கவிதை வரையறுக்கிற மனம்
கே ஆர் மணி

1.
பிரபஞ்ச பயணம்
மேற்கொண்டிருந்த மனத்தை
ஒரு ஈஸலில்
கீழே இழுத்து வந்த்து ஈ.
தோலைப்பார்த்து சிரிக்கிறது.
*
2.
கட்டிலின் மீதான
என் படுக்கையை
மரத்தின் மீதான சாய்வாய்
நினைக்க மறுப்பது எது ?
*
3.
அவர்கள் சாப்பாட்டு மேசையில்
கவிதையை
பேசிக்கொண்டிருந்தார்கள்.
எனக்கு பிடித்திருந்த்து
சாப்பாடு