This entry is in the series 20040715_Issue

பிச்சினிக்காடு இளங்கோ


எங்கள் சிறகை விரிக்க
கொஞ்சம் வானம் வேண்டும்

நாங்கள் காலகள் பதிக்க
கொஞ்சம் நிலம் வேண்டும்

சுவாசிப்பதற்காகக்
காற்றும் அப்படியே…

பின்
வயிற்றுக்காகவும்தான்
கழிக்கிறோம் ஆயுளை

இவற்றுக்கான
எங்கள் காலம்
பிச்சைப்பொருளாய்..!.

தவணைக்கடனாய்…!

எறியும் எலும்பாய்…!

ஆக்ஸிஜன் காற்றாய்…!

கழுகுக்குச் சொல்லுங்கள்

சிட்டுக்குருவிகள்
கூடுகட்டுதலைத்தான்
அண்டங்காக்கைகள்
அபாயமாக அலறுகின்றன

கூடுகட்டுவது
வன்முறயா ?
கூட்டைக்கலைப்பது
வன்முறயா ?

கழுகைக்கேளுங்கள்…
—-

Series Navigation