கோழிக்கறி சாஷ்லிக்

This entry is part [part not set] of 26 in the series 20010910_Issue


தேவையான பொருட்கள்

1/2 கிலோ கோழிக்கறி (எலும்பு அற்றது)

12 சுடு கம்பிகள் (கறியைச் சுடுவதற்கு)

1 எலுமிச்சை

1/2 தேக்கரண்டி மிளகாய்த்தூள்

1 தேக்கரண்டி இஞ்சிப்பூண்டு விழுது

தேவையான அளவு உப்பு

2 பெரிய பச்சை மஞ்சள் குட மிளகாய்கள் (பெல் பெப்பர்)

2 பெரிய தக்காளிகள்

2 பெரிய வெங்காயங்கள்

செய்முறை

கோழிக்கறியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அவைகளை எலுமிச்சை, உப்பு, சிவப்பு மிளகாய்பொடி போன்றவற்றை தேவையான அளவு போட்டு அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

குடமிளகாய், வெங்காயம், தக்காளி போன்றவற்றை, கோழிக்கறி வெட்டிய நீளத்துக்கு வெட்டிக்கொள்ளவும்.

இப்போது, கம்பிகளில் வெங்காயம், தக்காளி, குடமிளகாய், கோழிக்கறி துண்டுகளை ஒன்றன் மீது ஒன்றாக செருகவும். (முன்னும் பின்னும் இடம் விட்டு)

இந்த கோழிக்கறி செருகிய கம்பிகளை நேரடியாக நெருப்பில் சுடுவதோ, அல்லது ஓவனுக்குள் போட்டு கிரில் செய்வதோ செய்யலாம்.

மென்மையாக நெருப்பில் தேவையான அளவு வெந்ததும், கம்பிகளோடு பறிமாறலாம், அல்லது, இவைகளை ஒரு தட்டில் போட்டும் பறிமாறலாம்.

***

Series Navigation

author

(இருவருக்கு தேவையான அளவு) <p> முதல் வகை

(இருவருக்கு தேவையான அளவு)

முதல் வகை

Similar Posts