பெண், முகம்மது நபிக்கு அவருடைய முதல் மனைவி கதீஜா திருமணப் பரிசாகத் தரப்பட்டவள். திருமணப் பரிசாக ஒரு அடிமைப் பெண்!. சரிதானா? ஹரியானாவில், இப்போது எப்படியோ தெரியாது, என் நண்பன் ஒரு நல்ல எருமை மாட்டை ஓட்டி வந்தான், ஹிராகுட்டுக்கு. “என் மாமனார் கொடுத்தது, வரதட்சிணையில் இதுவும் சேர்ந்தது” என்றான். எல்லாம் பயன்படு பொருட்கள். அப்படித்தானே, வஹாபி சாகேப்?
முகம்மது நபி “நீங்கள் எவரும், ‘என் அடிமை, என் அடிமைப் பெண் ” என்று சொல்லாதீர்கள், “என் பணியாள், என் பனிப்பெண்” என்று சொல்லுங்கள்” என்றாராம். என்னய்யா பெரிய ஸ்தானம் கொடுத்து கௌரவிக்கப்பட்டது? அடிமையோம், பணியாளோ, இட்ட கட்டளையை நிறைவேற்ற வேண்டும். அது தானே. கட்டளை எதுவானாலும் இருக்குமல்லவா? அது தான் வஹாபியே சொல்லி விட்டாரே, ” என் மனைவியின் உரிமையாளன் நான்.” என்று. உரிமை எதற்கு? பொருளுக்குத் தானே. வஹாபி, சொல்லும், செயலும் ஒன்றேயான சிந்தனை கொண்டவர். கஷ்டமென்னவென்றால், அது ஏழாம் நூற்றாண்டு அராபிய சிந்தனை. 2009 தமிழ் நாட்டில்கூட “என் வாழ்க்கைத் துனைவி” என்று சொல்லமாட்டேன் என்கிறார். இது தானே பெண் என்றாலே போகப் பொருள் என்ற மனக் கட்டமைப்பு.
முகம்மது நபி யூத இனத் தலைவரின் மகள் ச·பியாவை முதலில் திய்யா தனக்கு வேண்டும் என்று எடுத்துக்கொள்ள, நபியின் தோழர், “ச·பியா உங்களுக்குத் தான் ஏற்றவள், மற்றவர்களுக்கு அல்ல” என்று சொல்ல, முகம்மது நபி, ச·பியாவைத் திரும்ப அழைத்து வரச்செய்து, அவளை மறுபடியும் ஒரு தடவை நன்றாகப் பார்த்து, தோழரின் தேர்வை மெச்சி, ச·பியாவை தனக்கு என்று எடுத்துக் கொள்கிறார். இது, நான் வஹாபியின் வாக்குமூலத்திலிருந்து எடுத்துக் கொள்கிறேன். சரி. அப்படி யென்றால் இது ஒரு தலைவன் கைப்பற்றிய பொருளில் தனக்கு வேண்டியதை எடுத்துக்கொள்ளும் முன்னுரிமையை, கைது செய்யப்பட்டவர்கள் மனிதர்கள் அல்ல, “என் பணியாட்கள்” என்பதும், அதிலும் இளம் பெண்கள், தலைவனுக்கு முதல் உரிமை உள்ள பொருள் என்பதும் தானே ருதுவாகிறது? திய்யாவோ, முகம்மது நபியோ, அந்தப் பெண்ணின் விருப்பம் என்ன என்பதைக் கேட்டார்களா? இல்லை.
ஏன்? ஏன் என்று என்ன கேள்வி? ஏன்யா, நான் வந்திருக்கிறது மாடு பிடிக்க. சந்தையில் எனக்குப் பிடித்த மாட்டை நான் பத்தீட்டுப் போறேன். மாட்டை, நீ வர்ரியான்னு கேக்கறது எந்த ஊர் வழக்கம்? அதான், செவலை நல்லாருக்கு கூட்டாளி சொன்னான். நான் எடுத்துக்கிட்டேன். அதுக்குப் பதிலா மயிலையே வேணா நீ எடுத்துக்க. உனக்கு ஒண்ணு எனக்கு ஒண்ணு, இதிலே நமக்குள்ள என்ன சண்டை?
வஹாப், நல்ல ஈமானான முஸல்மானுக்கு ஜன்னத்தில் 72 சுவன கன்னிகைகள் மதுக்குடத்தோடு வரவேற்கக் காத்திருப்பார்கள் என்று இஸ்லாமிய அறிஞர்கள் சொல்கிறார்கள். அவர்கள் என்ன உடை அணிந்திருப்பார்கள் என்பது தெரியவில்லை. கண்களுக்கு மாத்திரம் வலை உள்ள முழு கறுப்பு புர்க்காவாக இருக்கலாம் என்று நினைக்கிறேன். அது போக அது என்ன அங்கும் மதுக்குடம், கன்னிகைகள், அதுவும் 72பேர்? ஆக, ஜன்னத்துக்குப் போனாலும், அவர்கள் ஈமானான முஸல்மானுக்கு போகப் பொருட் தேவை. போகப் பொருள் என்றால் வேறு என்ன? கன்னிகைகளை விடவா? முஸல்மானுக்கு சரி. ஈமானான முஸ்லீம் பெண்களுக்கு யார், எவ்வளவு பேர், என்ன குடங்களோடு காத்திருப்பார்கள் என்று தெரியவில்லை.
கடைசியாக ஒன்று. நான் குரான் படித்ததில்லை, இஸ்லாமிய சரித்திரம் தெரியாது என்று சொன்னதெல்லாம், இந்த தர்க்கத் துக்கு வரும் முன் சொல்லிவிடவேண்டிய சாதாரண உண்மையும், நேர்மையான செயலுமாகும். நான் படித்திராத, தெரிந்திராத மற்ற விஷயங்கள் அனேகம் உண்டு. அவை இந்த சந்தர்ப்பத்தில் அவசியமில்லதவை. ஆனால், இதை ஏதோ பெருந்தன்மை என்று நீங்கள் சொன்னதாக நீங்கள் எழுதியிருப்பது, ஏதோ நான் குற்றத்தை, செய்த பாவத்தை ஒப்புக்கொள்வது போல சொல்கிறீர்கள். இது சாதாரண விவரம். அடுத்து உங்கள் நண்பர், என்ன குரான் கிடைக்காத ஒன்றா? என்று கேட்டதையும் சொல்கிறீர்கள். எப்படியெல்லாம் உங்கள் மனம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்பது வேதனையோடு தெரிகிறது. விஷ்ணு சகஸ்ரநாமம், ஹனுமான் சாலீஸா, நீங்களோ உங்கள் நண்பரோ படித்திருக்கிறீர்களா? இல்லை. சரி. ஏன். இரண்டு ருபாய்க்கு இதெல்லாம் கடையில் கிடைத்திருக்குமே, ஏன் படிக்கவில்லை? என்று நான் கேட்டால், அது விவேகத்தின் பால் பட்ட விஷயம் அல்ல. அது என் prejudice-ஐச் சொல்லும்.
மறுபடியும் நீங்கள் நான் இங்கு சொல்லியிருப்பதையெல்லாம் விட்டு விட்டு எதையாவது சம்பந்தமில்லாமல் சொல்லி, உங்கள் கேள்விகளால் என்னை முறியடித்து விட்ட திருப்தி கொள்வீர்கள். இது சாமர்த்தியமா, மனக் கட்டமைப்பா என்பது எனக்கு தெளிவாகவில்லை. ஆனால் ஒன்று.ல் நீங்கள் மிக பாக்கியவான். எனக்கு எல்லாவற்றிலும் கேள்விகளும், சந்தேகங்களும் நிச்சயமின்மையும் அடிக்கடி தோன்றி என்னை அலைகழிக்கும். உங்களுக்கு இந்த வேதனையெல்லாம் இல்லை. குரான் போதும். ஹதீஸ் போதும். போறாக் குறைக்கு ஒரு முல்லா எல்லா சந்தேகங்களையும் தீர்த்து வைப்பார். கி.பி. ஏழாம் நூற்றாண்டிலியே, அரேபிய பாலைவனத்தில் தோன்றிய ஒளி, இனி வரும் எல்லாக் காலத்துக்குமான உண்மைகளைச் சொல்லிவிட்டாய்விட்டது. இந்தக் கட்டமைப்பு பாறாங்கல் போன்று கடினமானது. வலிமையானது. எந்தச் சூறாவளிக்கும், காற்றுக்கும், மழைக்கும், இடிக்கும், பூகம்பத்துக்கும், ஆடாது, அசையாது, சலனப் படாது. தயாரான பதில்கள். என்றைக்கு மான உண்மைகள். ஈமான இருந்து விட்டால், 72 சுவன் கன்னிகைகள் மதுக்குடங்களுடன்………….
வெங்கட் சாமிநாதன்/2.7.09
- இஸ்லாமிய ஆய்வும் எமது இறையுதிர் காலங்களும் – 8
- ஓரின காதல் – வரவேற்கத்தக்க ஒரு சட்டதிருத்தம்
- வேத வனம் -விருட்சம் 40
- கரியமில இரகசியம்
- நண்பர் வஹாபிக்கு நன்றி
- Satsang led by Sri Nithya Bhaktananda Swami a direct disciple of Enlightened Master Paramahamsa Nithyananda
- முத்துக்கமலம் இணைய இதழ்
- “இரவலனாய் மாறிய மன்னன்”
- சித்திர சிற்பி, புதிர் குரு= தமிழில் இரண்டு மென்பொருட்கள்
- பிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள் ! பரிதி மண்டலம் சுற்றும் நமது பால்வீதி காலாக்ஸி எப்படி இயங்குகிறது ? (கட்டுரை: 60 பாகம் –
- உயிர்த்தெழுதல்…
- அவரவர் திராட்சை..
- இருட்டுக்குள் தீப்பிளம்பு…
- நான் முடிவு செய்கிறேன் உன்னை
- வானம் பாருங்கள்
- மைக்கல் ஜாக்சன்
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -2 பாகம் -2
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) காதல் கீதம் கவிதை -12 பாகம் -2
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -43 நீ ஒரு தென்றல்
- ஜன்னத்தில் மதுக்குடங்கள் தாங்கிய 72 சுவன கன்னிகைகளை எதிர்நோக்கி
- KhudaKayLive (in the name of god) திரைவிமர்சனம்
- வார்த்தை ஜூலை 2009 இதழில்…
- எதிரும் புதிரும்
- அறிவியல் புனைகதை: ‘பிறர்’ என்ற எதிர்காலம்
- பதின்மம்
- அவள் ஒரு தொடர்கதை
- விஸ்வரூபம் – அத்தியாயம் நாற்பத்திரெண்டு
- இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – பத்தாவது அத்தியாயம்