கவிக்கட்டு 26 – நாய் வால்

This entry is part [part not set] of 39 in the series 20040923_Issue

சத்தி சக்திதாசன்


அழகான பெண்தான்
அன்பான குணம் தான்
ஆனாலும்
அவன் கேட்பது
அவள் ஆஸ்தி ஏனென்றால்
அது நாய் வால்

பசியுடன் ஒரு உயிர்
பழத்தை எறியும் மறு உயிர்
பாதையிலே ஒரு உயிர்
பஞ்சணையில் ஒரு உயிர்
பிச்சை கேட்கும் ஒரு உயிர்
பணத்தை பூட்டும் ஒரு உயிர்
பழக்கம் மாறா வழக்கம் ஏனென்றால்
அது நாய் வால்

ஏழைக் குழந்தையைத் தூக்கும் மனிதன்
ஏறியை பின்பு ஏணியை மறப்பர்
ஏராளமாய் வாக்குறுதிகள்
ஏமாற்றுவது ஜெயித்த பின்னால்
ஏய்க்கும் கூட்டம் திருந்தாது ஏனென்றால்
அது நாய் வால்

நட்பின் பெருமை விளக்குவன் – பின்
நண்பனையே உலக்குவன்
நயவஞ்சகத்தின் உச்சியில்
நடுவன் கொடியை
நம்ப முடியாதவன் ஏனென்றால்
அது நாய் வால்

அன்னையும் தந்தையும் தெய்வம்
அரற்றுவர் அடிக்கடி
அடிக்கடி முறைப்பர் தம்
அமைதியை குலைப்பர் என்றே
அழகாய்ச் சொல்வார் அவர்கள்
அழுத்தமாய்க் காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு
அடித்தே துன்புறுத்துவர் தம்
அடங்காத்துயரை அடக்க மாட்டாமல்
அது நாய் வால்

இத்தனை நாய் வால்களுக்கும் மத்தியில்
இங்கே ஒருவன்
இழுத்தே ஒரு நாயின் வாலில்
இறுக்ககமாய் கல்லைக் கட்டினான்
இன்று தான் நாய்வாலை நிமிர்த்த
இதுதான் சமயம் என்று
இந்த நாய் அவனைப் பார்த்து
இளித்தது.

0000

மனதிலொரு ராகம்
சத்தி சக்திதாசன்

என் மனதில் விளைந்த ராகம்; அது இன்பநிலையின் கீதம்
ஏன் இன்னும் நெஞ்சில் ஏக்கம்; அது நேற்றோடு நீக்கம்

மையல் கொண்ட வேகம் ; விழி பார்த்த நொடியில் மாற்றம்
மைவிழியாள் பார்வையின் தேக்கம்; விழிகள் மறந்தன தூக்கம்

தமிழ் ஓசையின் வழக்கம் ; யாத்த கவிதையின் நோக்கம்
தேன்மொழியாள் வீசிய தோற்றம் ; மாலையொன்றின் ஆக்கம்

காதலெனும் காற்றின் திக்கம் ; இந்தப்பொழுதில் என் முற்றம்
கனவெனும் சோலை மார்க்கம் ; வண்ணப் பூக்கள் பூக்கும்

கம்பனின் சீதையொரு பக்கம் ; ரவிவர்மா ஓவியமொரு பக்கம்
கட்டழகி எந்தன் பக்கம் ; கடைவிழி கரைத்தது மறு பக்கம்

0000
sathnel.sakthithasan@bt.com

Series Navigation

சத்தி சக்திதாசன்

சத்தி சக்திதாசன்