சலிப்பு – ஐந்து கவிதைகள்

This entry is part [part not set] of 23 in the series 20020505_Issue

தேர்வு ஜெயமோகன்



முத்தம்
தேவதேவன்

கட்டிப்பிடித்து முத்தமிடவா முடியும்
ஒரு காப்பி சாப்பிடலாம் வா


துண்டிப்பு
ராஜ சுந்தரராஜன்

மழெ இல்லெ தண்ணி இல்லெ

ஒரு திக்குல இன்ர்ந்துங்
க்டதாசி வரத்தும் இல்லெ

அடைக்கலாங் குருவிக்கு
கூடு கட்ட
என் வீடு சரிப்படலே

நான் ஒண்டியாதான் இருக்கேன்
இப்பவும்


டிசம்பர் செவ்வாய்
கலாப்பிரியா

இந்நாள் பொன்னாள் ஆகும்
அறிகுறி எதுவும் இல்லை இதுவரை
தலைவர் எவரும் சாகவில்லை
தெய்வகுமாரன் பிறந்ததை சுட்டும்
விண்மீன் எதுவும் தென்படவில்லை
அர்சி விளைச்சலைஅதிகப்படுத்த
ராக்கெட் புறப்படும் தகவலுமில்லை
இன்றும்
என்றும்போல
சமுத்திரம் மற்றும்
—றுக்கோடி குட்டையில்
சூகும தாரைகள் கிளம்பி
வானோக்கி உயர்ந்திருக்கும்
பெயரிடப்படாத குட்டி நட்சத்திரம்
இடம் பெயர்ந்திருக்கலாம் ஒருவேளை
லட்சக்கணக்கான மண்புழுக்கள்
மண்ணைதுளைத்து மீண்டிருக்கும்
எழுதப்படாத
மனிதகுலவரலாற்றில்
இடப்பட்ட காற் புள்ளியாய்
நடக்கிறேன்
டாக்கடை நோக்கி


‘மகா ‘பாரதம்
கலாப்பிரியா

இவார்த்தைகளை
எடுத்துக் கொள்வது
இப்போது
வேறோர் சாரார் முறை

பெருந்தலைவர்கள் பேச்சில்
உதிர்ந்தவை
குட்டித்தலைவர்கள் வடிவமைத்து
கோஷங்களாக மாற்றி
வந்திறங்கின
பட்டிதொட்டியெல்லாம்

பெருமை மிக்க தொண்டர்கள்
பள்ளிப்பிள்ளைகள்
‘பேசப்பழக ஆரம்பித்து
பெயர் உச்சரிக்கப்படும்போதெல்லாம்
திரும்ப நேர்ந்து
மொழிக்கு அடிமையான ‘
சின்னஞ்சிறார்கள்
சேவகர்கள்
யாவரும் உபயோகித்து
யாவரும் மறந்தவை

இன்று வேறோர் சாரார் முறைக்காக
மீண்டும் தோன்றியுள்ளன
இவ்வார்த்தைகள்


ஸ்தலபுராணம்
காளி-தாஸ்

அய்யோ ஆத்தா பாவி
இப்டிப்போட்டு ஒதைக்கிறானே
நடுநிசி ஒப்பாரி
தப்பாமல் கேட்கும்
சுற்றுச்சுவர் இருக்காது
முண்டகக்கண்ணி அம்மன் கோவிலுக்கு
புரட்டாசிமாத பொங்கலில்
சவுண்ட் சர்வீஸ் பாட்டு
விடியும்மட்டும்
சாவுக்கும் ஆட்டம் பாட்டு
தாரை தப்பட்டை
கடனுக்குத்தான் வியாபாரம்
சாக்கடைக்கரை ஆப்பக்கடையில்
நான்குநாள் மழைபுயலென்றால்
மாநகராட்சி சாப்பாடு உத்தரவாதம்
நாய் வளர்ப்பும் காவலுக்கெனில்
ஏது இருக்கும் பொக்கிஷம்
கண்கள்மின்ன பின்னிரவில்
தெருவுக்கு இரண்டின் தொடர்குரைப்பு
முந்நாள் மாண்புமிகு
இந்நாள் மாண்புமிகு
யாவர் பேரிலும் இருக்கும்
சேரிகளின் ஸ்தலவிருட்சம்
முருங்கை

***

Series Navigation