சிலைப்பதிவு

This entry is part [part not set] of 35 in the series 20070927_Issue

சாமிசுரேஸ், சுவிஸ்



கைப்பிடியில்லாச் சுவடுகளின் கரையில்
இறுகப்பதியாது ஈரங்களாய் காய்ந்தபடி
நகர்கின்றன விழுதுகள.;

ஏணிகளின் மீதேறி உச்சியில் நின்று
உதறித்தள்ளிய கால்கள்
சருகுத் தூசிகளால்மறையும.;

எனைப் பயங்கொன்று போகாது.

ஒருமுறைதுடிக்கும் மரணத்தின் காற்று
என்மேல் வீசமுடியாது.
இங்கு உயிரை வரைந்துகொள்ள
ஒரு துடிப்புப் போதும்.

மறுபடி மறுபடி மரணிக்க வேண்டாம்
காற்று தீண்டுவதற்கு முன்
ஏதுமறியா ஒரு நொடி மரணம் வேண்டும்
கனவுகள் கரைந்து விடவேண்டும்.

மௌனங்களால் மட்டுமே விளையும் பூமியில்
எல்லாமே என் இயல்புக்கு மாறாய் நடக்கிறது.

இரசமேட்டில் என் முகவிழிகளைத்தேடி
கைகள் பரபரக்க
கிழிந்து தொங்கிய மணித்துளிகள்
என்னுள் சிதைந்துபோயின

நான் நானாகவே இருப்பதற்கு
துப்பப்பட்டவன் என்பதால்
மேகத்தசைகளுக்குள் எனைப் புதைத்துவிட்டேன்

என் காலடிச் தடங்கள் பற்றி
அடுக்கடுக்கான விடைபகர்வின் அடிப்படையில்
ஒரு சிறிய முறிவை புரிந்துகொள்ளல் கடினம்
அவை அழிக்கமுடியாத நிர்ப்பந்தங்கள்

எல்லாம் தவிர்த்து
எனை மறக்க முயற்சிக்கிறேன்
நினைவுகள் உடைய
துருப்பிடித்த இரத்தத்துளிகளுடன்
நகர்கிறது வாழ்க்கை.


sasa59@bluewin.ch

Series Navigation

சாமிசுரேஸ்,சுவிஸ்

சாமிசுரேஸ்,சுவிஸ்