கோமதி கிருஷ்ணன் கவிதைகள்

This entry is part [part not set] of 54 in the series 20040401_Issue

கோமதி கிருஷ்ணன்


***

மலர்ச்சி

கதிரவனொளியில் கமலம் மலர்வதை
காண எனக்கு கணக்கில்லா ஆசை ,
பட்டண்க்கரையில் பார்க்க க்கிடைக்கா காட்சிக்கு
பாவனைதான் வழி என்றிருந்தேன்.

அந்தக்குறையை தீர்த்திட வந்தாள்
அன்புப்பேத்தி அரவிந்தா
அதிகாலை பொழுதினில் கண்மலர்ந்து
சிரித்தாள் ஆயிரம் தாமரை மலர் மலர்ந்தது போலே.

***

பாப்பாவுக்கு பாட்டு

அழகு பாப்பா நீ ஆடு பாப்பா , இசையை ஈணமாய் பாடுபாப்பா ,
உல்லாசமாய் , ஊட்டமாய் நீ, இருக்க வேணும்
எல்லோரும் மெச்சும்படி பாடம் படிக்க வேணும்
ஏற்றம் காண என்றும் நீ உழைக்க வேணும் ,
ஒப்பில்லா ஆண்டவனை வணங்கவேணும் ,
ஓங்கி உயர்ந்து ஒழுக்கமாய் வாழ வேணம்
ஒளவ்வியமின்றி பெரியோரை மதிக்க வேணும்
ஐந்தறிவு பிராணிகளுக்கும் உதவ வேணும்
எங்கும் நிறைந்த தெய்வம் எல்லோரையும் காக்கும் தெய்வம்
என்றென்றும் உந்தனையும் காத்திடுவார் .

***
காலம்

காலம் என்பது குழந்தை பருவத்தில்
மெதுவாய் ஊர்ந்து நடக்கும்,
இளமை பருவத்திலோ
வேகமாய் ஓடி நகரும்
நடு வயதினிலோ ‘ஜெட் ‘ ஆய்
எழும்பி நொடியில் பறக்கும்
கிழ வயதினிலோ விழி சேராமல்
வேண்டாவெறுப்பாய்
படுத்து கிடக்கும் .துயரம் மிக்கது , அந்தக்காலம் .

***
viswanathan@rogers.com

Series Navigation