சத்துள்ள பச்சடி (ராய்த்தா)

This entry is part [part not set] of 37 in the series 20030530_Issue

பி.என். விசாலாட்சி (விசாலம்மாள்)


I) தேவயான பொருள்கள்

1. முட்டைக்கோஸ்- (காபேஜ்); 1கப்-பொடியாக அரிந்தது

2. குடமிளகாய் (பெல் பெப்பர்)- 1 (சன்னமாக அரியவும்)

3.இiஞ்சித்துண்டு (ஜின்சர்- பொடிசாக அரியவும்-1/2 ‘ ‘

4. உப்பு- 1/2 தே. க (tsp)

5. கடுகு பச்சையாகபொடித்தது-1 தே. க (tsp)

6. வறுத்த வேர்க்கடலை பொடி-1 and1/2 தே. க (tsp)

7. பொடியாக அரிந்த பச்சைக்கொத்தமல்லி- 1 தே. க (tsp)

8. புதினா iலை- (6)

9. புளிக்காத தயிர்- (2 கப்)

10. தாளிக்க கடுகு, சீரகம் சேர்த்து கால் -(1/4) தே. க (tsp)

இ i. பொடிசாக நறுக்கிய பச்சைமிளகாய் (1-2)

ii. எண்ணை (2-3 tsp)

iii. உளுத்தம் பருப்பு (1/4 tsp)

II) செய்முறை

வாணலியில், எண்ணையை சூடாகி, தாளிதம் செயது, கோஸ், குடமிளைகாய் இவைகளை நன்கு கழுவிப்போடு வதக்கவும். நடுநடுவே சிறிது தண்ணீர் தெளித்துக் கொண்டு உப்பும் சேர்த்து நன்கு வதக்கியபின் கீழே எடுத்து வைக்கவும். iரண்டு நிமிடம், கடுகு-வேர்கடலைபொடி, தயிர் சேர்த்து, கலந்து பிரிஜில் வைக்கவும்.

சாபிடுமின், கொத்தமல்லி-புதினா சேர்க்கவும்.

விருப்பமானவர்கள் 1/2 தே. க (tsp) வெல்ல பொடி சேர்க்கவும்.

குறிப்பு: உப்பு-காரம் விருப்பம் போல், கூட்டியோ குறைவாகவோ உபயோகிக்கவும்.

tpsmani@hotmail.com

Series Navigation

பி.என். விசாலாட்சி

பி.என். விசாலாட்சி