சம்பந்தம் இல்லை என்றாலும் – விநோத ரச மஞ்சரி (ஆசிரியர் அஷ்டாவதானம் வீராசாமி செட்டியார்)

This entry is part [part not set] of 45 in the series 20071227_Issue

எஸ்ஸார்சி


விநோத ரச மஞ்சரி

வெளியீடு: இரத்தின நாயகர் அண்டு சன்சு ஆண்டு 1921. ஆசிரியர் அஷ்டாவதானம் வீராசாமி செட்டியார்
விலை ரூபா2-0-0

சம்பந்தம் இல்லை என்றாலும்

நூன்முகம்

தமிழ்ப்பாஷையினுள் நூல்கள் அனைத்தும் சாதாரணமாக உணர்தற்கரிய செய்யுள் ரூபமா இருத்தலின், அவை
ஐயந்திரிபறக்கற்றோர்க்கன்றி மற்றோர்க்கு எளிதிற் புலப்படாமைநோக்கி, வசன நடையாயிருந்தால் யாவற்கும் உபயோகமாமென்று கருதி, சென்னைத்துரைத்தன வித்தியாசாலையில் திராவிடாந்தி பாஷா போதகராயிருந்த
பெர்லிசு துரையவர்கலுடைய அனுமதிகொண்டு அவ்வித்தியாசாலையில் பிரதம தமிழ்ப் பண்டிதராயிருந்த அஷ்டாவதானம்-வீராசாமி செட்டியார் அவர்கள்,,,,,,,,,,,,,புத்தகத்திற்கு’வினோத ரச மஞ்சரி’ என்னும் பெயரும் இட்டார்.

————————–
பதிவிரதைகள் கணவனது பாதம் விலக்கிய நீரைக் கங்கா தீர்த்தமாகவும், அவன் உண்டமிச்சலைத் தேவதாபிரசாதமாகவும், அவன் வாய்ச்சொல்லை குரூபதேசமாகவும் கொள்வதேயன்றி வேறே தீர்த்தம்,
பிரசாதம் தரிசனம், மந்திரோபதேசம் உண்டென்று மதிப்பதில்லை. -பக்கம் 26.
————————-
மார்ட்டின் சீமன்சன் துரை யவர்கள் வந்து கடவுள் வனக்கஞ்செய்து தமது கையில் ஔர் வீணையை மெல்லென எடுத்தார்.
அந்த நாதம் அவ்வீணைக்கே இயல்பாயுள்ளதோ? அல்லது அதை வாசித்த மார்ட்டின் சீமன்சன் துரையின் கை வாசியோ ?நமது கவர்னரவர்களுடைய சபா மண்டபக்கட்டுக்கோப்பின் வளமோ? என்னவோ தெரியாது. அந்த வீணை பேரியாழ்,சகோடயாழ்,மகரயாழ், செங்கோட்டி யாழ் நால்வகையாழில் ஒன்றுதானோ? வேறு ஒன்றுதானோஅல்லது சரசுவதி, சித்திரசேனன் தும்புரு, நாரதர் ஆகிய நால்வருடைய கலாவதி ,கச்சலா மகதி, பிருகதி, ஆகிய வீணையில் ஒன்றுதானோ? அவ்வீணையின் இசை யாழுக்குரிய ஏழ்வகை நரம்பிசையோ? அந்நரம்பிசைக்கு உவமையாகச்சொல்லப்பட்ட மயிலிசை முதலியனவோ? அவ்விசையின் சுவை கரும்பின் சுவையோ? கதலி பலா மா முதலிய கனிகலின் சுவையோ! பால் தேன் பாகு ஆகிய இவைகளின் சுவையோ! யாதென்று நிரூபிக்கிறது!
பக்கம்-29
————————
பற்பல தேசங்களும் நமது ஆங்கிலேய மகாராணியின் அழகிய வெண்கொற்றக்குடை நிழற்கீழ் அடங்கியிருக்கின்ற வென்பதற்குப்பிரத்தியட்சமாக, அந்தப்பற்பல ராச்சியத்தாருடைய விசித்திரமான கொடிகள் யாவும் ஒவ்வொரு விசேஷ தினங்களில் இங்கிலாண்டில் மாத்திரமல்ல இந்தியாவிலும் கல்கத்தா முதலிய ராஜதானிகளின் கோட்டைக்கொடிக்கம்பங்களிலெல்லாம் தேர் சிங்காரித்ததுபோல அடுக்கடுக்காக ஏற்றி அலங்கரிக்கப்பட்ட, அவை அனைத்திற்கும் மேலாகத்தருமச்செங்கோல் ஔச்சி வரும் இந்தப்பிரித்தானிய துரைத்தனத்தாரின் மகிமை தாங்கிய கொடி ஏற்றப்பட்டுப்பிரகாசிக்கின்றதே இதை விட வேறு திருஷ்டாந்தமும் வேண்டுமோ?
பக்கம்-94
இத்தன்மையாகிய ஆங்கிலேய அரசாட்சியானது இடையூறின்றி னெடுங்காலம் நிலைபெற்றிருக்குமானால் இவர்கள்
கோலின் கீழ் அமைவுற்றிருக்கும் சர்வஜனங்களுக்கும் பரம்பரை பரம்பரையாய் ஆச்சந்திரார்க்கம் விசேஷித்த நன்மை உண்டாகுமென்பதற்கு ச்சந்தேகமில்லை..
பக்கம்-94
—————————————————————————————————-
அப்படியே நாம் பிரார்த்தனை செய்வோமென பிறகு இருவரும் ஒருமனப்பட்டு ஆங்கிலேய அரசாட்சி தழைத்தோங்கி நீடூழியாய் அழியாது நிலைபெற்ரிருக்க வேண்டுமென்று சச்சிதானந்த நித்திய பரிபூரண கர்த்தாவை மன மொழி மெய்களால் தியானித்து வாழ்த்தி வணங்கி உய்ந்திருந்தார்கள்.
பக்கம்-95
பயனிலுழவு
பிறகு அதில் சீரகச்சம்பா சிறுகமனிச்சம்பா ,பெரியசம்பா,சன்னசம்பா,சிச்சம்பா இ,லுப்பைப்பூசம்பா மல்லிகைச்சம்பா, கம்பன்சம்பா,கைவளச்சம்பா,குங்குமப்பூச்சம்பா,குண்டன்சம்பா,கோடைச்சம்பா,ஈர்க்ச்சம்பா,புனுகுச்சம்பா,முத்துச்சம்பா,துய்யமல்லிகைச்சம்பா,மோரன்சம்பா,மாலன்சம்பா,சீவன்சம்பா,செம்பிலிப்பிரியன்,பிசானம் மலைகுலுக்கி ,மடுவிழுங்கி,காடைகழுத்தன்,செம்பானை, பூம்பாளை,முட்டைக்கார்,கடப்புக்கார், மோசனம் ,மணக்கத்தை,பிச்சவாரி ஈசர்கோவை, இரங்குமேட்டான்,செந்நெல் வெண்ணெல், முதாலன நன்செய்தானியங்களும்….,
பக்கம் 42
பயிரிடும் குடிகளைத்திருடர்களைப் பிடிக்கிறது போல் பிடித்துவந்து கையையும்,காலையும் குன்டுக்கட்டாகக்கட்டி
கிட்டியகோல் பாய்ச்சிக்கடுமையாய் வெயிலெரிக்கும் மத்தியான வேளையில் ஆற்று மணலிர் பதைபதைக்க உருட்டி விடுகிறதும் கழுத்துக்கும் காற்பெருவிரலுக்கும் கயிறுமாட்டி அண்ணந்தாள்போட்டு நெற்றியின் மேல் பெரிய கல்லெடுத்து வைத்து வெயிலிலே நிறுத்திப்பலவித்திலும் கசுதிப்படுத்திக் கிசுதிகட்டச்சொல்லுகிறதும்,,,,,
பக்கம் 45
இந்து தேசத்திர்கும் மற்ற தேசங்களுக்கும் சாட்சாது ஈன்ற தாய் போல் தோன்றினர்வகளாகிய மாட்சிமையுள்ள கவர்மென்டார்,,,,,
பக்கம் 45
ஆங்கிலோ தேசத்தில் மகிமைதங்கிய பிருன்சுவிக் வமிசத்தில் வலம்புரிச்சங்கில் உற்பவித்த அழகான ஆணிமுத்தைப் போலத்தோன்றி,விக்டோரியா என்று சிறந்த பெயர்பெற்ற அருமைத்துரைமகள் பட்டம் தரித்து க்கிரீடதாரியாச்செங்கோல் ஏந்திச் சிங்காதனத்தில் வீற்றிருக்க,,,,,,,


essarci@yahoo.com

Series Navigation

எஸ்ஸார்சி

எஸ்ஸார்சி