குறும்பாக்கள் !
Published October 13, 2002 • By
இ.இசாக்
இ.இசாக்

கடும்வெயில்
மழையாய்
உழைப்பாளி வியர்வை!
*
கலைத்தால் தான்
இனிப்பு
தேன்கூடு.
*
குப்பைத்தொட்டி
கிளறு..கிளறு கிடைக்கும்
இரை தேடும் கோழி.
*
படகுப்பயணம்
தாய் தான்
கடல்!
*
பெண்மையின் நறுமணம்
விழுங்கிச் சிரிக்கும்
காகிதப் பூக்கள் !
*
thuvakku@yahoo.com