சீரியல் தோட்டம்

This entry is part [part not set] of 39 in the series 20070920_Issue

கோமதி நடராஜன்


சீரியல் தோட்டத்துக்கு உரிமையாளரான கல்லுப்பட்டி கந்தனைப் பற்றி ஊரெல்லாம் பேச ஆரம்பித்து,மாவட்டம்,மாநிலம் என்று பரவி நாடே பேச ஆரம்பித்து விட ,பத்திரிகைகள் அனைத்தும் அவர் ஊர் நோக்கி படை எடுக்கத் தொடங்கினர்.அதில் முதலாவதாக வந்த வர்,”நாளுக்கொரு நச்”99பைசா தினசரி நிருபர்,
எல்லா நிருபர்களையும் போல், சம்பிரதாயமான முன்னுரை நடுவுரை முகவுரை எல்லாம் முடிந்து ,கல்லுப்பட்டி கந்தனிடம் பேட்டியைத் தொடங்கினார்.

“ஆச்சரியமா இருக்கே !உங்க தோட்டத்திலே காய்கறியெல்லாம் சொட்டு நீர் பாசனத்திலே விளைஞ்சதா?”
“ஆமாங்கய்யா”கந்தன் பவ்யமாகப் பதிலுரைத்தான்.
“சொட்டு நீர் பாசனம்னா என்ன? இந்த நெல்,கரும்பு,தோப்புகளுக்கெல்லாம் செய்றாங்களே அது மாதிரியா?”
“ஐயோ!அதெல்லாம் பண்ணனும்னா நெறைய பணம் வேணுமே,அதுக்கு நான் எங்கே போவேன்?”
“அப்போ எப்படி செலவில்லாம சொட்டு நீர் பாசனம் ?” நிருபர் சந்தேகத்தையும் ஆச்சரியத்தையும் ஒன்றாக்கி கேட்டார்.
“இந்த டீவீலே சீரியல் ஓடும் பாருங்க,அப்போ,என்ன நடக்கும்?
“என்ன நடக்கும்?”,நிருபர் எதிர் கேள்வி தொடுத்தார்.
எல்லார் கண்ணுலேருந்து பொல பொலன்னு கண்ணீ­ரா வருமா..அது அத்தனையையும் ஒரு சொட்டு விடாம சேகரிப்போம்,…
“அதெப்படி ?!”
“.. அவங்க கண்ணை மறைக்காம ஒரு புனலையும் ஒரு டியூபையும் பொறுத்தி வச்சிட வேண்டியது,டியூபோட அடுத்த நுனி தோட்டத்துக்குப் போற வடிகாலோட கனெக்ட் பண்ணி வச்சுடணும்.
எல்லாரோட கண்­ரும், ஒரு சொட்டு வெளியே சிந்தாம, நேர தோட்டத்திலே செடிகள்லே போய் விழும் .இதுதாங்க என்னோட டெக்னிக்.”
“அப்போ உங்க தோட்டத்திலே விளைச்சல் அமோகம்னு சொல்லுங்க”
“இருக்காதா பின்னே? ரியல் பார்க்றவங்க எல்லோரையும் என்னமா அழவைக்குது இந்த டீவீ..இதோ பாருங்க!இது மெட்டி ஒலி கத்திரிக்காய்,இது அண்ணாமலை அவரைக்காய்,இது சித்தி முங்கைக்காய்,”
அடே!காய்கறிகளுக்கெல்லாம் சீரியல் பேரா வச்சிட்டீங்களா!அததுக்கு பெயரை எப்படி செலக்ட் பண்ண்றீங்க?
எந்த சீரியல் கண்­ர் எந்தந்த பாத்தியிலே விழுறதோ அதுலே விளைஞ்சதுக்கெல்லாம் அந்தந்த சீரியலோட பேரை வச்சிடுவேன்”.
“சூப்…ப்…பர்மா!”
“இங்கே பாருங்க,இது சித்தி முருங்கைக்காய்,காது கிட்டே வச்சு கேளுங்க,”சி…த்…த்…தீ”ன்னு கேக்கும்.சங்குக்குள்ளிருந்து “ஓம்” கேட்பது போல் பயபக்தியுடனும் ஃபிளாஸ்க்கிலிருந்து அலை ஓசை கேட்பது போல் பரவசத்துடனும் காட்டினான்
“இந்த கத்திரிக்காய் கீழே விழுந்தா, மெட்டி ஒலி, சன்னமா காதிலே விழும்.
“என்னாலே நம்பவே முடியலீங்க..ரொம்ப ஆச்சரியமா இருக்கு!…
“ஆமா,இந்த செடியிலே எல்லா பாவக்காயும் பிஞ்சிலே பழுத்துக் கிடக்கே,ஏன் இப்படி பறிக்காம விட்டுட்டீங்க?
“பறிக்காம விடலீங்க,அதோட காரணத்தைச் சொன்னா அசந்திடுவீங்க.சில சீரியல்லே பாத்தீங்கன்னா,இந்த பிஞ்சுக் குழந்தைங்கெல்லாம் பழுத்த பழங்க மாதிரி வசனம் பேசி அழவைக்குமே அந்த கண்ணீ­ரிலே வளர்ந்த செடிங்க…
… இங்கே…இந்த சௌ சௌ கொடியைப் பாருங்க,சில சௌசௌ மேலே கையை வச்சா ஒரே சொதப்பலா உள்ளே போகுது பாருங்க ….”
ஆமா! ஏன் அப்படி?சரியா தண்­ர்,[கொஞ்சம் இடைவெளி விட்டு,] சாரி! சாரி! சரியா கண்­ணீர் விடுறதில்லையா?அல்லது நிறைய கண்­ணீர் விட்டுட்டீங்களா?
அப்படியெல்லாம் எந்த தப்பும் இங்கே நடக்காது..,இதெல்லாம், சொதப்பல் சீரியல் கண்­ரோட எஃபக்ட்…”
நச் நச் என்று ஊரில் ஒரு புள்ளி விடாமல் ஆடவைக்கும் பத்திரிகை நிருபர்,முதல் முறையாக ஆடிப் போய் நிற்க கந்தன் கம்பீரமாக நின்று கொண்டிருந்தான்.
“என்னங்க இது இந்த புடலங்காய் 10-12 அடி இருக்கும் போல இருக்கே?”
“ஆமாங்க!இந்த புடலங்காய், வளருது வளருது வளந்து கிட்டே இருக்கு”,என்று விசு தொனியில் கூறிவிட்டு.,”நம்ம மெகா சீரியல்”தாய்மாமன்” 876 எப்பிசோடு தாண்டியும் இன்னும் ஓடிட்டே இருக்கே, அதோட வளர்ச்சி இது…அந்த சீரியல் முடியும் போதுதான் வெட்டலாம்னு இருக்கேன்…
மலைப்பாம்பைப் பார்த்திருந்தால் கூட மனுஷன் ஆடிப் போயிருக்க மாட்டார்.நிருபர் ஸ்தம்பித்து நின்றுபோனார்.
“இதை வெட்டின உடனே, கோயம்பேடு மார்க்கெட்லே வாசல்லே இருந்து உள்ளே வரை கட்டி தொங்கப் போட்டு “உலகத்திலேயே நீள புடலங்காய்”னு விளம்பரம் பண்ணப் போறேன்..அதை திறந்து வைக்க நம்ம ராதிகா,திருச்செல்வம்,மாதிரி ஆட்களைக் கூப்பிடுறதா ஐடியா இருக்கு….”,நிருபர் கால்வாசி மயக்கத்துக்கு வந்து விட்டவர் போல் கண்கள் சொருக நிற்க கந்தன் தொடர்ந்தார்..”அப்படியே கின்னஸ் புஸ்தகத்திலேயும் போடச் சொல்லாம்னு இருக்கேன்…மெகா சீரியல் எஃபக்ட் இருக்கிறதாலே இது பழுக்குறதுக்கும் நாளாகும்..அழுகுறதுக்கும் நாளாகும் ..அதுக்குள்ளே அதை நாலு பெரிய ஊர்களுக்கு எடுத்துட்டுப் போய் பார்வைக்கு வைக்கணும்,ஏன்னு கேட்டிங்கன்னா நாலு பேருக்கு மனுஷனோட சாதனை தெரியணும் அப்பதானே அவங்களும் எதையாவது சாதிக்கணும்னு நினைப்பாங்க,” பாதி சாய்ந்த நிலையில் நிருபர், பைசா நகரத்து சாய்ந்த கோபுரமானார்.
..அப்புறமா நம்ம நயான்தாரா,ஜோதிகா,அசின் ,கோபிகா இவங்க கையிலே கொடுத்து கையிலே தோள்லே கழுத்திலேன்னு சுத்திவிட்டு படம் எடுத்து போஸ்டர் அடிச்சு ஊர் முழுக்க வைக்கணும்…”நிருபர் கண்கள் ஆச்சரியத்தில் பட படத்தன.
“தாவரங்களுக்கும் உயிர்,உணர்ச்சி இருக்குன்னு கண்டு பிடிச்சாங்களே அது உண்மைதாங்க…”அடுத்த அதிர்ச்சிக்குத் தன்னைத் தயார் படுத்திக் கொண்டு பேட்டியைத் தொடர்ந்தார்.உரலுக்குள் தலை பாதி போய் விட்டது என்ற நிலையில் நிருபர் தலையில் உலக்கை நச்சென்று விழுவதற்கு அஞ்சாமல் கேள்விகளைத் தொடுத்தார்.
“எதை வச்சு சொல்றீங்க?”
“வாரம் வாரம் வருமே அந்த சீரியல் புண்ணியத்திலே ஒரு வருஷமா வளர்ர செடிங்க இது..”
“நான்கு அடி வளர வேண்டிய செடி,ஒரு அடி கூட வளராமல் இருப்பதைப் பார்த்த நிருபர்,
“ஒருவருஷத்துக்கு இவ்வளவுதானா வளர்ச்சி இருக்கும்?!!!!!!”என்று கேட்டு வைத்தார்.
“சொன்னா அசந்திடுவீங்க. சீரியல் முடிஞ்சதும் “தொடரும்”னு போட வேண்டியதுதான் ,இந்த செடிகளுக்கெல்லாம் எப்படித்தான் தெரியுமோ..டக்குனு வளர்ச்சியை ஒருவாரத்துக்கு நிறுத்திக்கும்….”
“என்னய்யா சொல்றே?!!!!!”,நிருபரின் கண்கள் மேலும் 10சதவிகிதம் ஆச்சரியத்தில் விரிந்தன.
….அப்புறமா அடுத்த வாரம் டைட்டில் மியூசிக் தொடங்கும் போது மறுபடியும் வளர ஆரம்பிக்கும்…..நம்ப முடியுதுங்களா?”
“ஆமா நம்பமுடியலைதான்…இது ஒரு சூப்பர்மெகா ஆச்சரியம்.”
நிருபர் முக்காலேஅரைக்கால் மயக்கத்தோடு அடுத்த பாத்திக்குப் போனார்.
“இது பூசணிக் கொடிதானே ,இதிலே எல்லா பூசணிமேலேயும், கலர் கலரா பார்டர் போட்ட மாதிரி வருதே?நீங்களா பெயிண்ட் அடிச்žங்களா?நிருபர் இப்படிக் கேட்டதும், கந்தனுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்து விட்டது.
“என்ன சார் நீங்க ?இயற்கையா வளர்திலே போய் நாங்க கை வைப்போமா அதுக்கு அவசியமே கிடையாதுங்க…தாவரத்துக்கும் உணர்ச்சி இருக்குங்றதுக்கு இன்னொரு உதாரணம் சொல்றேன் கேளுங்க!
“கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய்,தீர விசாரிப்பதே மெய் என்ற கட்டத்தையெல்லாம் தாண்டிய நிருபர், கந்தனை நம்பவும் முடியாமல் நம்பாமல் இருக்கவும் முடியாமல்,கதி கலங்கி நின்றார்,பிறகு சுதாரித்துக் கொண்டு,” நம்பியும் நம்பாமலும்” என்ற பாவனையோடு கந்தன் சொல்லுக்கு செவி ஈந்து நின்றார்.
இந்த பூசணிக்கு நடு நடுவே கலர் வருதுங்களா,அது வேற ஒண்ணுமில்லை,அதுதான் “சோட்டா சா பிரேக்”பார்டர்.
žரியலுக்கு நடுவே விளம்பரம் வர்ர சமயத்தில் விளைச்சல்லேயும் ஒரு தாவர மாற்றம் தெரியுது பாருங்க,டான்ஸ’ங் ஃபௌண்டன்னு சொல்வாங்களே அது மாதிரி விளம்பரம் வர்ரப்போ இந்த லேடீஸ் எல்லாம் கண்ணைத் துடைச்சுட்டு பத்து நாளைக்கு மொத்தமாக சுட்டு வச்ச அப்பளத்தையும்,ஃபிரிஜிலேருந்து ரசத்தையும் எடுக்கப் போவாங்களே அப்போ அவங்க மனசும் கொஞ்சம் லேசா ஆகியிருக்குமா அதோட எஃபெக்ட்லேதான் பூசணிக்காய் மேலே கலர் கோடு விழுந்தா மாதிரி வளர்ச்சி அடையுது..செடிகளுக்கும் உணர்ச்சி இருக்குன்னு நிரூபிக்க இதை விட என்ன ஆதாரம் வேணும் சொல்லுங்க?….. ”
” இந்த செடியிலே கொத்தவரங்காயெல்லாம் பாதி வளர்ந்து பாதி வளராம நிக்குதே பார்த்தீங்களா?”நிருபருக்கு ஏற்கனவே பாதி தலை சுற்றல்,இப்பொழுது இதையும் கேட்டு ஒன்று கிடக்க ஒன்று ஆகிவிடக் கூடாதே என்ற அச்சம் பிடித்துக் கொள்ள பாதி பேசியும் பாதி பேசாமலும் நின்றார்.
“சில சீரியல் முடிஞ்சுதா முடியலையா?நாளைக்கு வருமா வராதா?அவன் என்ன ஆனான் இவள் எங்கே போனாள்னு டிவீ பார்க்றவங்களையெல்லாம் மண்டையைப் பிச்சுக்க வச்சு அந்தரத்திலே அம்போன்னு நிக்குமே அந்த சீரியல் பாசனம்தான் இந்த கொத்தவரங்காய்களை இப்படி அரை குறையாக்கி வச்சிருக்கு.என்ன இருந்தாலும் இது ரொம்ப அநியாயம்ங்க”
அதுவரை எப்படியோ தாக்குப் பிடித்து நின்று வந்த நிருபர் இந்த அதிசயத்தைக் கேட்டதும் தடாலென்று பாத்திக்கு நடுவே மயங்கி விழுந்தார்.
கந்தன் ஓடிப்போய் கைகளுக்குள் எதையோ கசக்கி சாறு எடுத்து வந்து நிருபர் கண்களில் பிழிந்தார்.
புத்துணர்ச்சி வந்தது போல், நிருபர் அடுத்த வினாடி, விழுந்த வேகத்திலேயே எழுந்து நின்றார்.
“என்ன இது என் கண்ணு அப்படி குளிர்ந்து ஜில்லுனு இருக்கே!என்னய்யா பண்ணினே?”
கந்தன் கைகளைத் திறந்து உள்ளங்கையைகாட்டினான் அதில் கசக்கப் பட்டிருந்த வெங்காயத்தைக் கண்டதும் கண்கள் இன்னும் அகலமாகியது.
“வெங்காயமா? வெங்காய ஜூஸா இப்படி குளு குளுன்னு இருந்துச்சு ,இதைப் போய் நான் பேப்பர்லே போட்டா யாராவது நம்புவாங்களா?ஏமாத்றதுக்கும் ஒரு அளவு இருக்கு தெரியுமா சார்?நிருபர் கடுகடுத்தார்.
“நான் சொல்றதை முதல்ல கேளுங்க அப்புறமா,நான் ஏமாத்துரேனா இல்லையான்னு சொல்லுங்க.அவருடைய தோட்டத்து வெங்காயதைப் பிழிந்த மாதிரி வார்த்தையில் குளிர்ச்சி கலந்து கூறினான்
நானும் உங்களை மாதிரிதான் பார்த்த உடனே நம்பலைதான்.பிறகுதான் காரணம் புரிஞ்சுது…”
“அப்படி என்னைய்யா காரணம்?”
“எல்லா செடிகளும் ஒழுங்கா வளரும் போது இந்த வெங்காயம் மட்டும், “திருநெல்வேலிக்கே அல்வாவான்னு கேக்ற மாதிரி,வெங்காயத்துக்கேக் கண்­ரான்னு யோசிச்சுதோ என்னவோ அப்படியே அதோட குணத்தை அப்படியே டோட்டலா, மாத்திக்கிச்சு,…”என்ன சொல்றீங்க ?”பதறினார் நிருபர்.
“…எங்க தோட்டத்து வெங்காய ஜூஸ் ஒரு சொட்டு விடாம ஐஸ் பன்னீர் மாதிரி மாறிடுச்சு,இதிலேருந்து என்ன தெரியுது?…
“என்ன தெரியுது?”
” தாவரத்துக்கு சாதாரண உணர்ச்சி மட்டும் இல்லை ரோஷ உணர்ச்சியும் இருக்குன்னு தெரியுது…..”பெருமையுடன் சொல்லிக் கொண்டே திரும்பினான் கந்தன் ,
நிருபர் நொந்து நூலாகி மறுபடியும் கீழே விழுந்து கிடந்தார்.
தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் பக்கம் திரும்பி,
“ஏலே பிச்சையா இந்த ஐயாவைக் கொண்டு நம்ம ஆஸ்பத்திரிலே சேர்க்கணும் வண்டியை எடு.நான் இவரை அட்மிட் பண்ணிட்டு வீட்டுக்கு போறேன், என்.டி. டிவீலேருந்து என்னை பேட்டி எடுக்க வாராங்க அதுக்கு ரெடியாகணும்.பக்கத்து ஊர் புளியம்பட்டி விவசாயி, ஆரோக்கியசாமியோட கலந்துரையாடலோ என்னவோ இருக்கு [அவர் ரெண்டடி மரத்திலேயே நெல்லிக்காய் எலுமிச்சைன்னு கொஞ்ச நாளிலேயே அமோக விளைச்சலைக் காட்டினாராமே]……..என்ன ஆச்சு இந்த மனுஷனுக்கு வரும்போது நல்லாத்தானே இருந்தான், பேசிட்டு இருக்கும் போதே பொத்து பொத்துனு விழுந்துட்டே இருக்கானே…ஏழுமணிக்கெல்லாம் திரும்பிடணும், இன்னைக்கு “ஓர்ப்படி”ன்னு ஒரு புது žரியல் தொடங்கப் போகுதாமே,குடும்பžரியல்னு வேறே விளம்பரம் பண்ணியிருக்கான்,பின்னே ஓர்ப்படிங்ற பேர்லே சையன்ஸ் படமா எடுப்பான்? பெயரைப் பார்த்தாலே அழுகைக்குப் பஞ்சமே இருக்காதுன்னு நினைக்கிறேன்…” பேசிக் கொண்டே கந்தன், நிருபரைக் கைத் தாங்கலாக அழைத்துக் கொண்டு நடந்தான்.


ngomathi@rediffmail.com

Series Navigation