சிங்கத்தை கொலைசெய்வதற்கு என்னிடம் ஆயுதங்கள் எதுவுமில்லை

This entry is part [part not set] of 34 in the series 20100704_Issue

ஹெச்.ஜி.ரசூல்எனது தூக்கம் கலைந்தபோது அதிர்ந்து போனேன்
ஒரு சிங்கத்தை கட்டிப்பிடித்துக் கொண்டு
படுக்கையில் கிடந்திருக்கிறேன்
எனது இரவையும் படுக்கையையும்
பகிர்ந்து கொள்ள அது எப்போது
என்னிடம்வந்து சேர்ந்ததென்று தெரியவில்லை
மிதமிஞ்சியபயத்தால் அசைவற்றுக் கிடக்க.
சிங்கத்தின் திமிருக்குள்
என்னுடல் நொறுங்கத் தொடங்குகிறது.
என்னை இறுக கட்டியணைக்கும்
சிங்கத்தின் பிடியிலிருந்து விடுபட முடியவில்லை.
சிங்கத்தை கொலைசெய்வதற்கு
என்னிடம் ஆயுதங்கள் எதுவுமில்லை.
ரத்தவாடை கசிந்துபரவ
என்னை புணர்ந்து முடித்த
மகிழ்ச்சியை கொண்டாட நினைத்த சிங்கம்
என்னுடலை கடித்து தின்ன ஆரம்பித்தது.

Series Navigation

ஹெச்.ஜி.ரசூல்

ஹெச்.ஜி.ரசூல்