கொட்டு

This entry is part [part not set] of 54 in the series 20040722_Issue

மாலதி


—-
வன்மத்தில் வலை விரித்து
நன்றியில்லா முந்தானை நீட்டி
அருள் வேண்டினோம்.
பேரருளாளனை வேண்டினோம்.

பக்கச்சுவர்களில் ஏறி
உயரங்களில் மிதந்து
வேதாளம் போல் தொங்கி
அலைக்கழிந்து அழிந்து
வேண்டினோம்.

இறந்த பிள்ளைகளைக்
கொட்டாதா வானம் ?
எட்டிப்பிடிக்கிறோம்
ஏந்திக்கொள்கிறோம்.
தா! பேரருளாளனே!

மண்ணில் விதை வைத்து
வளரும் மரம் தந்து
மழையும் மேல் தந்து
மனிதம் வாழ்விப்பவன்
உனக்கு முடியாமல் போகாது.

சின்னச் சின்னக் கட்டைகளாய்
வெந்திறந்த பிள்ளைகளை
அதனதே உருவங்களில்
கொட்டு!
எட்டிப் பிடிக்கிறோம்
ஏந்திக்கொள்கிறோம்.

மாலதி
—-
malti74@yahoo.com

Series Navigation

மாலதி

மாலதி