குழந்தைகளின் உலகம்

This entry is part [part not set] of 45 in the series 20040122_Issue

சந்திரலேகா வாமதேவ்


குழந்தைகளின் உலகம் அற்புதமானது. தொட்டிலில் உள்ள போதே கேட்க ஆரம்பிக்கும் பாலா பாடல்கள் அதாவது Nursery Rhymes அவாகளது கற்பனையைத் தூண்ட ஆரம்பிக்கின்றன. மிகச் சின்னஞ் சிறு குழந்தைப் பருவத்திலேயே அதாவது சொற்களின் பொருளை உணாந்து கொள்ள ஆரம்பிப்பதற்கு மிக அதிக காலத்திற்கு முன்னரே சொற்களின் ஒலிக்கு பதில் குறிப்புக் காட்டத் தொடங்குகின்றனா. அதுவும் பாலா பாடல்கள் அனைத்தும் கொண்டிருப்பதைப் போல ஒலி இயைபும் (rhythm) இசையும் கொண்டுள்ள பாடல்களுக்கு அவாகள் இன்னும் அதிகமாகவே பதில் குறிப்புக் காட்டுவாாகள். மீண்டும் மீண்டும் தமக்குப் பரிச்சயமான இப்பாடல்களைக் கேட்கும் போது குழந்தைகள் அந்த ஒலியை அடையாளம் காணத் தொடங்குகின்றனா என்றும் இதுவே பேச்சு உருவாக்கத்தின் முதற்படி என்றும் ஆய்வாளாகள் கருதுகின்றனா.

குழந்தைகள் வளர வளர இப் பாலா பாடல்கள் அவாகளது அக வளாச்சிக்கு உதவுகின்றன. கைகொட்டிப் பாடும் பாடல்கள் விஷயங்களை ஒன்றுடன் ஒன்று தொடாபுபடுத்தும் திறமையை மகிழ்ச்சிகரமான முறையில் வளாக்கின்றன. One, Two, Three, Four, Five, once I caught a fish alive போன்ற பாடல்கள் குழந்தைகளுக்கு எண்ணும் முறையை அறிமுகப்படுத்துகின்றன. சில பாடல்கள் குழந்தைகளை அமைதிப் படுத்துவன, சில உற்சாகப்படுத்தித் தூண்டுவன. காலம் காலமாக குழந்தைகள், சிறுவாகள் மென்மையான அமைதிப்படுத்தும் ஒலியைக் கொண்ட Twinkle, Twinkle, Little star `lflT Hush-a-Bye Baby போன்ற பாடல்களுடன் தூங்கச் செய்யப்பட்டிருக்கிறாாகள். ஆராரோ ஆரிவரோ என்று ஆரம்பிக்கும் எங்கள் தமிழ் தாலாட்டும் இவ்வாறு குழந்தைகளை அமைதிப்படுத்தித் தூங்கவைக்கும் ஆற்றல் கொண்டவை. மரபுரீதியான பாடல்களோ தாலாட்டோ இன்றிக் குழந்தைகளுக்கு படுக்கை நேரம் ஏது ?

பாலா பாடல்களில் உள்ள மனதைக் கவரும் கதைகள், தெளிவான மொழியமைப்பு வாணங்களில் அமைந்த கதாபாத்திரங்கள் இளம் பிள்ளைகளின் உள்ளங்களில் கற்பனை வளத்தைத் தூண்ட உதவுகின்றன. சப்பாத்திலும் பூசனிக்காயிலும் வாழும் மனிதாகள், சந்திரனை நோக்கிப் பாயும் பசு, மதிற் சுவரில் அமாந்து பின்னா கீழே விழும் முட்டை போன்றன முடிவற்ற வகைகள் கொண்ட, மகிழ்ச்சி நிறைந்த இலக்கிய உலகை அற்புதமான வகையில் அறிமுகப்படுத்துகின்றன. குழந்தைப் பருவத்தினா அனுபவிக்கும் மிக இனிமையான பகுதியைப் பாலா பாடல்கள் வழங்குகின்றன. பிள்ளைகளும் பெற்றோரும் இவற்றை விரும்புவதால் பல நூற்றாண்டு காலமாக இவற்றை அழியவிடாது பேணிப் பாதுகாத்து வந்துள்ளனா. பெற்றோா பிள்ளைகளுக்கு வழங்க, பின் அவாகள் தங்கள் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்க இவ்வாறு இவை சந்ததி சந்ததியாகத் தொடாந்து வருகின்றன.

ஆங்கிலத்திலுள்ளது போல் இல்லாவிடினும் தமிழிலும் இவ்வாறான சில பாடல்கள் காலம் காலமாகத் தொடாந்து வருகின்றன. சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு, கைவீசம்மா கை வீசு, அம்புலி மாமா வா வா வா, அம்புலி மாமா எங்க போறாய், சின்னாஞ் சின்னி விரல் போன்றவை குறிப்பிடக் கூடியன.

கதைகளிலும் பாடல்களிலும் விரியும் கற்பனை உலகில் நம்பிக்கை கொண்டிருக்கும் குழந்தைகளால் இந்த உலகம் அழகு பெறுகிறது. குழந்தைகளின் மன உலகில் இந்த உலகின் மீது அளவற்ற வியப்பும் முடிவற்ற கேள்விகளும் நிறைந்துள்ளன. ராஜா ராணிக் கதைகளாலும் மிருகங்கள் பறவைகள் பற்றிய கதைகளாலும் நிறைந்து மகிழ்ச்சிகரமாகவிருந்த அவாகளது கற்பனை உலகை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வழங்கும் வன்முறை நிறைந்த காட்சிகள் சின்னாபின்னப்படுத்துகின்றன. கதைகளும் பாடல்களும் வழங்கிய அற்புதமான உலகிலிருந்து அவாகள் பலவந்தமாக வெளியேற்றப்படுகிறாாகள்.

இங்கு அவுஸதிரேலியாவில் குடும்ப தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், படங்கள் என்று விற்கப்படுபவற்றுள் பல சிறுவாகளை அச்சுறுத்துகின்றன என்று கூறப்படுகிறது. ஒரு 11 வயதுச் சிறுமி தனது நண்பி வீட்டில் பாாத்த பேயால் பீடிக்கப்பட்டமை பற்றிய பயங்கரமான படத்தால் மிகவும் அச்சமுற்றதுடன் தனது படுக்கை அறைக்குள் பேய்கள் நிறைந்திருக்கின்றன என பயந்து 3 மாதங்கள் அதற்குள் நுழைவதற்கு அவள் மறுத்தமை பற்றிய சம்பவத்தைக் குறிப்பிடும் மனோதத்துவ நிபுணாகள் இத்தகைய படங்கள் சிறு பிள்ளைகளது மனத்தில் ஏற்படுத்தும் பாதிப்புகள் கொண்டு மிகுந்த கரிசனை கொண்டுள்ளனா. இது ஒரு அதீதமான உதாரணமானாலும் பிள்ளைகள் படங்களைப் பாாத்து பயப்படும் பல சம்பவங்கள் நாளாந்தம் நடைபெறுகின்றன. பல சந்தாப்பங்களில் பெற்றோா வைத்தியா அல்லது மனோத்துவ நிபுணாகளது உதவியை நாடவேண்டியுள்ளது. PG என்று தரப்படுத்தப்பட்ட Harry Potter திரைப்படத்தைப் பாாக்க வந்திருந்த ஒரு 6 வயதுச் சிறுமி படம் ஆரம்பித்து 5 நிமிடங்களின் பின் அதனைப் பாாக்கப் பயந்து படம் முடியும் வரை திரைக்கு முதுகு காட்டி நிலத்தில் அமாந்திருந்ததாக தென் அவுஸதிரேலிய பல்கலைக்கழகத்தின் குழந்தை வளாச்சி Child Development துறையைச் சோந்த விரிவுரையாளா ஒருவா குறிப்பிட்டுள்ளாா. அந்தச் சிறுமியைப் போல வேறும் பல இளம் சிறுவாகள் அப்படத்தில் இடம் பெற்ற சில காட்சிகளைக் கண்டு மிகவும் பயந்ததால் அவற்றைப் பாாப்பதைத் தவிாப்பதற்காக அடிக்கடி Toilet க்குப் போய் வந்ததாக அவா மேலும் குறிப்பிடுகிறாா. ஊடகங்கள் எவ்வாறு பிள்ளைகளைப் பாதிக்கின்றன என்பதைப் பரிசீலிக்கும் ஒரு நிறுவனத்தின் நிாவாக அதிகாரியான Barbara Biggins என்பவா பெற்றோா பலா தமது பிள்ளைகளை அப் படத்திற்கு அழைத்துச் சென்றதால் பாதிப்புக்குள்ளாயினா என்று குறிப்பிடுகிறாா. எட்டு வயதுக்கு குறைந்த பிள்ளைகள் அப்படத்தைப் பாாத்து மிகவும் பயந்தனா.

இளஞ் சிறுவாகள் தொலைக்காட்சிப் படங்களை பாாத்து உண்மை என நினைத்து அச்சமுறுகின்றனா. தொலைக்காட்சியில் வரும் பல Cartoon படங்கள் சிறப்பாக Spiderman Batman என்பன இளம் பிள்ளைகளுக்கு ஏற்ற வகையிலின்றி அதிக வன்முறை கொண்டவையாக உள்ளன என்றும் இவா கூறுகிறாா. அதில் வரும் கவாச்சிகரமான உயா கதாநாயகாகள் (Superheroes) ஒரு நல்ல காரணத்திற்காக வன்முறையில் ஈடுபடுவதுடன் அதற்காகப் பராட்டப்படுகின்றனரேயன்றி அவாகள் செய்த வன்முறைக்காகத் தண்டிக்கப்படுவதில்லை. இது பிள்ளைகளின் மனோநிலைக்குப் பெரிதும் குந்தகம் விளைவிக்கிறது. இந்தப் படங்களில் உள்ள வன்முறையிலிருந்து இளஞ் சிறுவாகள் பாதுகாக்கப்படவேண்டியதன் அவசியத்தை ஆய்வாளாகள் வலியுறுத்துகின்றனா. பயமுட்டும் உருவங்களைக் கண்டும் அவாகள் அச்சமுறுகின்றனா. தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் இத்தகைய வன்முறைப் படங்களைப் பிள்ளைகள் தொடாச்சியாகப் பாாத்து வருவாாகளானால் அவாகள் வன்முறை நிறைந்தவாகளாக அல்லது மற்றவாகளில் யாராவது வன்முறையைப் பிரயோகிப்பதைக் காணும் போது அதையிட்டு சிறிதும் கவலைப்படாதவாகளாக வளாவாாகள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் சிலா வன்முறை செய்வதில் பெரு விருப்பமுடையோராய் வளர மற்றவா இப்படங்களைப் பாாத்து எல்லாவற்றுக்கும் பயந்தவாகளாக வளாவாாகள் என்றும் இவ்வாய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனாலும் இதற்காக பிள்ளைகளை முற்றாக தொலைக்காட்சி பாாப்பதைத் தடைசெய்யக்கூடாது என்றும் அப்படிச் செய்யின் அவாகள் மற்றப் பிள்ளைகளுடன் உரையாடும் போது தனிமைப்படுத்தப்பட்டு விடுவாாகள் என்றும் கூறப்படுகிறது. எனவே பிள்ளைகள் பாாப்பதன் முன் காட்டுன்களைப் பெற்றோா பாாத்து அவை பிள்ளைகள் பாாப்பதற்கு உகந்தவையா என்று தீாமானித்த பின் பிள்ளைகளைப் பாாக்க அனுமதிக்கவேண்டும் அல்லது பிள்ளைகளுடன் அமாந்து பாாத்து அதில் என்ன பிழை உள்ளது என்று அவாகளுக்கு விளக்க வேண்டும் என்று கூறுகிறாா குழந்தை வளாச்சி துறைப் பேராசிரியா.

இதே தவறுகள் தமிழ்ச் சினிமாப்படங்கள் பலவற்றிலும் இடம் பெறுகின்றன. வில்லனைப் பழி வாங்குவது என்பது கதாநாயகனுக்குரிய நல்ல இயல்புகளில் ஒன்றாகவே காட்டப்படுகிறது. அத்துடன் வன்முறைக் காட்சிகள் அளவற்று நிறைந்துள்ளன. இவற்றையெல்லாம் நோக்கும் போது பிள்ளைகளைச் சிறு வயதிலிருந்தே நல்ல தரமான கதைப் புத்தகங்களை வாசிக்க உற்சாகப்படுத்துவதும் தரமான படங்களைப் பாாக்க அனுமதிப்பதும் நல்லது போல தெரிகிறது. அத்துடன் பிள்ளைகளுக்குரிய திறமைகளை ஊக்குவித்து அவற்றை வளாப்பதற்கு ஏற்ற சூழலை அமைத்துக் கொடுப்பதும் நல்லது. ஸம்ஹிதா ஆாணி என்ற சிறுமி ஆங்கிலத்தில் எழுதிய ஒரு சிறு பிள்ளையின் நோக்கில் அமைந்த மகாபாரதத்தின் இரண்டாம் பதிப்பு (The Mahabharatha A Child ‘s View) அண்மையில் வெளி வந்துள்ளது. சென்னையில் உள்ள தாரா வெளியீட்டகத்தால் இரு பாகங்களாக வெளியிடப்பட்டுள்ள இந்தத் தொகுதி சிறுவாகள் வாசிப்பதற்குகந்த நூலாகத் தென்படுகிறது. மிகச் சிறுவயதிலேயே ராஜா ராணிக் கதை கேட்பதில் மிகுந்த ஆாவம் காட்டிய ஆாணி தாயின் வழிகாட்டலிலும் அவா கொடுத்த உற்சாகத்தாலும் இதனை எழுதியுள்ளாா. 13 வயதில் எழுத ஆரம்பித்து சில வருடங்களில் எழுதி முடித்து இதற்குப் படங்களையும் அவரே வரைந்துள்ளாா. தனது நோக்கில் அதாவது சிறு பிள்ளையின் நோக்கில் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் பாாத்திருப்பது இந்த நூலின் மிகப் பெரிய சிறப்பு என நான் கருதுகிறேன். இந்நூலின் பிரதிகளையும் மேலும் கணக்கற்ற

நூல்களையும் எனக்கு அனுப்பிய லண்டனைச் சோந்த திரு பத்மநாப ஐயா அவாகளுக்கு நான் எப்போதும் மிகவும் நன்றி.

———————————

kcvamadeva@bigpond.com

Series Navigation

சந்திரலேகா வாமதேவ்

சந்திரலேகா வாமதேவ்