குறிப்புகள் சில 26ஜுன் 2003 (மார்க் போஸ்ட்ர், இணையம்-ஹாரி பாட்டரும் அறிவியலும்)

This entry is part [part not set] of 42 in the series 20030626_Issue

k.ரவி ஸ்ரீநிவாஸ்


ஜுன் 26 அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்ட நாள்.இன்று மனித உரிமைகள் குறித்த விழிப்புணர்வு பரவலாக இருந்தாலும் பல அரசியல் கட்சிகள் அதை அரசியல் செய்யவே பயன்படுத்துகின்றன.தேசிய அளவிலும்,மாநிலஙகளிலும் மனித உரிமைக் கமிஷன்கள் இருந்தாலும், அவை செம்மமையாக செயல்பட இன்னும் செய்யப்பட வேண்டியது ஏராளம். ஆனால் இன்று அவசரநிலை அறிவிக்கப்பட்டுத்தான் சிவில் உரிமைகள் பறிக்கப்பட வேண்டும் என்ற நிலை இல்லை.அதை செய்ய சட்டங்கள் உள்ளன.அவசரநிலையால் பாதிக்கப்பட்ட/அதை எதிர்த்த கட்சிகள்தான் அத்தகைய சட்டங்களை ஆதரித்தவை.இத்தகைய நிலையில் மனித உரிமை இயக்கங்கள்/அமைப்புகள் பணி பெறும் முக்கியத்துவம் பெறுகிறது. குறிப்பிடத்தக்க அமைப்பான PUCL மின்னஞ்சல் மூலம் மனித உரிமைகள் குறித்த செய்திகளை கிட்டதட்ட தினசரி கிடைக்க வழிவகுத்துள்ளது. (www.pucl.org). இணையத்தில் உள்ள பல தளங்களில் மனித உரிமை குறித்த உடன்படிக்கைகள், தீர்ப்புகள் உட்பட பல தகவல்கள் உள்ளன.

தமிழில் மனித உரிமைகளுக்காக இணைய தளம் உள்ளதா ?

***

மார்க் போஸ்டர் – மார்க்சியம், பின் அமைப்பியல்வாதம்,பின் நவீனத்துவம், வரலாறு, ஊடகங்கள் குறித்து பல முக்கியமான நூல்களை எழுதியவர். இணையம் குறித்த இவர் எழுதியவை,பேட்டி ஆகியவை இரண்டு நூல்களாக வெளிவந்துள்ளன. மானுவேல் காஸ்டெல்ஸ் எழுதிய மூன்று நூல் வரிசையும் இணையம் குறித்த ஒரு முக்கியாமான ஆய்வு நூலாகும்.இணையமும், தன்னிலையும் (subject),identity பற்றி பலர் இப்போது மிக விரிவாக ஆராயத் துவங்கியுள்ளனர். இணையத்தின் பல பரிமாணங்களை பற்றிய விவாதங்கள் The Information Society, New Media & Society, information, Communication and Society போன்ற ஆய்வு சஞ்சிகைகளில் வெளிவருகின்றன. இத்துடன் தகவல் சமூகம் குறித்தும் விவாதம் உள்ளது. இணையம் ஒரு பொதுக்களமா(public sphere) என்பதும் முக்கியமான கேள்வி. கிறிஸ்டோபர் மே, கேவின் ராபின்ஸ், ப்ராங்க் வெப்ஸ்டர் ஆகியோர் இணையம் குறித்து எழுதியுள்ளவை முக்கியமானவை. மே தகவல் சமூகம் குறித்து ஒரு முக்கியமான நூலையும், வெப்ஸ்டர் தகவல் சமூகம் குறித்த கோட்பாடுகள், கோட்பாடளர்கள் குறித்தும் ஒரு முக்கியமான நூலையும் எழுதியுள்ளனர். தகவல் சமூகம் குறித்து ஆதித எதிர்பார்ப்பும்,அதீத அவநம்பிக்கையும் இருப்பதால் தகவல் சமூகம் என்ற கருத்தினை வரலாற்றுப் பிண்ணணியில் புரிந்துகொள்ள வேண்டும்.தகவல் சமூகத்தின் மைய/முக்கிய கருத்தியல் என்ன என்ற கேள்வி எழுகிறது.

மார்க் போஸ்டரின் நூல்கள் முக்கியமானவை.கோட்பாடு ரீதியாகவும்,இணையம் தன்னிலை, identity குறித்த அவர் முன்வைக்கும் பார்வைகள் முக்கியமானவை. பிராங்க்பர்ட் மார்க்க்சியர், பின் அமைப்பியல் வாதிகள்,ஹைடெக்கர் உட்பட பலரின் கருத்துக்களை போஸ்டர் விரிவாக விவாதிக்கிறார்.போஸ்டரின் கீழ்கண்ட நூல்கள் குறித்த என் மதிப்புரைக் கட்டுரை Information,Communication &Society 6:1 2003 ல் வெளியாகியுள்ளது.

The Information Subject (Amsterdam:G த் B Arts International,2001),pp.viii த் 180,ISBN 90-5701-242-1 (pbk).

What ’s the Matter with the Internet (Minneapolis:University of Minnesota Press,2001),pp.x த் 214,ISBN 0-8166-3835-7 (pbk)

இணையம் குறித்த கட்டுரைகள்,நூல் மதிப்புரைகளுக்கு ஒரு முக்கியமான இணையத்தளம்

www.cybersoc.com

***

ஹாரி பாட்டர் குறித்து டைம் முதல் The Chroncile of Higher Education வரை எழுதாத பத்திரிகைகள்/சஞ்சிகைகள் இல்லை என்றுள்ளது. பாட்டர் நூல்கள் படிக்கும் அனைவருக்கும் உதவும் வகையில் ஒரு நூல் வெளிவந்துள்ளது.

குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு அறிவியல் ரீதியாக, பொது அறிவினை வளர்க்கும் வகையில் பதில் சொல்ல இது உதவும்.வெறும் குழந்தைகள் நூல் என்று கருதாமல் அவர்கள் இந்த நூலின் மூலம் மந்திரம்-அறிவியல் இடையேயான தொடர்பையும், நம்பமுடியாது என்று நாம் கருதும், கதை கூறும் விஷயங்கள் குறித்து நவீன அறிவியல்/தொழில்நுட்ப செய்திகள், ஆய்வுகளையும் ஆசிரியர் விளக்குகிறார். இது ஒரு நல்ல முயற்சி. ஹாரி பாட்டர் வெகு ஜனக்கலாச்சாரத்தில் ஒரு அங்கமாக மாறியபின் அதை பொழுதுபோக்கு என்பதற்கு அப்பாலும் பயன்படுத்தும் இம்முயற்சி இன்று அறிவியலை பரவலாக எடுத்துச்செல்ல செய்யப்படும் சுவாரசியமான முயற்சிகளில் ஒன்றாக கருதலாம்.

ROGER HIGHFIELD – THE SCIENCE OF HARRY POTTER

-VIKING- 2002

ravisrinivas@rediffmail.com

Series Navigation