குறும்பாக்கள்

This entry is part [part not set] of 46 in the series 20031218_Issue

நெப்போலியன், சிங்கப்பூர்


கர்ப்பிணிப்பெண் போடுகின்றாள்
வாசலில் கோலம்
குழந்தைக் கிறுக்கலாய்.

வெள்ளி முகத்தில்
முத்தமிடும்
இரவில் மீன்.

ஏந்திய தட்டு
சாத்திய கதவு
நிலாச் சோறு.

நேரந் தெரியாமலேயே
ஓடிக் கொண்டிருக்கும்
கடிகாரம்.

மூச்சு வாங்கும்
நீச்சல் குளம்
விடுமுறை நாள்.

இறந்த மழை
வர்ணப் பல்லக்கு
வானவில்.

சத்தமாய்
காதல்
பெருவிரைவு ரயில்.

துணி உலர்த்தும்
குழாய்குச்சி
கொத்தும் மரங்கொத்தி.

வண்ணத்துப் பூச்சி
அடம் பிடிக்கும் குழந்தை
வேறுபக்கம் பறக்க மாட்டாயா.
—————————–
kavingarnepolian@yahoo.com.sg

Series Navigation

நெப்போலியன்

நெப்போலியன்

குறும்பாக்கள்

This entry is part [part not set] of 35 in the series 20021022_Issue

இ.இசாக்


*

சமாதானம்..சமாதானம்
காற்றில் பறந்தது
புறா மட்டுமல்ல.
*

மெல்லப்புரட்டுங்கள்
என்குழந்தை
கவிதை நூல்.
*

மெல்ல..மெல்ல
மீன்களே
கண்ணாடிச் சுவர்!
*

இந்நேரத்தில்
எதுநடந்தாலும் கவலையில்லை
நெடுந்தொடர் தமிழன்.
*

தீப்பெட்டியிலிருந்து
தீக்குச்சிகளுக்கு விடுதலை
பாவம்..பொன்வண்டு.
@

Series Navigation

இ.இசாக்

இ.இசாக்

குறும்பாக்கள்

This entry is part [part not set] of 25 in the series 20020902_Issue

இ.இசாக்


***
தனியே காட்டுவழிப்பயணம்
துணையாய்
குயில் பாட்டு

***
ஆறிப்போன தேனீர்
சுடச்சுட
செய்தி.

***

வற்றிய மடியோடு பசு
வைக்கோல் போரில்
கன்று.
***

என்னென்னவோ புலம்புகிறேன்
அமைதியாக வாயாடி
புகைப்படத்தில்.

***

அய்யோ சுழற்காற்று
என்ன ஆனதோ
வண்ணத்துப்பூச்சி
***

சுமக்கமுடியாமல் சுமக்கிறது
கொஞ்சம் உதவலாமா
எறும்பே
***

மிதிவண்டி பழுது
குழந்தைகளுக்கு மகிழ்ச்சி
‘மிட்டாய் வாங்கலாமே’

***

தொடர்வண்டி தாமதம்
நல்லது தான்
தண்டவளதில் புல்தேடும் ஆடுகள்

***

எச்சரிக்கை…எச்சரிக்கை
இரண்டு கால் விலங்கு
சாதி சங்க தலைவன்
***

thuvakku@yahoo.com

Series Navigation

இ.இசாக்

இ.இசாக்